2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட தவறுக்காக அப்போதைய அமெரிக்க பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25 அமெரிக்க டாலர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டது ஆப்பிள். தற்போது அந்த நடவெடிக்கை துவங்கி இருக்கிறது
2017 ஆம் ஆண்டு ஆப்பிள் போன்களில் பழைய பேட்டரி பயன்படுத்தப்பட்டதன் காரணமாக அதன் செயல்திறனை [CPU Speed] ஆப்பிள் நிறுவனம் குறைத்ததை ஒப்புக்கொண்டது. இதனை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர் பணத்தை பயனாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க ஒத்துக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்.
தற்போது பயனாளர்களுக்கு பணத்தை கொடுக்கும் அந்த நடவடிக்கைள் துவங்கியுள்ள நிலையில் பின்வரும் ஆப்பிள் ஐபோன்களை வைத்திருக்கும் பயனாளர்களுக்கு 25 அமெரிக்க டாலரை கொடுக்கும் பணி துவங்கியிருக்கின்றது .
இதற்கான தகுதி,
1. அமெரிக்க குடிமக்களாக இருக்க வேண்டும்
2. iPhone 6, iPhone 6 Plus, iPhone 6s, iPhone 6s Plus இந்த ஐபோன்கள் வைத்திருக்க வேண்டும்
3.ஆப்பிள் இயங்குதளமான iOS 10.21.1 இல் இயங்கும் iPhone SE 1st-generation அல்லது டிசம்பர் 21,2017 க்கு முன்னர் வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத்தகுதி வாய்ந்த குடிமக்கள் இந்த இணையதளத்தில் https://www.smartphoneperformancesettlement.com/ பதிவு செய்து முறையிடலாம்.
இது அமெரிக்க குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதனால் இந்தியா உட்பட வேறு நாடுகளில் இருப்பவர்களால் இந்தப்பணத்தை பெற முறையிட முடியாது
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.