Cookies என்பது மிக குறைந்த தகவல்களை கொண்டிருக்கின்ற ஒரு Text File . நீங்கள் பயன்படுத்துகின்ற இண்டெர்நெட் பிரவுசரின் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் cookies சேமிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் பிரவுஸ் செய்திடும்போது சில தகவல்கள் சேமிக்கப்படும். அவை அனைத்துமே cookies வடிவில் தான் இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பைல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். இந்தப்பதிவில் Internet Cookies பற்றி தமிழில் தெரிந்துகொள்ளுங்கள் [Cookies Meaning In Tamil]
இண்டெர்நெட் குக்கீஸ் (Internet Cookies) அல்லது பிரவுசர் குக்கீஸ் (Browser Cookies) என்ற வார்த்தையினை கணிணி பயன்படுத்துகின்ற பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு . இண்டெர்நெட் குக்கீஸ் என்றால் என்ன ? எதற்காக இண்டெர்நெட் குக்கீஸ் பயன்படுத்தப்படுகின்றது? அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பதனை இப்போது பார்க்கலாம் .
What are Cookies? | Cookies என்றால் என்ன?
Cookies என்பது மிக குறைந்த தகவல்களை கொண்டிருக்கின்ற ஒரு Text File . நீங்கள் பயன்படுத்துகின்ற இண்டெர்நெட் பிரவுசரின் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் cookies சேமிக்கப்பட்டு இருக்கும் . பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பைல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் .
இணையதளத்தை உருவாக்குகிறவர்கள் தங்களது இணையதளத்தின் சில அம்சங்கள் சிறப்பாக வேலை செய்யவேண்டி Cookies ஐ பயன்படுத்துகிறார்கள் . பிரவுசரும் கூட நாம் இணையத்தில் தேடுகின்ற , படிக்கின்ற விசயங்களையும் Cookies ஆக சேமித்து வைக்கிறது .
இணையதளத்தை நீங்கள் திறக்கும்போது , இணையதளமானது உங்களது பிரவுசருக்கு தகவலை அனுப்பும் . பின்னர் உங்களது பிரவுசர் ஒரு Text file ஐ உருவாக்கும் .அதில் login தகவல்கள் , பிரவுஸ் செய்கின்ற தகவல்கள் போன்றவை சேமிக்கப்பட்டிருக்கலாம். பின்னர் அதே இணையதளத்திற்கு மீண்டும் நீங்கள் செல்லும்போது உங்களது பிரவுசர் அந்த இணையதளத்திற்க்கான Cookies இருக்கிறதா என பார்க்கும் . அப்படி இருந்தால் Cookies Text File இல் இருக்கும் தகவல்களை இணையதள சர்வருக்கு அனுப்பும் .
உதாரணத்திற்கு அந்த இணையதளத்தில் ஏற்கனவே நீங்கள் Login செய்துள்ளீர்கள் எனில் அந்த தகவல் Cookies இல் சேமிக்கப்பட்டு இருக்கும் . மீண்டும் அதே இணையதளத்தை திறக்கும்போது Login செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் Cookies தான் . உங்களால் Cookies ஐ நீக்கவும் முடியும் . அப்படி நீக்கிவிட்டால் நீங்களும் புதிய நபர் தான் . Cookies File இல்லையெனில் உங்களை புதிய நபராக நினைத்து இணையதளத்தை காண்பிக்கும்.
Advantages of Cookies
உதாரணம் 1 : நாம் ஒரு இணையதளத்தை பயன்படுத்தும் போது அதிலே நாம் செய்யக்கூடிய மாற்றங்களை நினைவில் கொண்டு நாம் மீண்டும் அதே இணையதளத்திற்கு வரும்போது அதே மாற்றங்களை தானாகவே இணையதளங்கள் வழங்கிடவே Cookies ஐ பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, பல மொழிகள் கொண்ட இணையதளத்திற்கு நீங்கள் சென்று முதலில் தமிழ் என்பதை தேர்வு செய்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் மீண்டும் அதே இணையதளத்திற்கு செல்லும் போது தமிழ் என்பது தேர்வு செய்யப்பட்டு இருக்கும். இதற்காக, குறிப்பிட்ட அந்த இணையதளம் உங்களுடைய User Id, Preferred language என்ன என்பதையெல்லாம் cookies இல் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். இப்படி, Personalized Experience ஐ வழங்க cookies மிகவும் பயன்படுகிறது.
உதாரணம் 2 : Digital Advertising துறையின் மிக முக்கிய அம்சமே Internet Cookies தான். Retargeting Advertising செய்வதற்கு Internet Cookies மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு, அமேசான் இணையத்தளத்திற்குள் சென்று டிவி ஒன்றினை வாங்கலாம் என பார்க்கிறீர்கள் . பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என அந்த இணையதளத்தை மூடிவிடுகிறீர்கள். இப்போது வேறு ஏதேனும் ஒரு இணையதளத்தை பார்க்க செல்லும்போது அந்த இணையதளத்தில் அமேசான் இணையதள டிவி விளம்பரங்களோ அல்லது அது சார்ந்த விளம்பரங்களோ தோன்றுவதனை பார்க்கலாம். இது எப்படி நடக்கிறது என்றால் Internet Cookies மூலமாகத்தான்.
Cookies ஐ பிரவுசரில் எங்கு பார்ப்பது? | Where to find Cookies in Browser?
Chrome browser :
User Cookies
Go to >> Settings
Click >> Advanced
Click >> Content Settings
Click >> Cookies
Click >> Allow sites to save and read cookie data (recommended) – நீங்கள் டிராக் செய்யப்படுவதை தடுக்கலாம்
Click >> See All cookies and site data அனைத்து Cookies யையும் பார்க்கலாம்..
Firefox browser :
Website Cookies
Go to >> Tools
Click >> Options
Click >> Privacy
Click >> Use custom settings for history [Drop Down Menu]
Click >> Show Cookies – அனைத்து Cookies யையும் பார்க்கலாம்.
முடிவுரை
இந்தப்பதிவில், நீங்கள் Internet Cookies பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். Internet Cookies என்றால் என்ன என்பது துவங்கி, அவை எப்படி கணினியில் சேமிக்கப்பட்டு இருக்கும், அதன் பயன்பாடு என்ன என்பது வரைக்கும் நீங்கள் தெரிந்துகொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்கள் அதனை கமெண்டில் பதிவிடலாம்.
TECH TAMILAN