Friday, September 20, 2024
HomeTech ArticlesChatBot "Meena" - இதுதான் உலகின் சிறந்த சாட்பாட் - கூகுள் திட்டவட்டம்

ChatBot “Meena” – இதுதான் உலகின் சிறந்த சாட்பாட் – கூகுள் திட்டவட்டம்

chat bot explained in tamil

Chatbot Meena

ChatBot என்பது மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்க்கான கம்ப்யூட்டர் புரோகிராம். இதில் AI (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் “மீனா”என பெயரிட்ட ChatBot தான் உலகிலேயே சிறந்த ChatBot என கூறியிருக்கிறது.

ChatBot என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள். ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் அசிஸ்டன்ட் பயன்படுத்துவார்கள், அதேபோல ஆப்பிள் பயனாளர்கள் சிரி (Siri) யை பயன்படுத்துவார்கள், அமேசான் ஸ்பீக்கரை பயன்படுத்துகிறவர்கள் அலெக்ஸா (Alexa) வை பயன்படுத்துவார்கள். சிரி அல்லது அலெக்ஸா போன்றவற்றை பயன்படுத்திய அனுபவம் உங்களுக்கு இருக்குமேயானால் அந்த உரையாடல் உங்களுக்கு நிறைவை தந்திருக்காது. உச்சரிப்பு அல்லது வார்த்தை பிரயோகம் அல்லது தவறான பதில் போன்ற ஏதாவது ஒரு குறைபாடு இருந்திருக்கும். ஆனால் கூகுள் தங்களுடைய ChatBot “மீனா” தான் தற்போதைய நிலையில் உலகிலேயே மிகச்சிறந்த ChatBot என அறிவித்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மனிதன் போலவே உரையாடும் திறனுடன் ChatBot “Meena” வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் பேசுவதைப்போலவே உரையாடுவதற்கு ஏதுவாக இந்த நியூரல் நெட்ஒர்க்கில் 2.6 பில்லியன் அளவுருக்கள் [parameter] உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பில்லியன் வார்த்தைகள் – 341ஜிபி text data உள்ளீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சமூக வலைதளங்களில் பேசப்படும் உரையாடல்களும் அடங்கும். அதேபோல இதில் ஒரு என்கோடர் பிளாக் [Encoder Block] பயனாளர் தரும் தகவலை புரிந்துகொள்ளவும் 13 டிகோடர் பிளாக் [Decoder Block] பதிலை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ChatBot "Meena" - இதுதான் உலகின் சிறந்த சாட்பாட்

மனிதர்கள் பேசுவதைப்போலவே உரையாடுவதற்கு ஏதுவாக இந்த நியூரல் நெட்ஒர்க்கில் 2.6 பில்லியன் அளவுருக்கள் [parameter] உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பில்லியன் வார்த்தைகள் – 341ஜிபி text data உள்ளீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சமூக வலைதளங்களில் பேசப்படும் உரையாடல்களும் அடங்கும். அதேபோல இதில் ஒரு என்கோடர் பிளாக் [Encoder Block] பயனாளர் தரும் தகவலை புரிந்துகொள்ளவும் 13 டிகோடர் பிளாக் [Decoder Block] பதிலை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், வெறும் கேள்வி பதில் போல உரையாடல் நிகழாமல் ஒரு நண்பரிடம் நிகழ்த்தப்படும் உரையாடல்போல இருக்கும் விதமாக நகைச்சுவையான பதில்களை தரும் விதமாகவும் இந்த ChatBot “Meena” வடிவமைக்கப்பட்டுள்ளது.

Click Here! Get Updates On WhatsApp

Sridaran
Baskaran

Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular