நமக்கான கணினியை வாங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறோம். அப்படி, நாம் அதிகமாக செலவு செய்து பல வருடங்களுக்கு பயன்படுத்தப்போகும் கணினியை வாங்கும் போது நாம் சரியான கணினியை தேர்வு செய்து வாங்க வேண்டியது அவசியம். உங்களுக்கான கணினியை தேர்வு செய்வது எப்படி என்பதில் சந்தேகம் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு உதவும்.
எதற்காக வாங்க போகிறீர்கள்?
கணினி மட்டுமல்ல எந்த பொருளை வாங்குவதற்கு முன்னரும் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது. வாங்கி என்ன செய்ய போகிறோம்,
பள்ளிகளில் படிக்கும் தங்களது பிள்ளைகளுக்காக வாங்கலாம்
தங்களது அலுவலக பணிகளை செய்வதற்காக வாங்கலாம்
வீடியோ கேம் விளையாடுவதற்கு வாங்கலாம்
வீடியோ எடிட் செய்வது போன்ற டிசைனிங் வேலைகளை செய்வதற்காக வாங்கலாம்.
முதல் இரண்டு வேலைகளை செய்வதற்கு சாதாரண கணினியே போதுமானது. வீடியோ கேம், வீடியோ எடிட் செய்வது போன்ற டிசைனிங் வேலைகளை செய்ய வேண்டும் எனில் அதிக செயல்திறன் கொண்ட கணினி தேவை.
Desktop or Laptop
ஒரே இடத்தில் இருந்துதான் பணிகளை செய்ய போகிறீர்கள் என்றால் Desktop கணினியை வாங்கலாம். வீட்டிலும் வேலை செய்வேன், வெளியிலும் எடுத்துச்செல்ல வேண்டும் என நினைத்தால் Laptopஐ வாங்க முன்னுரிமை கொடுக்கலாம். வீட்டில் தான் வைத்துக்கொள்ள போகிறேன் என்றால் விலை குறைவாக அதே சமயம் அதிக நாட்கள் நன்றாக இயங்கக்கூடிய Desktop கணினியை வாங்குவதே சிறந்தது.
Budget
உங்களுடைய பட்ஜெட் என்ன என்பதனை தீர்மானித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பட்ஜெட் குறைவானதாக இருந்தால் Desktop கணினிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கிடலாம். விலை ஒரு பொருட்டல்ல என நீங்கள் நினைத்தால் லேப்டாப் வாங்கலாம். ஆனால் லேப்டாப் வாங்கும் அதே பணத்தில் அதனை விட அதிக செயல்திறன் கொண்ட Desktop கணினியை வாங்கிவிடலாம் என்பதனை நினைவிலே கொள்ளுங்கள்.
RAM, Storage, Screen , Processor
உங்களுக்கு தேவை என்னவென்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு இந்த நான்கையும் தெரிவு செய்திடுங்கள்.
> RAM
> Storage
> Screen
> Processor
அதிக file களை சேமித்து வைக்கத்தான் கணினி வாங்க போகிறேன் என்றால் Storage க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
Game அல்லது Editing போன்ற பெரிய சாப்ட்வேர்களை பயன்படுத்தப்போகிறேன் என்றால் RAM மற்றும் Processor க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
OS : Apple Mac or Windows
இயங்குதளம் (OS) ஐ தெரிவு செய்திடும் போது உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அல்லது இனி இதில் தான் வேலை செய்யப்போகிறோம் என தெரிந்து கொண்டால் அதனை தெரிவு செய்திடுங்கள். Apple Mac ஆனது அதிக விலையுள்ள OS, அதேசமயம் அதிக செயல்திறனை கொண்டது. [What is OS (Operating System)?]
ஆனால் அதிக சாப்ட்வேர்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிடும் விதமே உருவாக்கப்பட்டு இருக்கும். ஆகையால் அதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
முடிவுரை
இந்தப்பதிவில் கணினி வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்த்தோம். நீங்கள் புதிதாக கணினி வாங்கும்போது இந்த விசயங்கள் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன். மேலும் உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கமெண்டில் பதிவிடலாம்.
கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here