Wednesday, December 25, 2024
HomeTech ArticlesDownload Youtube Video | இதோ 4 வழிகள் | youtube video download tamil

Download Youtube Video | இதோ 4 வழிகள் | youtube video download tamil

You can easily download video from youtube, youtube video download tamil

நம்மில் பெரும்பாலானவர்கள் யூடியூப் நிச்சயமாக பயன்படுத்தி இருப்போம். அதிலே பெரும்பாலான நேரங்களில் ஆன்லைனில் இருந்துகொண்டே வீடியோக்களை பார்த்தாலும் நமக்கு சில நேரங்களில் வீடியோக்களை டவுன்லோட் [youtube video download tamil] செய்து பிறகு பார்க்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில், பலர் Youtube Download Software ஐ இன்ஸ்டால் செய்து தான் வீடியோக்களை டவுன்லோட் செய்கிறார்கள். ஆனால், எந்தவித சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்திடாமலே நம்மால் Youtube இல் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். வெறும் வீடியோ மட்டுமல்லாமல், Youtube Playlist ஐ கூட நம்மால் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

1. clip converter

நீங்கள் ஆன்லைனில் “Free Youtube Video Downloader” என தேடினால் உங்களுக்கு பல லிங்க்குகள் கிடைக்கலாம். ஆனால், அவற்றில் சிலவற்றை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டி இருக்கும், சிலவற்றை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், https://www.clipconverter.cc/ இந்த இணையதளத்திற்கு நீங்கள் சென்று நீங்கள் டவுன்லோட் செய்திட வேண்டிய Youtube லிங்கை போட்டால் போதும் நொடியில் அந்த வீடியோ டவுன்லோட் ஆகிவிடும். 

அதுமட்டுமல்லாமல் இந்த டூலில் பின்வரும் வசதிகள் அடங்கி இருக்கின்றன. 

1. நீங்கள் எந்த லிங்க்கில் உள்ள வீடியோவையும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும் 

2. இலவசமாக பயன்படுத்தலாம் 

3. நீங்கள் வீடியோவை MP3, M4A, AAC போன்ற ஆடியோ வடிவிலும் தரவிறக்கம் செய்யலாம். 

4. அதேபோல MP4, 3GP, AVI, MOV, MKV போன்ற வெவ்வேறு வீடியோ வடிவிலும் தரவிறக்கம் செய்யலாம்.

2. y2down.cc

y2down.cc

மேலே சொன்ன இணையதளத்தில் நீங்கள் ஒவ்வொரு வீடியோவாக மட்டுமே தரவிறக்கம் செய்திட முடியும். ஆனால், Youtube Playlist ஐ நீங்கள் டவுன்லோட் செய்திட வேண்டுமெனில் இந்த இணையதளம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதிலே எந்த Youtube Playlist ஐ டவுன்லோட் செய்திட வேண்டுமோ அதனை கொடுத்தால் போதும் அதிலே உள்ள அனைத்து வீடியோக்களும் தரவிறக்கம் ஆகிவிடும். 

இதிலே இன்னும் சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. 

1. இது முற்றிலும் இலவசம் 

2. நீங்கள் பல Format களில் வீடியோவை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் 

3. டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.

3. converto.io

யூடியூப் ஒவ்வொரு முறையும் தங்களது விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மாற்றிக்கொண்டே வருகிறது. ஆகவே, பல youtube downloader புரோகிராம்கள் திடீரெனெ காணாமல் போய்விடுகின்றன. ஆனால், இந்த converto.io எப்போதும் நிலையானதாக இருக்கிறது. இதனை வடிமைத்தவர்கள் தொடர்ச்சியாக இந்த மென்பொருளை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

நீங்கள் இந்த இணையதளத்திற்கு சென்று எந்த youtube லிங்க்கை டவுன்லோட் செய்திட வேண்டுமோ அதனை பேஸ்ட் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் ஆடியோ வடிவில் வேண்டும் என்றாலும் நீங்கள் mp3 வடிவில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்

4. youtubemp4

மிகவும் எளிமையாக youtube வீடீயோவை டவுன்லோட் செய்திட இந்த youtubemp4.to இணையதளம் பெரிதும் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு, நீங்கள் பல format களில் வீடியோவை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அதேபோல பல ஆடியோ வடிவிலும் கூட வீடியோவை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular