Chat Bot
chat bot என்பது மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்க்கான கம்ப்யூட்டர் புரோகிராம். இதில் AI (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Click Here! Get Updates On WhatsApp
நாம் ஏற்கனவே internet bot என்றால் என்ன என்பதை பார்த்திருந்தோம். அதன்படி internet bot என்பது மனிதர்களுக்கு பதிலாக மிகவும் எளிய , அதே சமயம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கு மனிதர்களால் உருவாக்கப்பட்டஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். அதன்படி, சாட் (chat) செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற பாட் (bot) புரோகிராமை chat bot என அழைக்கிறோம். chat bot என்பது மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்க்கான கம்ப்யூட்டர் புரோகிராம். இதில் AI (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது சாட் பாட் செயலிகள் இகாமர்ஸ் (ecommerce) , வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நாம் உதவிக்காக பேசிடும் போது எதிரில் நம்மோடு பேசுபவர் மனிதர் அல்ல, Chat bot தான் என்பதனை எளிமையாக புரிந்துகொள்ள முடியும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதன் பதில் செயற்கையானதாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்கும்.
Chatbot எப்படி இயங்குகிறது?
Chatbot தொழில்நுட்பத்தின் அடிப்படை natural language processing or NLP. தற்போது பயன்பாட்டில் இருக்கின்ற கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Apple’s SIRI), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கார்டனா (Microsoft Cortana) ஆகியவற்றிலும் NLP தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை வாய்ஸ் ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும். ஆனால் Chatbot அப்ளிகேசன் அனைத்தும் text ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும்.
நிறுவனத்திற்கு ஏற்றார் போல chatbot இல் மாற்றங்கள் இருக்கும். அதன்படி பயனாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுகின்ற விதமாகவும், கேள்விகள் புரியாத பட்சத்தில் “இதை பற்றி கேட்கிறீர்களா?” என கேட்கும் விதமாகவும் algorithm எழுதப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு, redbus நிறுவனத்தின் WhatsApp chat இல் ticket என type செய்து அனுப்பினால், உங்களுடைய அண்மைய டிக்கெட் பிரதி உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் டிக்கெட் எதையும் புக் செய்யாமல் இருப்பின் உங்களது மொபைல் எண்ணில் எந்த டிக்கெட் ம் பதிவாகவில்லை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். உங்களது கேள்வியினை புரிந்துகொள்ள முடியாவிட்டால் சில ஆப்சன்களை வழங்கும். அதனை பயன்படுத்தி உங்களுக்கான தகவல்களை பெற முடியும்.
Chatbot பயன்படுத்தப்படும் முக்கிய துறைகள்
> Customer Support
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழலில் Chatbot பயன்படுத்தப்படும்.
> Data gathering
தானாக செயல்பட்டு வாடிக்கையாளரிடம் இருந்து தகவலை பெறுவதற்கு Chatbot பயன்படுகிறது.
> Healthcare
ஆபத்தில்லாத நோய்களுக்கு மருந்து மற்றும் ஆலோசனைகளை வழங்கிட Chatbot பயன்படுகிறது.
> Personalised coach
கொடுக்கப்படும் தகவல்களுக்கு ஏற்றவாறு பயனாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிட Chatbot பயன்படுகிறது.
> Sales
வாடிக்கையாளர்களுக்கு ஆபர்கள் உள்ளிட்டவற்றினை வழங்கிட Chatbot பயன்படுகிறது.
> Personalised News
பயன்படுத்துபவர்கள் எந்த தலைப்புகளில் செய்திகளை படிக்க விரும்புகிறார்கள் என கேட்டு அதற்கேற்ற செய்திகளை வழங்குவது.
> Banking
வங்கி கணக்கு விவரங்களை குறுஞ்செய்தி மூலமாக அறிவதற்கும், அண்மைய திட்டங்கள் குறித்த தகவலை அறிவதற்கும் அணுகிடும் நபர்களுக்கு தகவலை அளித்திட Chatbot பயன்படுகிறது.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.