உங்க IP Address என்ன? How to find your IP address?

ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி IP Address உண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது கணினியின் IP Address ஐ தெரிந்துவைத்திருப்பதும் அவசியமான ஒன்று. IP Address ஐ வைத்து தான் சைபர் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிகின்றனர். இந்தப்பதிவில், உங்களது IP Address ஐ எப்படி தெரிந்துகொள்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.


கடந்த பதிவில் IP address என்றால் என்ன என்பது குறித்து பார்த்திருந்தோம். இந்த பதிவில் உங்களுடைய கணினியின் IP address ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதனை பார்க்கலாம். உங்களுடைய கணிணினியில் நெட்ஒர்க் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு IP address ஐ அறிந்துகொள்வது அவசியம். IP address இல் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Local IP address மற்றொன்று External / Public IP address.

How to find Local IP address?

உங்களது கணினியின் Local IP address ஐ கண்டறிய Control panel வழியாக சென்றும் கண்டறியலாம். ஆனால் எந்தவகை கணினியாக (விண்டோஸ் OS) இருந்தாலும் மிக எளிமையாக கமண்ட் பிராம்ட் (Command Prompt) வழியாக Local IP address ஐ கண்டறிய முடியும்.

> கிளிக் “Start menu”

> Type “cmd”

> Type “ipconfig”

> Press “Enter”

> IPV4 க்கு அருகிலே இருப்பதுதான் உங்கள் கணிணியின் Local IP.

How to find Public IP Address?

Google search shows your Public IP

உங்கள் கணிணியின் Public IP Address ஐ கண்டறிய கூகுளில் My IP என search செய்யுங்கள் . முதலில் வருகின்ற ரிசல்ட் தான் public ip.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN