Tuesday, July 2, 2024
HomeTech ArticlesAquarium Heaters - எப்படி வேலை செய்யும்? எப்படி வாங்க வேண்டும்?

Aquarium Heaters – எப்படி வேலை செய்யும்? எப்படி வாங்க வேண்டும்?

நீங்கள் வீடுகளில் அலுவலகங்களில் அழகான மீன்களை மீன் தொட்டிகளில் வளர்க்க முயலும் போது அவை இறந்து போகலாம். அதற்கான காரணங்கள் சில இருக்கலாம். அதிலே முக்கியமான காரணம் தான் “நீரின் வெப்பநிலை”. சில குறிப்பிட்ட வகை மீன்களுக்கு நீரின் வெப்பநிலை சராசரியான அளவில் தான் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஹீட்டர் (Aquarium Heaters) பயன்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தப்பதிவில் அக்குவாரியம் ஹீட்டர் எப்படி வேலை செய்கிறது? அது ஏன் அவசியம்? எப்படி வேலை செய்கிறது? எங்கே குறைந்த விலையில் வாங்கலாம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Aquarium Heaters என்றால் என்ன?

Aquarium Heaters என்பவை மீன் தொட்டிகளில் குறிப்பிட்ட அளவு வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள உதவும் ஒரு மின்சார சாதனம். ஒரு கண்ணாடி குடுவைக்குள் இருக்கும் இந்த ஹீட்டரை நீங்கள் மீன் தொட்டிக்குள் பாதி அளவிலோ அல்லது முழு அளவிலோ மூழ்குமாறு வைக்க வேண்டும். பெரும்பான்மையான ஹீட்டர்கள் முழுமையாக மூழ்குமாறு தான் விற்பனைக்கு வருகிறது. 

நீங்கள் எவ்வளவு வெப்பநிலையில் நீர் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வெப்பநிலையை வைத்து ON செய்துவிட்டால் போதும் நீரின் வெப்பநிலை குறையும் போதும் தானாகவே ON ஆகி வெப்பநிலையை அதிகரிக்கும் ஹீட்டர்கள் இப்போது விற்பனைக்கு இருக்கின்றன.

Aquarium Heaters எப்போது தேவைப்படும்?

பெரும்பான்மையானவர்கள் சிறிய அளவிலான அழகான மீன்களைத்தான் வளர்க்க நினைப்போம். அப்படி நீங்கள் வளர்க்க முயற்சி செய்தால் அடிக்கடி மீன்கள் இறந்து போனால் நீங்கள் அதற்கான காரணத்தை அறிய வேண்டியது அவசியம். 

அடிக்கடி மீன்கள் இறந்துபோனால் நீங்கள் மீன் தொட்டியில் இருக்கும் நீரை தொட்டுப்பாருங்கள். இரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ அதிக குளிராக இருந்தால் நீரின் குறைவான வெப்பநிலையும் அதற்கான காரணமாக இருக்கலாம். 

நீரின் குறைவான வெப்பநிலை மீன் இறப்பதற்கு காரணம் என தெரிந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு Aquarium Heaters.

Aquarium Heaters எப்படி வேலை செய்யும்?

Aquarium Heaters மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஒரு கருவி. மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி தண்ணீரின் வெப்பநிலையை அதிகப்படுத்த ஹீட்டர் பயன்படுகிறது. 

இப்போது விற்பனைக்கு வரக்கூடிய அக்குவரியம் ஹீட்டர்களில் எவ்வளவு வெப்பநிலையை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதனை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 28 டிகிரி வெப்பநிலையை வைத்துகொள்ள வேண்டும் என்றால் அதை செட் செய்து ON செய்துவிடுங்கள். 

நீரின் வெப்பநிலை 28 டிகிரியை குறையும் போது இப்போது உள்ள ஆட்டோமேட்டிக் ஹீட்டர்கள் தானாக ON ஆகிவிடும். ஹீட்டர் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும். ஹீட்டர் வெப்பம் ஆகும் போது அது அருகே இருக்கும் நீரையும் சூடாக்கும். இதனால் மீன் தொட்டியில் இருக்கும் நீரின் வெப்பநிலை உயரும். 28 டிகிரி அளவை எட்டியவுடன் ஹீட்டர் தானாகவே OFF ஆகிவிடும்.

Aquarium Heaters வாங்கும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

Aquarium Heaters பல வகைகளில் கிடைக்கிறது. ஆகவே, உங்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள். நீங்கள் அக்குவாரியம் ஹீட்டர் வாங்க நினைத்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்களை இங்கே தருகிறேன்.

எத்தனை Watt தேவைப்படும்?

குறைந்தபட்சம் 100 watt முதலே நல்ல அக்குவாரியம் ஹீட்டர்கள் இருக்கின்றன. ஆனால், நீங்கள் Aquarium Heaters வாங்கும் முன்பாக கடைக்காரரிடம் உங்களது மீன் தொட்டியின் அளவை சொல்லி அதற்கு எத்தனை Watt ஹீட்டர் தேவைப்படும் என கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் குறைவான watt கொண்ட ஹீட்டர் வாங்கினால் நீர் சூடாக அதிக நேரம் ஆகலாம். 

நாங்கள் எங்களது மீன் தொட்டிக்கு 100 watt ஹீட்டர் முதலில் வாங்கினோம். சூடாக அதிக நேரம் ஆனது. பிறகு தான் 200 watt ஹீட்டர் வாங்கி பொருத்தினோம். இப்போது விரைவாக சூடாகிறது.

Checkout Here

முழுவதுமாக மூழ்க வேண்டும்

இரண்டு வகையான ஹீட்டர்கள் உள்ளன. பாதி அளவு தண்ணீரில் மூழ்கும் ஹீட்டர்கள் மற்றும் முழு அளவும் தண்ணீரில் மூழ்கும் ஹீட்டர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் முழுவதுமாக மூழ்கும் ஹீட்டர்களை தான் பரிந்துரை செய்கிறார்கள். அதுவே அதிக நாட்கள் உழைக்கும் திறன் வாய்ந்தவையாக உள்ளனவாம்.

வெப்பநிலையை மாற்றும் வசதி

சிலவகை ஹீட்டர்களில் உங்களால் வெப்பநிலையை செட் செய்திட முடியாது. அதுபோன்ற ஹீட்டர்கள் எப்போதும் ON நிலையிலேயே இருக்கும். ஆகவே, வெப்பநிலையை மாற்றிடும் வசதி கொண்ட ஹீட்டர்களை வாங்குங்கள்.

நீடித்து உழைக்க வேண்டும்

நீங்கள் வாங்கும் ஹீட்டர் எவ்வளவு மாதங்கள் வேலை செய்யும் என கேளுங்கள். நீங்கள் விலை குறைவான ஹீட்டர் வாங்கினால் அது விரைவில் பழுதாக அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே, சற்று விலை அதிகமாக இருந்தாலும் நல்லதாக பார்த்து வாங்குங்கள். குறைந்தது ரூபாய் 300 முதலே நல்ல ஹீட்டர் கிடைக்கும். இந்தப்பதிவில் சில ஹீட்டர் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பார்த்து வாங்குங்கள்.

Aquarium Heater ஐ எப்படி பயன்படுத்த வேண்டும்?

நீங்கள் Aquarium Heater ஐ வாங்கியவுடன் அதிலே இருக்கும் manual ஐ படித்துவிட்டு பிறகு பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

தண்ணீர் அளவு முக்கியம்

முழுவதுமாக மூழ்கும் ஹீட்டர் வாங்கினால் ஹீட்டர் எப்போதும் தண்ணீருக்குள் மூழ்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல், ஹீட்டர் சூடாகி வெடித்து உடைந்துவிடும். நீங்கள் தண்ணீர் தொட்டியை கழுவும் போதும் ஹீட்டரை ஆஃப் செய்துவிட மறவாதீர்கள்.

குளிரான இடத்தில் மீன் தொட்டியை வைக்க வேண்டாம்

நீங்கள் ஹீட்டர் பயன்படுத்துவதே வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் ஹீட்டர் பயன்படுத்தும் போது குளிரான இடத்தில் மீன் தொட்டி இருந்தால் எப்போதும் ஹீட்டர் வேலை செய்துகொண்டு இருக்கும் நிலை வரும். ஆகவே குளிரான இடத்தில் மீன் தொட்டியை வைக்க வேண்டாம்.

ஆஃப் செய்திட மறக்க வேண்டாம்

நீங்கள் மீன் தொட்டியை கழுவும் போதோ அல்லது மீன் தொட்டிக்குள் கையை விடும் போதோ ஆப் செய்துவிடுங்கள். இல்லையேல், மின்சார கசிவு இருந்தால் உங்களுக்கு மின்சாரம் தாக்க வாய்ப்புகள் உண்டு.

மீன்களை ஆசையாக வளர்க்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒரு கருவி Aquarium Heater. இதனால் மீன்கள் மகிழ்ச்சியாக நீண்ட நாட்கள் உயிரோடு வாழும். ஆகவே, நல்ல Aquarium Heater ஐ வாங்கி பயன்படுத்துங்கள். மிகக்குறைந்த விலைக்கே நல்ல ஹீட்டர் பல கிடைக்கின்றன.

Checkout Here :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular