இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாக Affiliate Marketing இருந்து வருகிறது. பெரிய முதலீடுகள் எதுவும் இன்றி வருமானத்தை ஈட்டக்கூடிய எளிதான வழியாக இது இருக்கிறது. உலகின் எந்தவொரு மூலையில் இருந்துகொண்டும் இதனை செய்திட முடியும் என்பது இதன் சிறப்பு. பணம் சம்பாதிப்பதற்கு எளிதான வழிமுறையாக இது இருந்தாலும் கூட, புதிதாக இதற்குள் வருகிறவர்கள் சற்று சிரமப்படவே செய்கிறார்கள். அங்கிருந்து Affiliate Marketing ஐ கற்றுக்கொள்ள ஆரம்பிப்பது, Affiliate Marketing இல் எப்படி அதிகமாக சம்பாதிப்பது, எந்த Affiliate Marketing இல் சேருவது, எங்கே கமிஷன் தொகை அதிகம், எந்த மாதிரியான பொருள்களை விற்பனைக்கு தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழலாம்.
உங்களுக்கு Affiliate Marketing இல் பெரிதாக அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட இதில் ஆர்வம் இருந்தால் முழுமையாக இந்தக்கட்டுரையை படியுங்கள்.
How Affiliate Marketing Works?
Affiliate marketing என்பது மிகவும் சுலபமாக வேலை செய்கிறது. அதிகமாக பொருள்களை விற்க விரும்புகிறவர்கள் தங்களது பொருள்களை விற்றுக்கொடுத்தால் எவ்வளவு கமிஷன் தருகிறோம் என்ற அறிவிப்பை வெளியிடுவார்கள். குறிப்பிட்ட பொருள்களை நீங்கள் விளம்பரம் செய்து விற்றுக்கொடுத்தால் அதற்கான கமிஷன் தொகையை உங்களுக்கு வழங்குவார்கள்.
உதாரணத்திற்கு, Amazon இல் உள்ள ஒரு மைக் ஐ விற்றுக்கொடுத்தால் 5% கமிஷன் என இருக்கிறது என வைத்துக்கொள்வோம். நீங்கள் குறிப்பிட்ட அந்த பொருளுக்கான விளம்பரத்தை உங்களது இணையதளத்தில் பதிவிட்டு அதனை யாரேனும் கிளிக் செய்து அமேசான் தளத்திற்கு சென்று வாங்குகிறார்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5% கமிஷன் தொகை வழங்கப்படும்.
Benefits of Affiliate Marketing
Affiliate Marketing இன் முதன்மையான நன்மையே, அதனை பயன்படுத்தி உங்களால் கணிசமான பணத்தை சம்பாதிக்க முடியும்.
உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இணைய வசதி மட்டும் இருந்தால் போதும் உங்களால் Affiliate Marketing இல் ஈடுபட முடியும்.
Affiliate Marketing இல் சம்பாதிக்க நீங்கள் அதிகமாக முதலீடு செய்திட வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல, விற்பனை செய்யக்கூடிய பொருள்களை நீங்கள் உற்பத்தி செய்திட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர் உருவாக்கிய பொருள்களை விற்றுக்கொடுப்பதன் மூலமாக பணம் ஈட்டலாம்.
Affiliate Marketing Statistics
நாளுக்கு நாள் வளர்ந்து வரக்கூடிய துறைகளில் ஒன்று Affiliate Marketing. இதனை சரியாக பயன்படுத்துகிறவர்கள் லட்சங்களில் கூட பணம் ஈட்டிக்கொண்டு வருகிறார்கள். Affiliate Marketing மூலமாக பொருள்களை அதிகமாக விற்க முடிவதால் பல உற்பத்தியாளர்கள் இந்த முறையை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் Affiliate Marketing மூலமாக $12 பில்லியனை ஈட்டி உள்ளார்கள். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுமைக்கும் உள்ள இணையதளம் மற்றும் ஆப் வைத்திருப்பவர்களில் 84% பேர் Affiliate Marketing இல் இணைந்துள்ளார்கள்.
81% பிராண்ட்கள் Affiliate Marketing இல் இணைந்துள்ளன.
Choosing the Right Affiliate Program
Affiliate Marketing மூலமாக நீங்கள் அதிகமாக சம்பாதிக்க விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய முதல் வேலை “சரியான Affiliate Marketing Program” ஐ கண்டுபிடித்து அதிலே சேருவது தான். நீங்கள் இணையத்தில் தேடினால் அதிகமான Affiliate Marketing Program களை பார்க்க முடியும். அதிலே சரியான ஒன்றை தேர்வு செய்வதற்கு இங்கே ஆலோசனைகளை வழங்குகிறேன்.
1. உங்களுடைய இணையதளம் எந்த “niche” ஐ சார்ந்துள்ளதோ அது சம்பந்தப்பட்ட பொருள்களை விற்க தேர்வு செய்துகொள்ளுங்கள். அப்போது தான் படிப்போருக்கு ஏற்றதாக இருக்கும். உதாரணத்திற்கு, உங்களுடைய இணையதளத்தில் பிட்னெஸ் குறித்த தகவல்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். நீங்கள், பிட்னெஸ் சம்பந்தப்பட்ட பொருள்களை தேர்வு செய்தால் தான் நல்லது.
2. High commission rates எங்கு தருகிறார்கள் என பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்களால் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
3. பொருளின் தரம் : அடுத்தவர்களுக்கு பரிந்துரை செய்வதற்கு முன்னதாக அந்த பொருளின் தரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சரியான பொருள்களை நீங்கள் பரிந்துரை செய்தால் தான் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அப்போது தான், உங்களது அடுத்த பரிந்துரைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
4. எந்தவொரு Affiliate Marketing Program இல் சேருவதற்கு முன்பாகவும் அதன் விதிமுறைகளை படித்து தெரிந்துகொள்வது நல்லது. அதனை மீறாமல் செயல்படுவது அவசியம்.
Maximizing Your Earnings with Affiliate Marketing
உங்களது வருமானத்தை Affiliate Marketing இல் அதிகரிக்க வேண்டுமெனில் நீங்கள் சில விசயங்களை பின்பற்றினால் தான் அது சாத்தியமாகும்.
1. Content : உங்களுடைய content என்பது சிறப்பானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அதிகம் பேர் உங்களுடைய இணையதளத்திற்கு வருவார்கள். ஆகவே, Content Quality என்பது மிக முக்கியம்.
2. யுக்திகளை பின்பற்றுங்கள் : நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதிலே சில யுக்திகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆகவே, பொருள்களை தேர்வு செய்வது துவங்கி, அதனை விளம்பரப்படுத்துவது வரைக்கும் சிறப்பான யுக்திகளை பின்பற்றுங்கள்.
3. Channel Selection : பல சேனல்கள் மூலமாக வாடிக்கையாளர்களை அணுகுவது மிகவும் அவசியமான ஒன்று. உதாரணத்திற்கு, இணையதளம், சமூக வலைத்தளம், யூடியூப், ஈமெயில் என பல வழிகளில் அவர்களை அணுகலாம்.
4. Mailing List : Affiliate Marketing இல் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட வேண்டுமெனில் Mailing List ஐ சரியாக பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்று.
5. Touch With Them : உங்களது வாடிக்கையாளர்களிடம் தொடர்ச்சியாக தொடர்பில் இருங்கள். அவர்களோடு தொடர்ந்து உரையாடல் செய்திடுங்கள். அவர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
Tips for Successful Affiliate Marketing
Affiliate Marketing இல் நீங்கள் வெற்றியடைய வேண்டுமெனில் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறேன். அவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்.
1. உண்மையாக இருங்கள் : நாம் பரிந்துரை செய்திடும் ஒரு பொருளை இன்னொருவர் வாங்க வேண்டுமெனில் அவருக்கு உங்கள் மேல் ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நீங்கள் பெறுவதற்கு உண்மையாக இருங்கள்.
2. சரியான பொருள்களை மட்டுமே பரிந்துரை செய்திடுங்கள்.
3. உங்களுடைய செயல்பாட்டை அவ்வப்போது சோதித்து பாருங்கள். எங்கேயேனும் குறைபாடுகளை கண்டறிந்தால் அதனை சரி செய்திடுங்கள்
4. எப்போதும் புதியவைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
Common Affiliate Marketing Mistakes to Avoid
Affiliate Marketing இல் பலர் ஈடுபட ஆர்வத்தோடு வருகிறார்கள். ஆனால், அதிலே சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெல்ல முடியாதவர்கள் செய்திடக்கூடிய பொதுவான தவறுகளை இங்கே பார்க்கலாம்.
1. ஒரே நேரத்தில் பல பொருள்களை விளம்பரம் செய்வது. இது மிகவும் தவறு. ஏதேனும் ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை விளம்பரப்படுத்த முயலுங்கள்.
2. வெறும் கமிஷன் வருகிறது என்பதற்கான சரியில்லாத பொருள்களை விளம்பரம் செய்வது.
3. சரியான டூல்ஸ்களை பயன்படுத்தாமல் இருப்பது.
Tools and Resources for Affiliate Marketers
இணையத்தில் ஏகப்பட்ட டூல்ஸ்கள் இருக்கின்றன. நீங்கள் அதிலே சரியானவற்றை தேர்வு செய்து பயன்படுத்தினால் தான் உங்களால் வெற்றிபெற முடியும்.
1. Affiliate networks: உதாரணத்திற்கு Commission Junction, ShareASale, and Clickbank என பல புரோகிராம்கள் இருக்கின்றன.
2. Tracking tools: அதேபோல Tracking tools பல இருக்கின்றன. உதாரணத்திற்கு Google Analytics, ClickMeter, and Voluum . இவற்றின் மூலமாக உங்களது performance ஐ அறிந்துகொள்ள முடியும்.
3. WordPress plugins: WordPress plugins களான Pretty Links, ThirstyAffiliates, and AffiliateWP போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Affiliate Marketing மூலமாக சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நீங்கள் நான் மேலே கூறிய யுக்திகளை பின்பற்றினால் தான் வெற்றி பெற முடியும். நான் ஏற்கனவே கூறியபடி, வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக இருங்கள், சரியான பொருள்களை தேர்வு செய்யுங்கள், சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள். இவற்றை செய்தாலே நீங்கள் வெற்றி பெறலாம்.