What is internet/browser Cookies? | இண்டர்நெட் குக்கீஸ்

இணையதளம் சிறப்பாக செயல்படுவதற்கும் டிஜிட்டல் அட்வர்டைஸிங் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் மிக முக்கிய காரணம் இன்டர்நெட் குக்கீஸ். 

what are internet cookies explained in tamil


அமேசான் இணையத்தளத்திற்குள் சென்று டிவி ஒன்றினை வாங்கலாம் என பார்க்கிறீர்கள் . பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என அந்த இணையதளத்தை மூடிவிடுகிறீர்கள். இப்போது வேறு ஏதேனும் ஒரு இணையதளத்தை பார்க்க செல்லும்போது அந்த இணையதளத்தில் அமேசான் இணையதள டிவி விளம்பரங்களோ அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களோ தோன்றுவதனை பார்க்கலாம் . இது எப்படி நடக்கிறது? எனக்கு எப்படி டிவி விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன என நீங்கள் சிந்தித்ததுண்டா?

இந்த கேள்விகள் அனைத்திற்குமான ஒரே பதில் Cookies (குக்கீஸ்). அதனை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம் .

இண்டெர்நெட் குக்கீஸ் (Internet Cookies) அல்லது பிரவுசர் குக்கீஸ் (Browser Cookies) என்ற வார்த்தையினை கணிணி பயன்படுத்துகின்ற பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு . இண்டெர்நெட் குக்கீஸ் என்றால் என்ன ? எதற்காக இண்டெர்நெட் குக்கீஸ் பயன்படுத்தப்படுகின்றது? அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பதனை இப்போது பார்க்கலாம் .

What are actually Cookies?

Website Cookies

Cookies என்பது மிக குறைந்த தகவல்களை கொண்டிருக்கின்ற ஒரு Text File . நீங்கள் பயன்படுத்துகின்ற இண்டெர்நெட் பிரவுசரின் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் cookies சேமிக்கப்பட்டு இருக்கும் . பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பைல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் .

இணையதளத்தை உருவாக்குகிறவர்கள் தங்களது இணையதளத்தின் சில அம்சங்கள் சிறப்பாக வேலை செய்யவேண்டி Cookies ஐ பயன்படுத்துகிறார்கள் . பிரவுசரும் கூட நாம் இணையத்தில் தேடுகின்ற , படிக்கின்ற விசயங்களையும் Cookies ஆக சேமித்து வைக்கிறது .

இணையதளத்தை நீங்கள் திறக்கும்போது , இணையதளமானது உங்களது பிரவுசருக்கு தகவலை அனுப்பும் . பின்னர் உங்களது பிரவுசர் ஒரு Text file ஐ உருவாக்கும் .அதில் login தகவல்கள் , பிரவுஸ் செய்கின்ற தகவல்கள் போன்றவை சேமிக்கப்பட்டிருக்கலாம். பின்னர் அதே இணையதளத்திற்கு மீண்டும் நீங்கள் செல்லும்போது உங்களது பிரவுசர் அந்த இணையதளத்திற்க்கான Cookies இருக்கிறதா என பார்க்கும் . அப்படி இருந்தால் Cookies Text File இல் இருக்கும் தகவல்களை இணையதள சர்வருக்கு அனுப்பும் .

Firefox Cookies

உதாரணத்திற்கு அந்த இணையதளத்தில் ஏற்கனவே நீங்கள் Login செய்துள்ளீர்கள் எனில் அந்த தகவல் Cookies இல் சேமிக்கப்பட்டு இருக்கும் . மீண்டும் அதே இணையதளத்தை திறக்கும்போது Login செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் Cookies தான் . உங்களால் Cookies ஐ நீக்கவும் முடியும் . அப்படி நீக்கிவிட்டால் நீங்களும் புதிய நபர் தான் . Cookies File இல்லையெனில் உங்களை புதிய நபராக நினைத்து இணையதளத்தை காண்பிக்கும்.

Advantages of Cookies

>> ஏற்கனவே login செய்திருப்பின் மீண்டும் இணையத்தளத்திற்குள் செல்லும்போது login செய்யப்பட்டு இருக்கவேண்டும் எனில் Cookies கண்டிப்பாக தேவை.

>> நீங்கள் ஏற்கனவே Browse செய்த பொருள்களை நியாபகம் வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு பொருள்கள், ஆபர்கள் உள்ளிட்டவற்றை காட்டிட Cookies கண்டிப்பாக தேவை.

Where to find Cookies in Browser? – Chrome

User Cookies

Go to >> Settings

Click >> Advanced

Click >> Content Settings

Click >> Cookies

Click >> Allow sites to save and read cookie data (recommended) – நீங்கள் டிராக் செய்யப்படுவதை தடுக்கலாம்.

Click >> See All cookies and site data அனைத்து Cookies யையும் பார்க்கலாம்.

Where to find Cookies in Browser? – Firefox

Firefox Cookies

Go to >> Tools

Click >> Options

Click >> Privacy

Click >> Use custom settings for history [Drop Down Menu]

Click >> Show Cookies – அனைத்து Cookies யையும் பார்க்கலாம்

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here