Thursday, November 21, 2024
HomeBloggingKeyword Research என்றால் என்ன? | SEO In Tamil

Keyword Research என்றால் என்ன? | SEO In Tamil

Keyword Research And It's Importance Explained In Tamil

Blogging என்பது இன்று வளர்ந்து வரக்கூடிய துறைகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே blogging செய்கிறவராக இருந்தாலும் சரி, இதற்குப்பிறகு செய்யபோகிறவராக இருந்தாலும் சரி, நீங்கள் blogging இல் முழு வீச்சில் சாதிக்க வேண்டும் என நினைப்பவராக இருந்தால் “Keyword Research” பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் உங்களால் SEO வை சரியாக செய்திட முடியும். SEO In Tamil என தேடுவோருக்கு இந்தப்பதிவு சரியானதாக இருக்கும்.

இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் உங்களைப்போலவே பலரும் blogging செய்திட ஆர்வத்தோடு வருகிறார்கள். ஆகவே, நீங்கள் blogging இல் சாதிக்க வேண்டும் என நினைத்தால் “Keyword Research” பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப்பதிவில் நீங்கள் “Keyword Research” என்றால் என்ன? “Keyword Research” ஏன் முக்கியம்? “Keyword Research” எப்படி செய்வது? என்னென்ன டூல்ஸ் “Keyword Research” செய்திட இருக்கிறது? Long-tail keywords மற்றும் short-tail keywords இரண்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள் என்ன? இப்படி பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக பேச இருக்கிறோம்.

Keyword Research ஏன் முக்கியம்?

Blogging துறையில் Content தான் அரசன் என்பார்கள். அதாவது, குறிப்பிட்ட விசயம் குறித்து உங்களது கட்டுரை தெளிவான தகவல்களையும், தேடுகிறவர் தேடுகிற விசயத்தையும் கொண்டிருந்தால் நீங்களே வெற்றியாளர். உங்களது இணையதளம் தான் கூகுள் சர்ச் உள்ளிட்ட சர்ச் என்ஜின்களில் மேலே காண்பிக்கப்படும். அதிகமாக உங்களது பக்கத்திற்கு தான் வருவார்கள். 

blogging

பல நேரங்களில் சில இணையதளங்கள் அல்லது இணையதள பக்கங்கள் தெளிவான விசயங்களை கொண்டிருந்தாலும் சரியான நபர்களுக்கு சென்று சேரவில்லை எனில் அதனால் பலன் ஏதும் இல்லை. இந்த இடத்தில் தான் “Keyword Research” வருகிறது. கூகுள் உள்ளிட்ட சர்ச் என்ஜின்கள், தேடுகிறவர் பயன்படுத்துகிற சொற்கள் எந்த இணையதள பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கங்களைத்தான் தேடுகிறவருக்கு காண்பிக்கும். நீங்கள் அருமையாக ஒரு கட்டுரையை எழுதிவிட்டு அதிலே மக்கள் தேடுகிற Keywords ஐ வைக்கவில்லை எனில் உங்களை சர்ச் என்ஜின் கண்டுகொள்ளாது. ஆகவே தான் ஒரு கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக “Keyword Research” செய்திட வேண்டியது அவசியம். 

Keyword Research In Tamil என தேடுவோருக்கு இந்தக்கட்டுரை காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இதனை சேர்த்துள்ளேன். 

“Keyword Research” செய்வதன் மூலமாக மக்கள் எப்படி சர்ச் செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலமாக, நீங்கள் எழுதப்போகும் கட்டுரையை சரியாக வடிவமைக்க முடியும். இதன் மூலமாக, உங்களது இணையதளம் சர்ச் ரிசல்டில் (SERPs) அதிகமாக வர செய்திட முடியும். இதனால் உங்களுடைய Website Traffic ஐ அதிகப்படுத்தலாம்.

Keyword Research செய்வது எப்படி?

மேலே சொன்ன விசயங்கள் மூலமாக, blogging செய்வதற்கு Keyword Research செய்வது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போது Keyword Research எப்படி திறம்பட செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

Keyword Research இன் முதல்படி படி உங்களது Target Audience யார் என்பதை தெரிந்துகொள்வது. அடுத்தது, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அல்லது அவர்கள் விரும்புவது என்ன என்பதை அறிந்துகொள்வது. நமது Target Audience யார் என்பது தெரிந்துவிட்டாலே Keywords குறித்து எளிதாக அறிந்துகொள்ள முடியும். 

