Trojan Virus Alert
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் CamScanner ஆப்பில் ட்ரோஜன் வைரஸ் பாதிப்பு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூகுள் இந்த ஆப்பை Play Store இல் இருந்து நீக்கி இருக்கிறது.
Click Here! Get Updates On WhatsApp
கிட்டத்தட்ட 100 மில்லியன் முறை டவுன்லோட் செய்யப்பட்ட CamScanner ஆப்பில் ட்ரோஜன் மால்வேர் இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் Play Store இல் இருந்து இந்த ஆப்பை நீக்கி இருக்கிறது. டாக்குமெண்டை ஸ்கேன் செய்வதற்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிற ஒரு ஆப் தான் CamScanner . இதனை பயனாளர்கள் டவுன்லோட் செய்யலாம் அல்லது சில நிறுவனங்களின் போன்களில் வரும்போதே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.
kaspersky நிறுவனத்தில் இருக்கும் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் CamScanner ஆப்பில் Trogen-Dropper.AndroidOS.Necro.n எனும் மோடுலே ஆனது CamScanner ஆப்பின் அட்வெர்டைசிங் லைபிரேரியில் இருப்பதனை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஆப்பில் தான் இந்தகைய Module இருப்பதாகவும் IOS இல் இருக்கின்ற ஆப்பில் இந்த பிரச்சனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு பின்னர் கூகுள் நிறுவனம் Play Store இல் இருந்து இந்த ஆப்பை நீக்கி இருக்கிறது. ஆனாலும் பல்வேறு மொபைல்களில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளர்கள் வேண்டுமென்றால் இந்த ஆப்பை தங்களது மொபைல் போன்களில் இருந்து நீக்கிக்கொள்ளலாம்.
IOS ஆனது மிகவும் தீவிரமாக ஆப்களை தர ஆய்வு செய்கிறது. ஆகையினால் தான் இந்த பாதிப்பு அதில் ஏற்படவில்லை. தர ஆய்வு ஆண்ட்ராய்டு இல் போதுமானதாக இல்லாமையால் தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் பாதுகாப்பு குறைபாடு கொண்ட பல ஆப்களை தனது play store இல் இருந்து நீக்கியது. ஆனாலும் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. இனியாவது play store இல் இருக்கும் ஆப்கள் பாதுகாப்பானவையாக இருப்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்திட வேண்டும்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
[…] காஸ்பர்ஸ்கை [Kaspersky], ட்ரோஜன் வகை ஷாப்பர் […]