Affiliate Marketing Meaning In Tamil என பலரும் இணையத்தில் சர்ச் செய்து வருகிறார்கள். நீங்களும் அப்படி தேடுகிறவராக இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு Affiliate Marketing குறித்து பல்வேறு தகவல்களை வழங்கும்.
அண்மைய காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக Affiliate Marketing ஒரு பிரபலமாக அறியப்படுகிற பணம் சம்பாதிக்கும் முறையாக பார்க்கப்படுகிறது. அதிக ரிஸ்க் இல்லாத, எளிதாக பணம் சம்பாதிக்கும் முறையால் இது பரவலாக பேசப்படுகிறது. நீங்கள் இதிலே இருக்கும் யுக்திகள், டூல்கள், பிளாட்பார்ம்கள் போன்றவற்றை அறிந்துகொண்டால் எளிதாக இதிலே பணம் சம்பாதிக்கலாம். இந்தப்பதிவில், முதல் முறையாக Affiliate Marketing குறித்து அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படையான விசயங்களை பார்க்கலாம்.
Affiliate Marketing History In Tamil
நாம் நினைப்பதைக்காட்டிலும் Affiliate Marketing பல காலங்களுக்கு முன்பிருந்தே இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1800 களில் தங்களது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்றுக்கொடுக்கும் நபருக்கு கமிஷன் வழங்கும் நடைமுறை இருந்துள்ளது. 1950 களில் தங்களது நிறுவன பொருள்களை பரிந்துரைக்கும் விளம்பரதாரர்களுக்கு கமிஷன் வழங்கும் நடைமுறை ஆரம்பித்துவிட்டது.
டிஜிட்டல் யுகத்திற்கு நாம் வந்தபிறகு இதே முறைக்கு கிடைத்த பெயர் தான் Affiliate Marketing. 1996 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக அமேசான் நிறுவனம் Affiliate Program ஐ அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு Affiliate Marketing மிகவும் பிரபலம் அடைய ஆரம்பித்துவிட்டது. 2023 ஆம் ஆண்டு வாக்கில் Affiliate Marketing துறையானது 10 பில்லியன் மதிப்புமிக்கதாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Affiliate Marketing எப்படி வேலை செய்கிறது?
‘பரிந்துரை செய்துவதற்கு கமிஷன்’ என்ற முறையில் தான் Affiliate Marketing வேலை செய்கிறது. ஆங்கிலத்தில் இதனை referral-based system என சொல்லலாம். மொத்த Affiliate Marketing துறையும் இரண்டு நபர்களுக்கு இடையே தான் நடக்கிறது.
1. Advertisers
யாருக்கு அல்லது எந்த நிறுவனத்திற்கு பொருளை விற்க வேண்டுமோ அவர்கள் Advertisers என அழைக்கப்படுவார்கள்.
2. Publishers
யார் அல்லது எந்த நிறுவனம் பொருளை விளம்பரப்படுத்துகிறதோ அவர்கள் Publishers என அழைக்கப்படுவார்கள்.
முதலில் Advertisers தங்களது எந்த பொருளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அவர்கள் குறிப்பிட்ட அந்தப்பொருளை முன்னனி Affiliate Marketing தளங்களில் பதிவிடுவார்கள். உதாரணத்திற்க்கு, ResellerClub இல் பதிவிட்டு உள்ளார்கள் என வைத்துக்கொள்வோம்.
அங்கே Sign Up செய்து Publishers இணைந்து இருப்பார்கள். அவர்களுக்கு மேற்கூறிய பொருளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்து கொடுத்தால் கிடைக்கும் கமிஷன் தொகையில் விருப்பம் இருந்தால் குறிப்பிட்ட லிங்கை தங்களது இணையதளம், சமூகவலைத்தளம், குரூப்ஸ் உள்ளிட்ட இடங்களில் பகிர்வார்கள், பரிந்துரை செய்வார்கள். குறிப்பிட்ட அந்த லிங்கை யாரேனும் கிளிக் செய்து பொருளை வாங்கினால் அதற்கான கமிஷன் தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.
மிக எளிமையாக இப்படித்தான் Affiliate Program வேலை செய்யும்.
Types of Affiliate Marketing Programs
Affiliate Marketing இல் பல வகைகள் இருக்கின்றன. எப்படி கமிஷன் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அவற்றை பல வகைகளாக பிரிக்கலாம். அதிலே, சிலவற்றை உங்களுக்கு இங்கே பகிர்கிறேன்.
Pay-per-sale (PPS) :
ஒவ்வொரு முறை பொருளை விற்றுக்கொடுக்கும் போதும் கமிஷன் தொகை வழங்கப்படும்.
Pay-per-click (PPC)
ஒவ்வொரு முறை Affiliate Link கிளிக் செய்யப்படும் போதும் கமிஷன் தொகை வழங்கப்படும்.
Pay-per-lead (PPL)
ஒவ்வொரு முறை Lead நடக்கும் போதும் கமிஷன் தொகை வழங்கப்படும்.
இப்படி பல வகைகள் இருக்கின்றன.
Affiliate Marketing இன் நன்மைகள் என்ன?
Affiliate Marketing என்பது Advertisers மற்றும் Publishers ஆகிய இரண்டு தரப்பிற்குமே பல்வேறு நன்மைகளை தருகிறது. Advertisers மிகக்குறைவான செலவில் தங்களது பொருள்களை அதிகமாக விற்க முடியும். அதேபோல, பொருள்கள் விற்கப்பட்டால் மட்டும் கமிஷன் தொகையை வழங்கினால் போதும். இதனால் விளம்பரத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை குறைக்க முடியும்.
Publishers களுக்கு சம்பாதிக்கக்கூடிய மிக சுலபமான வழிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. பொருள்களை உற்பத்தி செய்திட வேண்டிய அவசியம் இல்லை. சுலபமாக, லிங்க்குகளை பகிர்ந்து அதனை கிளிக் செய்து வாங்கும் போது கமிஷன் பெறலாம்.
Affiliate Marketing இன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இணையம் வருவதற்கு முன்னரே Affiliate Marketing இருந்தது என பார்த்தோம். இணையம் வந்தபிறகு Affiliate Marketing இன்னும் உயரத்திற்கு சென்றது. இணையத்தோடு புதிய தொழில்நுட்ப யுக்திகளை இணைத்து இப்போது மேலும் திறம்பட Affiliate Marketing ஐ பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். artificial intelligence (AI) மற்றும் machine learning ஆகிய தொழில்நுட்பங்கள் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. இவை இரண்டையும் பயன்படுத்தி மிகவும் சிறப்பாக Affiliate Marketing ஐ செய்திட முடியும்.
கூடுதலாக, சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி மற்றும் influencer marketing இவற்றை பயன்படுத்தியும் Affiliate Marketing ஐ விரிவாக செய்திட முடியும்.
Read Here :
Amazon Affiliate Marketing துவங்குவது எப்படி?
“Affiliate Marketing” அதிகமாக சம்பாதிப்பது எப்படி?
உலக அளவில் Affiliate Marketing மூலமாக அதிகம் சம்பாதிக்கும் 5 பேர்
Affiliate Marketers in India
ResellerClub :
இந்தியாவில் தற்போது இருக்க கூடிய Affiliate Program இல் அதிக வருவாயை இங்கு பெறலாம். இங்கு Sale போன்றவற்றை எளிமையாக நம்மால் monitor செய்ய முடியும். மேலும் இதில் இருக்க கூடிய referal program மூலமாகவும் சம்பாதிக்க முடியும்.
Join ResellerClub Affiliate Program
Amazon Affiliate Program:
இந்தியாவின் மிகப்பெரிய Indian e-commerce நிறுவனம் அமேசான். உங்களுக்கு ஏற்கனவே amazon இல் account இருப்பின் அதிலேயே Affiliate Program இல் இணைய முடியும். அதில் வழங்கப்படுகிற லிங்க்குகளை facebook , twitter உள்ளிட்டவற்றில் உங்களால் பகிர முடியும். இணையதளத்தில் விளம்பரங்களை காட்டுவதற்கும் code களை generate செய்ய முடியும்.
கிட்டத்தட்ட 0.3 % முதல் 12 % வரை உங்களுக்கு commission வழங்கப்படும். அது அந்தந்த பொருள்களை பொறுத்தது.
Join Amazon India Affiliate Program
இதைப்போலவே Flipkart நிறுவனமும் affiliate program ஐ வழங்குகிறது.
Signup FlipkartAffiliate program
Godaddy Affiliate Program :
Godaddy உலகின் முன்னணி website registrar. மேலும் இந்த நிறுவனம் hosting போன்ற பல சேவைகளையும் வழங்குகிறது. Godaddy யிலும் affiliate program இருக்கிறது. அதில் இணைந்து godaddy யை உங்களது இணையதளத்தில் பிரபல படுத்தும்போதும், domain register , hosting sale போன்றவற்றை உங்களது இணையப்பக்கத்திற்கு வருகிறவர்கள் மேற்கொள்ளும்போதும் உங்களுக்கு குறிப்பிட்ட commission தொகையினை Godaddy உங்களுக்கு வழங்குகிறது.
Join Godaddy Affiliate Program
இதைப்போலவே BigRock , Hostgator நிறுவனமும் affiliate program ஐ வழங்குகிறது.
Join BigRock Affiliate Program
Join Hostgator Affiliate Program
முடிவுரை
விளம்பரதாரர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரும் வருமானத்தைப் பெறுவதற்கு குறைவான சவால்களுடன் அதிக வாய்ப்பை தரும் ஒரு துறையாக Affiliate Marketing இருக்கிறது. நீங்கள் புதிதாக Affiliate Marketing குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவராக இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றே Affiliate Marketing இல் இணைந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடுங்கள்.