Keyword research செய்வதற்கு பல டூல்ஸ்கள் இருக்கின்றன. அதிலே, இலவசமாகவும் சில இருக்கின்றன, பணம் கொடுத்தும் பயன்படுத்தும் டூல்ஸ்களும் இருக்கின்றன. குறிப்பாக, Google Keyword Planner, SEMrush, Ahrefs, மற்றும் Moz Keyword Explorer என பலவற்றைக் கூறலாம். இவற்றின் மூலமாக, எவ்வளவு பேர் குறிப்பிட்ட keyword ஐ தேடுகிறார்கள், போட்டி எப்படி இருக்கிறது, சம்பந்தப்பட்ட Keyword என்னென்ன என பல விசயங்களை தெரிந்துகொள்வதன் மூலமாக எந்த Keyword ஐ நீங்கள் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வரலாம். 

அதிகம் பேர் சர்ச் செய்திடக்கூடிய High Search Volume Keyword மற்றும் Low Competion Keyword இது இரண்டையும் கவனித்து சரியான keyword ஐ தேர்வு செய்து உங்களது கட்டுரையை எழுதலாம்.

Tools for keyword research In Tamil

நீங்கள் keyword research செய்வதற்கு பல டூல்ஸ்கள் இருக்கின்றன. நீங்கள் சரியான டூல்ஸ்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். இங்கே சில டூல்ஸ்கள் உங்களுக்காக இருக்கிறது.

1. **Google Keyword Planner**

இது முற்றிலும் இலவசமான டூல். Keyword Research செய்வதற்கு ஒருவர் துவங்க வேண்டிய சரியான இடம் இதுவென்றே சொல்லலாம். இங்கே Keyword Volume, Keyword Ideas, Competion level என பலவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

2. **SEMrush**

SEMrush பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு Keyword Research tool. இதில் பல அம்சங்கள் இருக்கின்றன. மற்ற விசயங்களை விட கூடுதலாக competitor analysis கூட இதிலே செய்யலாம்.

3. **Ahrefs**

SEMrush போலவே Ahrefs கூட சூப்பரான Keyword Research tool தான். மற்ற தகவல்களோடு content gap analysis மற்றும் backlink analysis போன்றவை இதிலே சிறப்பாக இருக்கும். 

4. **Moz Keyword Explorer**

இதிலே search volumes, keyword difficulty, organic click-through rates (CTR), keyword suggestions என பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக blogging செய்திட உதவும். 

இங்கே இருப்பவை மிகவும் சில சில டூல்கள் தான். இது தவிரவும் பல டூல்கள் இங்கே இருக்கின்றன. நீங்கள் அவற்றையும் கூட பயன்படுத்தலாம்.

Long-tail keywords vs. short-tail keywords

நீங்கள் keyword research செய்திடும் போது இரண்டு விதமாக உங்களுக்கு keyword கிடைக்கலாம். long-tail keywords மற்றும் short-tail keywords இவை தான் அந்த இரண்டு பிரிவுகள். இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியம். 

Short-tail keywords என்பவை ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை கொண்ட Keywords. உதாரணத்திற்கு, blogging, SEO போன்றவை. இந்த Keywords ஐ அதிகம் பேர் சர்ச் செய்திடலாம். ஆனால், இதற்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். 

Long-tail keywords என்பவை மூன்று அல்லது அதற்கு அதிகமான வார்த்தைகளை கொண்ட Keywords. உதாரணத்திற்கு, “beginner blogging tips” அல்லது “SEO strategies for small businesses” போன்றவை. இப்படி நீளமான keywords க்கு குறைவான search volume இருக்கலாம். ஆனால், இதற்கு போட்டியும் குறைவு. இதனால் எளிதாக ரேங்கிங் கிடைக்கும். 

Short-tail keywords பொதுவான keywords ஆக இருப்பதனால் conversion rate குறைவாக இருக்கும். ஆனால், Long-tail keywords மிகவும் குறிப்பான keywords ஆக இருப்பதனால் conversion rate அதிகமாக இருக்கும்.

