Friday, November 22, 2024
HomeTech Articles10 ஏஜென்சிகள் உங்கள் கணிணியை சட்டபூர்வமாக கண்காணிக்கலாம்

10 ஏஜென்சிகள் உங்கள் கணிணியை சட்டபூர்வமாக கண்காணிக்கலாம்

 


Highlights : 

  • > மத்திய உள்துறை அனுமதித்துள்ள 10 நிறுவனங்கள் உங்கள் கணிணியை , தகவலை கண்காணிக்கலாம் .

 

  • > தேவைபட்டால் உங்களது கருவிகளை எடுத்தும் செல்லலாம் .

 

  • > தடுத்தால் ஏழு ஆண்டுகள் வரை தண்டணை விதிக்கலாம்.
  •  

  • > [31/12/2018] தற்போது மத்திய உள்துறை அதிகாரி அளித்துள்ள விளக்கத்தின்படி, ஒருவரது கணினியை இடைமறித்து வேவு பார்ப்பதற்கு மத்திய உள்துறை அல்லது மாநில உள்துறையின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம்

 


 

இந்திய அரசியலமைப்பு சட்டம் , தகவல் தொழில்நுட்பம் 2000 இன் 69 ஆவது பிரிவின்படி உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ள 10 புலனாய்வு ஏஜென்சிகள் இனி நீங்கள் அனுப்புகின்ற , பெறுகின்ற தகவலை கண்காணிக்கலாம் . உங்களது கணிணியில் சேமித்து வைத்திருக்கும் தகவலை சோதனையிடலாம் , தேவைப்பட்டால் அந்த கணிணியை உடன் எடுத்தும் செல்லலாம் .

 

10 agencies now can monitor your computer
10 agencies now can monitor your computer

 

இதன்படி கணிணியை வைத்திருப்பவர்கள் அல்லது ஒருங்கிணைப்பவர்கள் , இந்த 10 ஏஜென்சிகள் தகவலை கேட்கும்போது அவர்களுக்கு போதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் , இல்லையெனில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் .

 

இதற்கு முன்னதாக அனுப்பப்படும் தகவல்கள் மட்டும் இடைமறித்து கண்காணிக்கப்படும் . ஆனால் இப்போது அனுப்பப்படும் தகவல் , பெறப்படும் தகவல் , சேமித்துவைத்திருக்கும் தகவல் என அனைத்தையும் கண்காணிக்க முடியும் . அவர்களுக்கு தேவையிருப்பின் கணிணி உள்ளிட்ட கருவிகளை உடன் எடுத்துச்செல்லவும் முடியும் .

 

 

இதுகுறித்து இண்டெலிஜென்ஸ் பிரிவு அதிகாரிகள் குறிப்பிடும்போது ” IS தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் . முன்பு சமூக வலைதளங்களின் மூலமாக இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தவர்கள் இப்போது மின்னஞ்சலின் வாயிலாக சலவை செய்கின்றனர் . இவற்றையெல்லாம் தடுக்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்” என்கிறார்கள்.

 

ஆனால் எதிர்ப்பவர்கள் “குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதற்காக அனைத்து இந்திய மக்களையும் குற்றவாளிகளாக நடத்திட கூடாது ” என்கிறார்கள் .

 


 

தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு அதிகம்


இப்போது உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்திட்ட இந்த அதிகாரம் தற்போது 10 புலனாய்வு ஏஜென்சிகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதனால் தவறாக பயன்படுத்தப்படக்கூட வாய்ப்பு இருக்கின்றது .



தனிமனித உரிமை என்பதே இல்லாமல் போய்விடும் . பாதுகாப்பு எப்படி முக்கியமானதோ அந்த அளவிற்கு தனிமனித உரிமையும் மிக முக்கியமானது . அதில் எந்தவொரு ஐனநாயக நாடும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது .


TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular