Thursday, November 21, 2024
HomePersonal Finance In Tamilகடனை விரைவாக திருப்பி செலுத்துவது எப்படி? How to Pay Off Debt Fast and...

கடனை விரைவாக திருப்பி செலுத்துவது எப்படி? How to Pay Off Debt Fast and Effectively?

கடனை முறையாக திருப்பி செலுத்துவது சரியானது.

புதிதாக வீடு வாங்குவதற்காகவோ [Home Loan], கார், பைக் [Car Loan] உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்காகவோ, தொழிலை விரிவடைய செய்வதற்காகவோ [Business Loan] கடன் வாங்குவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில், கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது என்பதே எதார்த்தமான ஒன்று. கடன் வாங்குகிறவர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை முறையாக கடனை திருப்பி செலுத்துவது தான். 

பலர் முறையாக கடனை திருப்பி செலுத்த முடியாததற்கு மிக முக்கியக்காரணம், கடனை திருப்பி செலுத்துவது எப்படி என்பது தெரியாமல் இருப்பது தான். இந்தப் பதிவில் நீங்கள் வாங்கிய கடனை மிகவும் சரியாகவும் எளிதாகவும் திருப்பி செலுத்துவதற்கு செய்ய வேண்டிய விசயங்கள் அனைத்தையும் இந்தப்பதிவில் பார்க்கலாம்.

1. உங்களுக்கான பட்ஜெட்டை உருவாக்கவும்

expense management
expense management

உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் உங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு  உங்களுக்கான ஒரு பட்ஜெட்டை [Personal Budget] உருவாக்குங்கள். உங்கள் கடனை சரியாகவும் விரிவாகவும் செலுத்துவதற்கு பட்ஜெட் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும்.

2. உங்கள் கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து கடன்கள் மற்றும் அவற்றின் வட்டி விகிதங்கள் [Loan Interest] அனைத்தையும் பட்டியலிடுங்கள். எந்தக் கடனுக்கு அதிக வட்டி இருக்கிறதோ அதனை முதலில் கட்டி முடிக்க முன்னுரிமை கொடுத்திடுங்கள். அதேபோல, கடனை அடைக்க கடன் வாங்குவதை எப்போதும் செய்யாதீர்கள்.

3. தேவையற்ற செலவுகளைக் குறைத்தல்

கடன் இருக்கும் போது ஆடம்பரம் என்பது எப்போதும் கூடாது. ஆகவே, அத்தியாவசியமற்ற செலவுகளைக் கண்டறிந்து, உங்களால் முடிந்தவரை குறைக்கவும்.  இந்த நிதிகளை கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் விரைவாகவும் கடனை கட்ட முடியும், அதேபோல வட்டித் தொகையையும் குறைக்க முடியும். [Save your money]

4. வட்டி விகிதங்களை குறைக்க முயலுங்கள்

வங்கியில் நீங்கள் பெரும் தொகையை வட்டிக்கு வாங்கி இருக்கிறீர்கள் என்றால் மொத்தமாகவோ அல்லது விரைவாகவோ கடனை செலுத்து வட்டியை குறைக்க முடியுமா என அவர்களை அணுகலாம். அதேபோல, தனியார் நபர்களிடம் நீங்கள் கடன் வாங்கியிருந்தாலும் கூட அவர்களை அணுகி வட்டியை குறைக்குமாறு கேட்கலாம்.  ஒருவேளை உங்களுக்கு வட்டி குறைப்பு வாய்ப்பு கிடைத்தால் அதனை நீங்கள் பயன்படுத்தி விரைவாக கடனை கட்டிவிடலாம்.

5. உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பை தேடுங்கள்

நீங்கள் இதுவரைக்கும் பார்த்துக்கொண்டு இருக்கும் வேலையைத் தவிர கூடுதல் வருமானம் வரக்கூடிய வேலைகளை [Freelance Jobs] செய்திட துவங்குங்கள். உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. இப்படி செய்வதன் மூலமாக நீங்கள் விரைவாக கடனை கட்டலாம். 

6. குறிப்பிட்ட தொகையை வைத்திருங்கள்

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை எப்போதும் உங்களது வங்கிக் கணக்கில் வைத்திருங்கள். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு வரக்கூடிய வருமானம் தடைபட்டால் எந்தவித தடங்கலும் இன்றி கடனை திருப்பி செலுத்த முடியும். இதனால் கூடுதல் வட்டி பிரச்சனையில் நீங்கள் சிக்காமல் தப்பிக்கலாம். 

7. தானாக பணம் செலுத்தும் முறையை பயன்படுத்துங்கள்

கடனை திருப்பி செலுத்துவதில் பலர் செய்யக்கூடிய தவறு, சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தாமல் போவது தான். பணம் இருந்தும் கூட பலர் கடனை சரியான தேதியில் கட்டாமல் வட்டியை தேவையில்லாமல் செலுத்தி வருகிறார்கள். நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால் தானாகவே குறிப்பிட்ட தேதியில் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் ஆப்ஷன்களை பயன்படுத்துங்கள். இதனால், நீங்கள் மறந்தாலும் கூட சரியான தேதியில் பணம் எடுத்துக்கொள்ளப்படும். 

8. சரியாக கடனை திருப்பி செலுத்துங்கள்

How to Pay Off Debt Fast and Effectively
How to Pay Off Debt Fast and Effectively

பலர் செய்யக்கூடிய தவறு, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் போவது தான். இதனால் மிக முக்கியமான நேரங்களில் கடன் வாங்க வங்கியை அணுகும்போது cibil score குறைவாக இருப்பதனால் கிடைக்காமல் போகலாம். அதேபோல, தேவைற்ற வட்டியை நீங்கள் கூடுதலாக செலுத்தும் சூழல் நேரலாம். 

9. நிபுணத்துவ ஆலோசனையை நாடுங்கள்

வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் என்பது பல ஆண்டுகள் உங்களோடு இருக்கும். அதேபோல இந்த கடனுக்கு போடப்படும் வட்டி என்பது மாறும். ஆகவே, எவ்வளவு பணம் கட்டினால் எவ்வளவு ஆண்டுகள் கட்ட வேண்டும் என்பது துவங்கி, மீதம் எவ்வளவு கடன் உள்ளது என்பது வரைக்கும் உங்களுக்கு குழப்பமாகவே இருக்கும். அப்படி நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், நிதி ஆலோசகரை [Finance Advisor] அணுகவும் அல்லது ஏற்கனவே அனுபவம் வாய்ந்த நபர்களை அணுகவும்.

10. கடனை தவிர்த்திடுங்கள்

பலர் சிறிய சிறிய விசயங்களுக்கு கூட இப்போது கடன் வாங்குகிறார்கள். இந்த மனநிலை தான் Loan App களில் கூட கடனை வாங்க துணிகிறார்கள். எப்போதும் சிறிய விசயங்களுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க பழகுங்கள்.

முடிவுரை

கடன் வாங்குவது தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான விசயம். ஆனால், சில சூழ்நிலைகளில் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. அப்படி நீங்கள் கடன் வாங்கும் சூழலில் இருந்தால் அதனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும் என்ற அக்கறையோடு இருங்கள். உங்களுக்கு எப்படி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பது பற்றிய ஆலோசனையைத்தான் இந்தப்பதிவில் பார்த்தோம். இவை உங்களுக்கு நிச்சயமாக பயன்படலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular