Sunday, October 6, 2024
HomeTech Articlesபுளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா? கேன்சர் உள்ளிட்ட நோயை உருவாக்குமா?

புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா? கேன்சர் உள்ளிட்ட நோயை உருவாக்குமா?

புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா

Bluetooth Headset

செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக மனிதர்களின் உடலுக்கு கெடுதல் ஏற்படுமா என்பதற்கான ஆராய்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் உறுதிப்படுத்தும் விதமான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கவில்லை

தற்போது பெரும்பாலானவர்களால் புளூடூத் ஹெட்செட் அல்லது புளூடூத் வாட்ச் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அவற்றை பயன்படுத்துகிறவர்களுக்கு நிச்சயமாக எழக்கூடிய கேள்விகளில் முதன்மையானது “புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா?” என்பதுதான். இந்தக்கட்டுரையை எழுதுவதற்காக இணையத்தில் சில தகவல்களை தேடிப்படிக்கும் போது இரண்டு விதமான தகவல்களை பெற முடிந்தது. அதில் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் “புளூடூத் ஹெட்செட் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்துவதனால் பாதிப்பில்லை” என்றும் உடல்நலன் சார்ந்து செயல்படுகிறவர்கள் “ஆமாம் புளூடூத் ஹெட்செட் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தும்போது உடலுக்கு பாதிப்பு உருவாகிறது” எனவும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

புளூடூத் என்றால் என்ன?

கணினி, மொபைல், ஹெட்செட் போன்ற போன்ற எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் ஒயர் இல்லாமல் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் தொழில்நுட்பம் தான் புளூடூத். 1994 ஆம் ஆண்டு புளூடூத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. புளூடூத் தொழில்நுட்பம் 33 அடி அல்லது 10 மீட்டருக்குள் செயல்படும். மேலும் புளூடூத் ஆனது 2.4GHz அலைவரிசையில் செயல்படுகிறது.

புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா?

புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானதா

இந்தக்கேள்விக்கு நேரடி பதில் என்னவென்றால் “பாதுகாப்பானது” என்பதுதான். இதுவரைக்கும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளில் எதுவும் புளூடூத் தொழில்நுட்பம் மனிதர்களின் உடலுக்கோ மூளைக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதாக தகவல் இல்லை. இதனால் கூட நாம் புளூடூத் ஹெட்செட் பாதுகாப்பானது என சொல்லிக்கொள்ளலாம். மேலும் புளூடூத் கருவிகள் மிகவும் குறைவான தொலைவில் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள பயன்படுகின்றன. இந்தக்காரணத்தினால் மிக மிக குறைவான கதிர்வீச்சே இதில் பயன்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்கு குறைவான கதிர்வீச்சு என்றால் செல்போனில் இருக்கின்ற கதிர்வீச்சை விட 1000 மடங்கு குறைவான கதிர்வீச்சே புளூடூத் கருவிகளில் இருந்து வெளிப்படும்.

 

செல்போன், புளூடூத் கருவிகள் போன்றவை அனைத்துமே ஒயர் மூலமாக இணைக்கப்பட்டிருக்காது ஆகவே அவை அனைத்துமே மின்காந்த அலைகளை பயன்படுத்தியே தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. குறிப்பாக இந்த கதிர்வீச்சு செல்போன்களில் மிக அதிகமாக இருக்கும், இதற்கான காரணம் செல்போன் கோபுரங்கள் சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அவற்றோடு தொடர்பில் இருக்க அதிக அளவிலான கதிர்வீச்சை பயன்படுத்த வேண்டி இருக்கும். பல சமயங்களில் செல்போன் கதிர்வீச்சால் மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது உண்டு. ஆனால் இன்னமும் மனிதர்களின் உடலில் நிச்சயமான நோய் பாதிப்பை செல்போன் உள்ளிட்ட கருவிகள் ஏற்படுத்தும் என்பதற்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே தான் செல்போன்களை விடவும் 1000 மடங்கு குறைவான கதிர்வீச்சை வெளியிடக்கூடிய புளூடூத் ஹெட்செட் மனிதர்களின் உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார்கள் வல்லுநர்கள்.

மேலும் செல்போனில் நேரடியாக பேசுவதைக்காட்டிலும் புளூடூத் ஹெட்செட் போன்ற கருவிகளை பயன்படுத்தி பேசும்போது தலைப்பகுதியை அடைகின்ற கதிர்வீச்சை குறைக்கவும் முடியும். அப்படி நாம் யோசித்துப்பார்த்தால் புளூடூத் ஹெட்செட் ஒரு நன்மை பயக்கும் விசயமாகவே பார்க்கப்படும்.

கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?

ஒவ்வொருவருடைய உடலின் அமைப்பும் வெவ்வேறானவை, நமது உடல் எவ்வளவு கதிர்வீச்சை உள்வாங்குகிறது என்பதை பொறுத்துதான் நமக்கு அது பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும். மொபைல், புளூடூத் ஹெட்செட் போன்ற ஒயர் இணைப்பு இன்றி கதிர்வீச்சின் மூலமாக செயல்படும் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுதல் நல்லது. கூடுதலாக, அவற்றை இரவு உறங்கும் போது அருகில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது, உபயோகப்படுத்தாமல் இருக்கும் போது அணைத்து வைப்பது போன்ற எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தினால் நம்மை நாமே எளிமையாக காப்பாற்றிக்கொள்ள முடியும்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular