மலையேறும் வீரர்கள் தங்களது முதுகில் தேவையான பொருள்களை சுமந்து செல்வதைப்போல இப்போதுள்ள மொபைல் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பெரும்பாலானவை பேட்டரியுடனே இருக்கிறது. வெளியில் செல்கின்ற நேரங்களில் திடீரென பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் சார்ஜ் செய்வதற்கான கடைகளை தேடி அலைய வேண்டும்.
நினைத்துப்பாருங்கள், பேட்டரி இல்லாமல் ஒரு மொபைல் போன் இயங்கினால் எப்படி இருக்கும்? ஒரு லேப்டாப் பேட்டரி இல்லாமல் இயங்கினால் எப்படி இருக்கும்? இதனை ஏதோ ஹாலிவுட் திரைப்பட காட்சி என நினைத்துவிட வேண்டாம் நண்பர்களே. MIT ( Massachusetts Institute of Technology ) அறிவியலாளர்கள் அதற்கான முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதன்படி WIFI மூலமாக சார்ஜ் செய்யலாம்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
கண்டுபிடிப்பு
MIT அறிவியலார்கள் முதன் முதலாக WIFI சிக்னலை உள்வாங்கி அதனை மின்சார சக்தியாக மாற்றி மின்னனு சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான கருவியினை வடிவமைத்துள்ளனர். AC மின்காந்த அலைகளை உறிஞ்சி அதனை DC மின்சாரமாக மாற்றக்கூடிய கருவியை “ரெக்டனா (rectennas) ” என அழைப்பார்கள். தற்போது விஞ்ஞானிகள் புதுவித ரெக்டனாவை வடிவமைத்துள்ளனர்.
இந்த புதுவித ஆன்டெனாக்கள், WIFI உடன் இணைந்த மின்காந்த அலைகளை AC வடிவில் ஈர்க்கின்றன. அப்படி ஈர்க்கப்படும் மின்காந்த அலைகள் சில அணுக்களின் அளவேயுள்ள செமி கண்டக்டர் வழியாக செலுத்தப்படும் போது DC ஆக மாற்றப்படுகிறது. இது எலெக்ட்ரானிக் கருவிகளை சார்ஜ் செய்ய போதுமான மின்சார சக்தியை வழங்குகிறது.
தற்போது சோதனை முயற்சியாக மிக குறைந்த தொலைவுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டாலும், அதிக தொலைவில் இருந்து WIFI மூலமாக சார்ஜ் செய்வதற்கான சோதனைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
என்ன மாற்றங்கள் நிகழும்?
மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்களில் பேட்டரி பயன்படுத்த தேவையில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் அவசர காலங்களில் மட்டும் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். பேட்டரி தேவையில்லை எனும்போது விலை குறைவாகவும் விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
வெளியூர் சென்றால் சார்ஜ் போட கடைகளை தேடி அலைய வேண்டாம். இப்போது செல்போன் டவர்கள் இருப்பதைப்போல சார்ஜ் செய்வதற்கான WiFi இருக்கும் இடங்களுக்கு சென்றாலே போதுமானது.
ஆப்ரேசன் செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களில் பேட்டரி பயன்படுத்தும் போது அதிலிருக்கும் லித்தியம் கசிந்து நோயாளிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திட வாய்ப்பு உண்டு. ஆனால் WIFI மூலமாக சார்ஜ் செய்யலாம் என்பதனால் பேட்டரி பயன்படுத்த அவசியமில்லை. ஆபத்தும் இல்லை.
மாற்றங்கள் ஒவ்வொரு தருணத்திலும் நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கின்றன. அந்தவகையில் WIFI மூலமாக சார்ஜ் செய்யும் இந்த வசதி என்பது மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமையும்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
TECH TAMILAN
இதையும் படிங்க,