SEO Tips In Tamil 

1. **Write for humans, not just search engines**

பலர் செய்யக்கூடிய தவறு என்ன தெரியுமா? அவர்கள் தங்களது கட்டுரைகளை அதனை வாசிக்கும் மனிதர்களுக்காக எழுதாமல் சர்ச் என்ஜின்களுக்காக எழுதுவார்கள். ஒருபோதும் நீங்கள் அந்தத்தவறை செய்துவிடாதீர்கள். செயற்கையாக keywords ஐ திணிக்காமல் இயல்பிலேயே அது வரும்படி எழுதுங்கள்.

2. **Use keywords in headings and subheadings**

நீங்கள் கண்டறிந்த Keywords ஐ heading மற்றும் subheading இல் பயன்படுத்துங்கள். இதன் மூலமாக சர்ச் என்ஜின் மிகவும் எளிதாக உங்களது பக்கம் எது சார்ந்தது என்பதை புரிந்துகொள்ளும்.

3. **Include keywords in the first paragraph**

அதுபோல உங்களது keywords ஐ முதல் பத்தியிலேயே குறிப்பிடுங்கள். இது படிப்பவர் மற்றும் சர்ச் என்ஜின் இருவருமே புரிந்துகொள்ள உதவும்.

4. **Sprinkle keywords throughout your content**

உங்களது கட்டுரையில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் keywords ஐ குறிப்பிடுங்கள். உதாரணத்திற்கு, SEO In Tamil, Keyword Research Tamil , Blogging Tamil என இணைக்கலாம்.

5. **Optimize images and media**:

நீங்கள் உங்களது போஸ்டில் இணைக்கும் இமேஜ் உள்ளிட்ட விசயங்களும் SEO விற்கு அவசியம். அதேபோல இமேஜின் பெயரிலும் keywords இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

Common SEO Mistakes In Tamil

keyword research இல் சில தவறுகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நீங்கள் செய்திடக்கூடாத தவறுகளை இங்கே பார்க்கலாம்.

1. **Targeting overly competitive keywords**: 

அதிகமாக போட்டி இருக்கும் Keyword களில் நீங்கள் அக்கறை செலுத்தாதீர்கள். ஆகவே, நீண்ட Keyword களில் நீங்கள் அக்கறை செலுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்.

2. **Ignoring user intent**:

நீங்கள் நினைத்தது போன்று ஒரு கட்டுரையை எழுதாமல் உங்களது கட்டுரையை படிப்பவர் எப்படி அதனை படிக்க விரும்புவார், அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என நினைப்பார் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அவை அனைத்தும் முக்கியம்.

3. **Keyword stuffing**:

திட்டமிட்டே Keyword களை உங்களது கட்டுரைகளில் திணிக்காதீர்கள். இதனால் சர்ச் என்ஜின்கள் உங்களது கட்டுரையை கண்டறிந்து விட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அளவாக பயன்படுத்துங்கள்.

4. **Neglecting long-term keyword trends**:

தற்காலிகமாக மட்டும் தேடப்படக்கூடிய Keyword க்கு முக்கியத்துவம் தராதீர்கள். பல காலகட்டங்களிலும் தேடக்கூடிய keyword க்கு முக்கியத்துவம் கொடுங்கள்

5. **Relying solely on keyword metrics**:

இறுதியாக உங்களது எழுத்து உங்களது கட்டுரையை வாசிப்பவர் விரும்பும் விதத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் அவர் வந்த உடனேயே வெளியே செல்ல வாய்ப்பு அதிகம். அப்படி நடந்தாலும் உங்களது ரேங்கிங் பாதிக்கப்படும்.

முடிவுரை

Blogging செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக keyword research குறித்து தெரிந்து கொண்டிருப்பது அவசியம். keyword research in tamil என ஒருவர் கூகுளில் சர்ச் செய்து இந்தப்பக்கத்திற்கு வந்திருந்தால் நிச்சயமாக keyword research குறித்து தெரிந்துகொண்டு இருப்பார். எதை கவனிக்க வேண்டும், எதை செய்யக்கூடாது என்பனவற்றையும் தெளிவாக இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறோம். இது உங்களுக்கு உதவியாக இருந்துள்ளது என்று நீங்கள் கருதினால் கமெண்டில் பதிவிடுங்கள். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular