Monetize செய்வது எப்படி? பிளாக் மூலமாக சம்பாதிப்பது எப்படி? How to monetize your blog?

 


Monetize என்பது உங்களது இணையதளத்தின் மூலமாக சம்பாதிப்பது.

 

ஒவ்வொருவரும் இணையதளம் அல்லது blog ஆரம்பிப்பது ஏதோ ஒரு வகையில் சம்பாதிப்பதற்காகத்தான் இருக்கும். அப்படி நீங்கள் சம்பாதிக்க வேண்டும் எனில் உங்களது இணையதளத்தில் விளம்பரங்களை இடம்பெற செய்ய வேண்டும்.

 

By monetizing a blog with publisher you can earn money
By monetizing a blog with publisher you can earn money

 

அப்படி செய்தபின்பு எத்தனை முறை உங்களது இணையதளத்தில் விளம்பரம் காட்டப்பட்டதோ (Ad Impression) அதற்கேற்றவாறு, எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டதோ (Ad Click) அதற்கேற்றவாறோ உங்களது பணம் வரும்.

 

பொதுவாக இணையதள விளம்பர தொழில்நுட்பத்தில் இரண்டு பெயர்கள் அடிக்கடி வரும். ஒன்று Advertiser மற்றொன்று Publisher. இதில் Advertiser என்பவர் தான் விளம்பரங்களை கொடுப்பவர். உதாரணத்திற்கு Toyota கார் நிறுவனம் ஒரு Advertiser. Publisher என்பவர் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட இணையத்தளத்தினை கொண்டிருப்பவர். இங்கே techtamilan.in ஒரு publisher. Google, Yahoo போன்றவர்கள் அனைவரும் Publisher.

 

ஒன்றினை மட்டும் நினைவிலே கொண்டிருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஆம் இணையதளத்தின் மூலமாக சம்பாதிக்க அடிப்படை தேவையே visitors (வாடிக்கையாளர்கள்) தான் அவர்களை எவ்வாறு தொடர்ச்சியாக நமது இணையதளத்திற்கு வரவழைக்க போகிறோம்? எவ்வாறு தொடர்ச்சியாக அவர்கள் விரும்பக்கூடிய தகவல்களை கொடுக்க போகிறோம் என்பதை தெரிந்து வைத்திருப்பது தான்.

 

இணையத்தின் மூலமாக பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றினையோ பலவற்றியோ பயன்படுத்தி சம்பாதிக்க முடியும்

 

Google AdSense

Affiliate Marketing

Course and/or Services

Paid Reviews and/or Banner-ads

eBooks


TECH TAMILAN