Thursday, November 21, 2024
HomeTech Articlesடிஆர்பி ரேட்டிங் என்றால் என்ன? TRP Rating எப்படி கணக்கிடப்படுகிறது?

டிஆர்பி ரேட்டிங் என்றால் என்ன? TRP Rating எப்படி கணக்கிடப்படுகிறது?


ஒரு தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பது டிஆர்பி ரேட்டிங். இதனை வைத்துதான் முன்னனி தொலைக்காட்சி எது என்பதனை விளம்பரதாரர்களால் அறிந்துகொள்ள முடியும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். இதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. இந்த டிஆர்பி ரேட்டிங் எப்படி கணக்கிடப்படுகிறது? டிஆர்பி ரேட்டிங் 100 % துல்லியமானதா? இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.


Video :

 

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

டிஆர்பி ரேட்டிங் என்றால் என்ன?

 

TRP என்பதன் ஆங்கில விளக்கம் Television Rating Point (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்). அதாவது 30 நாட்களில் பார்வையாளர்களின் விவரங்களை தொடுத்து சேனல்களையும் நிகழ்ச்சிகளையும் எந்த தொலைக்காட்சியை மக்கள் அதிகநேரம் விரும்பி பார்க்கிறார்கள், எந்த நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து பார்க்கிறார்கள், வரவேற்பு இருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள இந்த TRP பயன்படுகிறது.


 

TRP எதற்க்காக கணக்கிடப்படுகிறது?

 

ஒரு தொலைக்காட்சிக்கு வருமானம் முழுவதுமே விளம்பரங்களில் இருந்துதான் வரும். விளம்பரதாரர்கள் எந்த தொலைக்காட்சிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு விளம்பரங்களை வழங்கினால் அதிக மக்களிடம் சென்றடையும் என்பதை பார்த்துதானே வழங்குவார்கள். அவர்களின் அத முடிவுகளில் மிக முக்கிய இடம் TRP க்கு உண்டு.

அதற்காகத்தான் பல சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு TRP இல் முன்னிலை பெற பல மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.


 

TRP ரேட்டிங் யாரால் கணக்கிடப்படுகிறது?

 

இந்தியாவை பொறுத்தவரை INTAM (Indian Television Audience Measurement) என்கிற ஏஜென்சி TRP யை கணக்கிடுகிறது.

இந்த ஏஜென்சியை தவிர DART (Doordarshan Audience Ratings) தனியாக TRP யை கணக்கிடுகிறது.


 

TRP ரேட்டிங் எப்படி கணக்கிடப்படுகிறது?

 

இயல்பான முறை

 

இந்த முறைப்படி INTAM ஏஜென்சி people meters என்னும் கருவியை வீடுகளில் பொறுத்துவார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பொருத்தி விடாமல் பலதரப்பட்ட மக்களின் தகவல்களை பெற இடம், வயது, வருமானம், திருமணம், பாலினம் என பலவாறாக பிரித்து வெவ்வேறு வீடுகளில் அந்த கருவியை பொறுத்துவார்கள்.

அந்த கருவியானது நீங்கள் எந்த அலைவரிசையை பார்க்கிறீர்களோ அந்த frequency யை நேரத்தோடு சேமித்து வைத்துக்கொள்ளும். பிறகு ஒரு மாதம் கழித்து வீடுகளில் இருந்து பெறப்படும் அந்த கருவியில் இருந்து சேகரிக்கப்பட்ட
Frequency களை சேனல்களின் பெயர்களாக மாற்றி, எந்த சேனல் அதிகமாக பார்க்கப்டுகின்றது , எந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது என்பது கண்டறியப்படுகிறது. அந்த தகவல்களே TRP ரேட்டிங்காக வெளியிடப்படுகிறது.

இந்த முறைப்படி 5500 வீடுகளில் மட்டுமே இதற்கான கருவிகள் பொருத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான நபர்களின் விருப்பத்தை 5500 பேரிடம் மட்டுமே நடத்தப்படும் ஆய்வில் சரியாக அறிந்துகொள்வது நிச்சயம் நடக்காத ஒன்று.

இதில் உடன்பாடு இல்லாமல் போனதால் தான் தூர்தர்சன் DART (Doordarshan Audience Ratings) தனியாக ரேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இதில் வாராவாரம் மக்களிடம் நேரடியாக மேற்கொள்ளும் கருத்து கணிப்பின் மூலமாக தனது ரேட்டிங் முடிவுகளை வெளியிடுகிறது.

ஆரம்ப காலங்களில் அதிகப்படியான மக்கள் கேபிள் (analog) மூலமாகவே தொலைக்காட்சிகளை பார்த்து வந்தனர். இப்போதும் குறிப்பிட்ட மக்கள் கேபிள் (analog) முறையிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதனை அறிய people meters என்னும் கருவியை பயன்படுத்தியே ஆகவேண்டிய நிலை இருந்துவந்தது. இதன் விலை மிக அதிகமாகவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவேண்டி இருப்பதால் அதிகமான வீடுகளில் பொறுத்த முடியாத சூழ்நிலையும் இருந்துவந்தது.

முக்கிய பிரச்சனையாக இருந்தது என்னவெனில் கேபிள் மூலமாக சேனல்களை ஒளிபரப்பும்போது அவர்கள் அலைவரிசையை மாற்றிவிடுவதால் பல நேரங்களில் சரியான முடிவினை பெற முடியாமல் போகிறது.


 

நவீன முறையில் TRP ரேட்டிங் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

 

தற்போது மக்கள் கேபிள் முறையிலிருந்து செட் ஆப் பாக்ஸ் அல்லது டிஷ் முறைக்கு மக்கள் மாறிவிட்டார்கள். இதனால் தரவுகளின் நம்பிக்கையை கொஞ்சம் அதிகரிக்க INTAM Picture Monitoring Technique ஐ பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இதிலும் பழைய முறையில் நிறுவப்பட்டதை போலவே People Meter கருவியானது வீடுகளில் பொருத்தப்படும். அந்த கருவிகள் உங்கள் தொலைக்காட்சி பெட்டியின் திரையின் குறிப்பிட்ட பகுதியினை பதிந்து கொண்டே வரும்.

TRP Rating
TRP Rating

INTAM தொலைக்காட்சி சேனல்களின் சிக்னலுடன் தங்களுடைய சிக்னலையும் குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அனுப்பப்படும் சிக்னல் உங்கள் தொலைக்காட்சி திரையில் தோன்றும். மிகச்சிறிய அளவில், மிக குறைந்த நேரத்தில் தோன்றுவதால் உங்களால் எளிதாக காண முடியாது.

உங்கள் வீட்டில் எப்படி உங்கள் திரையின் ஒரு பகுதியை சேமிக்கிறார்களோ அதைப்போலவே INTAM நிறுவனம் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலின் ஒளிபரப்பாகும் வீடீயோவை தங்களது இடத்தில் சேமித்து வைப்பார்கள்.

வீட்டில் இருந்து பெறப்படும் வீடியோவும், INTAM நிறுவனத்தில் சேமிக்கப்படும் வீடியோவும் ஒப்பிடப்பட்டு எந்த நேரத்தில் மக்கள் என்ன சேனலை, நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்ற தகவலை கண்டுபிடிப்பார்கள்.


 

TRP ரேட்டிங் துல்லியமானதா?

 

தற்போதுள்ள முறைப்படி வழங்கப்படும் TRP ரேட்டிங் துல்லியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை.

கோடிக்கணக்கான மக்களின் விருப்பத்தை சில ஆயிரம் பேரின் விருப்பங்களில் கண்டுபிடிப்பது துல்லியமானதாக இருக்க வாய்ப்பே இல்லை. வேறு வழியும் இல்லை என்பதே உண்மை.

People Meter கருவி பொருத்தப்பட்டுள்ள வீடுகளை சில சேனலை சேர்ந்தவர்கள் கண்டறிந்து தங்களது சேனலை பார்க்க பணம் கொடுப்பதும் நடந்தேறி வருகிறது. இதனாலும் இதன் மீதான நம்பிக்கை குறைத்தே மதிப்பிடப்படுகிறது.

இவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் துல்லியமான TRP யை அறிய தற்போதுள்ள சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை என்பதே உண்மை.


TECH TAMILAN


இதையும் படிங்க,

10+ whatsapp features in tamil
இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் ...
what is agi in tamil
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
gold investment tips in tamil (1)
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
SolarSquare-Team-1709904299 (1)
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
what is Refurbished Laptop (1)
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
small business
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
how to start dropshipping business in india (1)
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
how to get naturals salon franchise in tamil
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
how to get kfc franchise in tamil
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular