People Card
கூகுள் நிறுவனம் ‘People Cards’ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிக எளிமையாக சொல்லவேண்டுமானால் யாராவது ஒருவர் உங்களைப்பற்றி தேடும் போது காண்பிக்க உதவுகிற டிஜிட்டல் விசிட்டிங் கார்டு போன்றதொரு வசதி தான் இது.
மிகப்பெரிய சர்ச் என்ஜினை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனம் தற்போது ‘People Cards’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வசதியின் மூலமாக ஒருவர் தங்களைப்பற்றி பிறர் தேடும் போது காண்பிக்கத்தேவையானவற்றை தாங்களே கொடுக்க முடியும். உதாரணத்திற்கு Sridaran Baskaran என என்னை ஒருவர் தேடுகிறார் எனில் அவருக்கு காண்பிக்க என்னைப்பற்றிய சிறு அறிமுகம், என்னுடைய இணையதள முகவரி, சமூக வலைதள கணக்குகள் பற்றிய தகவல்கள், மொபைல் எண் உள்ளிட்டவற்றை கொடுத்துவிட்டால் போதும். இதனால் ஒருவரைபற்றிய சரியான தகவலை கூகுள் சர்ச்சில் பெற்றுவிட முடியும். இதற்காகவே கூகுள் தற்போது இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
‘People Cards’ எப்படி உருவாக்குவது?
>> ‘People Cards’ ஐ உருவாக்க உங்களது ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம்.
>> பின்னர் “Add Me to Search” என கூகுள் சர்ச்சில் சர்ச் செய்திடுங்கள் அல்லது இந்த லிங்கை கிளிக் செய்திடுங்கள்
>> அதில் கேட்கப்படும் பின்வரும் தகவல்களை கொடுத்திடுங்கள்
The image from your Google account
A description of yourself
A website link
Links to social profiles
Phone number
Email address
>> அனைத்தையும் கொடுத்த பின்பு உங்களுடைய டிஜிட்டல் விசிட்டிங் கார்டு எப்படி இருக்கும் எனகாட்டுவார்கள். நீங்கள் அதனை உறுதி செய்த பிறகு “Save” செய்து கொள்ளலாம்.
கூகுளின் இந்த வசதி யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என கூகுள் தனது பிளாக் போஸ்டில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, மில்லியன் கணக்கான தொழிமுனைவோர்கள், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களும் கூட தங்களைப்பற்றிய தகவல்களை இதில் கொடுத்து பிறருக்கு தெரிய படுத்தலாம்.
For the millions of influencers, entrepreneurs, prospective employees, self-employed individuals, freelancers, or anyone else out there who wants to be discovered, we hope new Search feature will help the world find them
மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த தகவல்கள் சேமிக்கப்படும் எனக்கூறும் கூகுள் நிறுவனம் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே ஒரு ‘People Cards’ மட்டுமே உருவாக்கிட முடியும் என்ற கட்டுப்பாட்டையும் கொண்டு வந்திருக்கிறது. அதேபோல எப்போது வேண்டுமானாலும் ஒருவர் தான் அளித்த தகவல்களை மாற்றிக்கொள்ள முடியும். ஒருவர் தவறான தகவல்களை அளித்திருக்கிறார் என நீங்கள் நினைத்தால் “feedback ” மூலமாக புகார் அளிக்கலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.