Site icon Tech Tamilan

Barsha Water Pump : No electricity needed for this hydro powered water pump

 


பார்சா பம்ப் [Barsha Water Pump] என்பது மின்சாரம் அல்லது மனித ஆற்றல் ஏதுமின்றி புதிதாக வடிமைக்கப்பட்டுள்ள நீர் இறைப்பான் . ஆறு போன்ற நீர் ஓடக்கூடிய இடத்தில் பார்சா பம்ப் வைக்கும் போது அதிலிருந்து பெறப்படும் அழுத்தத்தின் உதவியினால் நீர் உறிஞ்சப்பட்டு உயரமான இடங்களுக்கு பாய்ச்சலாம் .
விவசாயத்துறையில் மிகப்பெரிய பயனுள்ள சாதனமாக இந்த பம்ப் இருக்கும் என கருதப்படுகிறது . இது எப்படி இயங்குகிறது என பார்ப்போமா?

 


How Barsha Pump works?

 


பார்சா என்பதற்கு நேபாள மொழியில் மழை என்று பொருள் . படத்தில் காட்டப்பட்டுள்ளது தான் பார்சா பம்ப் . இதனை நான்கு பேரால் கூட தூக்கி செல்ல முடியும் . அதன் அடிப்பாகம் நிரந்தரமானது , அதன் மேல் சுழலக்கூடிய ஒரு அமைப்பு இருக்கின்றது . தண்ணீர் செல்லும் திசைக்கு எதிர் திசையில் இதனை வைக்கும் போது தண்ணீர், சுழலும் அமைப்பினை சுழற்றும் . அப்போது ஏற்படுகின்ற அழுத்தத்தினால் சுழலும் அமைப்பினுள் அமைக்கப்பட்டு இருக்கின்ற ஸ்பைரல் போன்ற அமைப்பினுள் அழுத்தம் ஏற்படும் .

 

இந்த அழுத்தம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதற்கான போதுமான ஆற்றலை தருகின்றது . இந்த ஆற்றல் உறிஞ்சப்படும் நீரினை 20 மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதாக இருக்கின்றது .

 


 

Why Barsha Pump is needed now?

 

Barsha pump kept on river side and it pumps water by hydro power



மக்கள் தொகை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு இருக்கின்றது . இன்னும் இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பினால் உணவிற்கான தேவை அதிகரிக்கும் , அதேசமயம் அதிகரிக்கும் குடியிருப்புகளினால் விவசாயம் செய்வதற்கான இடப்பற்றாக்குறையும் ஏற்படும் . அப்போது கிடைக்கின்ற இடங்களில் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் . அப்போது அதிகபடியான தேவையாக நீரும் அதனை எடுப்பதற்கான மின்சாரமும் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .

 

அப்படிப்பட்ட சூழலில் மின்சாரம் தேவைப்படாத நீர் இறைக்கும் பம்புகள் அத்தியாவசியமானதாக இருக்கும் . அப்படிப்பட்ட ஒன்றுதான் பார்சா பம்ப்.

 


How Barsha Pump helped people over the past one year?

 

ஓராண்டிற்கும் முன்பாகவே பார்சா பம்ப் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது . அதனை பயன்படுத்திய விவசாயிகள் , தினந்தோரும் வாளிகளின் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து ஊற்றுவதற்காகவே 6 மணி நேரம் கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும் . இப்போது எங்களது நேரம் மிச்சமாகியிருக்கிறது , உழைப்பு மிச்சமாகியிருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்கள் .

 


TECH TAMILAN 

Exit mobile version