Chat GPT என்கிற வார்த்தை இப்போது இன்டர்நெட்டில் அதிகமாக புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கியக்காரணம், Chat GPT ஐ பயன்படுத்தி பணம் ஈட்ட முடியும், பல வேலைகளை சுலபமாக செய்திட முடியும், பல கேள்விகளுக்கு எளிமையாக பதில்களை பெற முடியும் என பல காரணங்களை அடுக்கலாம். ஒரு பக்கம் Chat GPT பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று சொன்னாலும் மறு பக்கம் Chat GPT ஐ சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். இந்தப்பதிவில் Chat GPT வரமா? சாபமா? என்பதை விரிவாக அலசுவோம்.
Chat GPT என்றால் என்ன? [What is Chat GPT in Tamil]
Chat GPT என்பது ஒரு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட். நாம் கேட்கும் கேள்விகளை புரிந்துகொண்டு தன்னிடம் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து சரியான வார்த்தைகளை பயன்படுத்தி பதில் தரும் விதத்தில் தான் Chat GPT வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் முன்னர் உரையாடிய தகவல்களையும் நினைவில் வைத்துக்கொண்டு நமக்கு புரிகிற விதத்தில் பதில் தருவதனால் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
உதாரணத்திற்கு Chat GPT பின்வரும் விதங்களில் பயன்படும்,
Chat GPT யிடம் நீங்கள் கேள்விகளை கேட்டு பதில்களை பெற முடியும்.
Chat GPT யிடம் ஒரு புரோகிராமில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்திட சொல்லலாம்.
Chat GPT யிடம் ஒரு கட்டுரையை எழுத சொல்லலாம்.
Chat GPT யிடம் ஆலோசனை கேட்கலாம்.
Chat GPT யிடம் பாடங்களில் உள்ள சந்தேகங்களை கேட்கலாம்.
Chat GPT யிடம் Code எழுத சொல்லலாம்.
ChatGPT – 4 இனி இவர்களுக்கு வேலை இருக்காது
Chat GPT யின் நன்மைகள் [Pros of Chat GPT]
மனிதர்கள் கேட்கும் கேள்விகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் தருவதற்கு தான் Chat GPT உருவாக்கப்பட்டது.
1. நீங்கள் என்ன மாதிரியான கேள்விகள் கேட்டாலும் உடனுக்குடன் பதில்களை பெற முடியும்.
2. பொதுவாக, Google Search இல் கேள்விகளை கேட்கும் போது நமக்கான பதில்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறதோ அவற்றை வரிசைப்படுத்தி கூகுள் நமக்கு காட்டும். நாம் அந்த இணையதளத்திற்குள் சென்று படித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், Chat GPT நேரடியாக பதிலை அளிக்கும்.
3. மற்ற AI புரோகிராம்களை காட்டிலும் மிக வேகமாகவும் சரியாகவும் பதில்களை Chat GPT யிடம் பெற முடியும்.
4. Chat GPT மனிதர்களோடு உரையாடும் விதத்தில் தான் வடிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மனிதர்களைப்போலவே பதில் தரும். இதனால் பயன்படுத்துவது எளிது.
5. சரியான விதத்தில் ஒரு நபரோ அல்லது ஒரு நிறுவனமோ Chat GPT ஐ பயன்படுத்தினால் மிகச்சிறந்த அளவில் மேம்பாடு அடைய முடியும்.
6. உங்களுக்கு எக்ஸலில் Macro தெரியவில்லை எனில் நீங்கள் Chat GPT யிடம் Macro எழுத சொன்னால் எழுதித்தரும். ஆகவே, உங்களுக்கு குறைந்த அளவிலான திறன் இருந்தால் கூட நீங்கள் உதவியை பெற்று சிறப்பாக செயல்பட முடியும்.
7. Chat GPT யை இலவசமாகவும் பயன்படுத்த முடியும்.
Chat GPT யின் குறைபாடுகள் [Cons of Chat GPT]
Chat GPT யில் பல நன்மைகள் இருக்கின்றன. அதைப்போலவே, Chat GPT யில் பல குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.
1. Chat GPT யிடம் 2021 க்கு பிறகான தகவல்கள் இருக்காது. ஆகவே, நிகழ்கால தகவல்கள் குறித்தான கேள்விகளை அதனிடம் கேட்க முடியாது.
2. Chat GPT மனிதர்களின் கற்றுக்கொள்ளும் திறனை அதிக அளவில் பாதிக்கும்.
3. கடினமாக உழைப்பவர்கள் அதற்கான பலனை அடைய முடியாமல் போகலாம். உதாரணத்திற்கு, ஒரு புரோகிராமை உருவாக்க ஒருவர் ஒரு ஆண்டுகளாக கற்றுக்கொண்டு இருக்கிறார் எனில் Chat GPT யை பயன்படுத்தி சில நிமிடங்களில் அதே புரோகிராமை எழுதிவிட முடியும்.
4. Chat GPT கொடுக்கும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது தன்னிடம் இருக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து தான் பதில் தருகிறது. ஆகவே, அதிலே தவறுகளும் இருக்க வாய்ப்பு உண்டு.
5. Chat GPT குறித்து பலரும் தெரிவிக்கும் கருத்து என்னவெனில், மனிதர்கள் தானாக சிந்திக்காமல் Chat GPT யை சார்ந்தே இருக்குமாறு மனிதர்களை இது தள்ளிவிடும் என கருத்து தெரிவிக்கிறார்கள்.
Chat GPT வரமா? சாபமா?
தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது. எந்தவொரு தொழில்நுட்பம் புதிதாக வரும்போதும் அதனால் நன்மைகளும் தீமைகளும் இருக்கவே செய்யும். அதனை நம்மால் தடுக்க முடியாது. அப்படித்தான் Chat GPT யிலும் பல நன்மைகளும் இருக்கின்றன, குறைபாடுகளும் இருக்கின்றன. Chat GPT போன்ற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போது நாம் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அது என்னவெனில், அவை மனிதர்கள் போல புதிதாக சிந்திக்கும் வல்லமை கொண்டவை அல்ல என்பது தான். அவற்றால் ஒருபோதும் மனிதர்களை ஈடு செய்திடவே முடியாது என்பது தான். ஆகவே, உங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள Chat GPT யை பயன்படுத்துங்கள், மாறாக, Chat GPT யை சார்ந்தே இருந்திடாதீர்கள்.
இதையும் படியுங்கள்…..
Chat GPT என்றால் என்ன ? பணம் ஈட்டுவது எப்படி? | ChatGPT in Tamil