Blogging என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

Internet is everywhere. So Everyone must know website creation.

Blogging

உன்னுடைய திறமையை உலகிற்கு காட்டிட யாரும் வாய்ப்பு தர வேண்டிய தேவை இல்லை. இணையம் உங்களுக்கான கதவினை திறந்தே வைத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது தான் பிளாக்கிங்

இன்று அனைத்தும் இணையமயமாகி விட்டது. ஆகையால் நாமும் மற்றவர்களுக்கு இணையாக நமது தொழில்வளத்தை பெருக்கிட நிச்சயமாக இணையத்தோடு இணைந்திருப்பது அவசியமாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு தேவையான ஆடை போன்றவற்றையோ, வீட்டிற்கு தேவையான பொருள்களையோ கடைகளுக்கு நேரடியாக சென்று வாங்கி வந்தோம். தற்போது நிலைமை அப்படி இல்லை, இணையத்தின் அதீத வளர்ச்சியினால் இருந்த இடத்தில் இருந்தே நமக்கு தேவையான பொருள்களை அமேசான் (Amazon) , பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆப்களின் மூலமாக பார்க்கிறோம். பிடித்தால் ஆர்டர் செய்கிறோம். பொருள் நமக்கு வீடு தேடி வருகின்றது.

Internet is everywhere. So Everyone must know website creation.

இது ஒருவிதமான வளர்ச்சி, இன்னொரு வளர்ச்சியும் இணையத்தால் வந்திருக்கின்றது. ஆம் அதுதான் சமூக வலைதளம், பிளாக்கிங் போன்றவை. முன்பு ஒருவருக்கு நடிக்கும் திறமையோ எழுதும் திறமையோ இருந்தால் அவர் ஒரு இயக்குனரிடம் வாய்ப்புக்காக அலைந்து திரிய வேண்டும், எழுதும் திறமை இருந்தாலும் அதற்காக மிகப்பெரிய செய்தி நிறுவனங்களிடம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

தற்போது திறமை இருந்தால் போதும் உங்களது திறமையை காட்டிட யாரிடவும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. உங்களது திறமையை பொதுவெளியில் காட்டிட சமூக வலைத்தளங்களும் இணையதளமும் பெரிய வாய்ப்பினை வழங்குகின்றன.

தொழில் செய்பவர்கள், எழுத்தாளர்கள், புகைப்பட வல்லுநர்கள் என மக்களுக்கு தங்களை பற்றியோ தங்களது திறமையை பற்றியோ, தங்களிடம் இருக்கக்கூடிய பொருள்களின் விலை பற்றியோ கூறிட மிகப்பெரிய அளவில் இணையமும் இணையதளமும் உதவுகின்றன.

இந்த பதிவுகளை படிப்பதன் மூலமாக வெறும் 30 நிமிடங்களுக்குள் உங்களால் உங்களுக்காக ஒரு இணையதளத்தை திறக்க முடியும்.

Previous

Blogging Tutorial

Next
வெப்சைட் என்றால் என்ன?




Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.