Saturday, October 5, 2024
HomeTech ArticlesChatGPT - 4 இனி இவர்களுக்கு வேலை இருக்காது

ChatGPT – 4 இனி இவர்களுக்கு வேலை இருக்காது

கூகுள் நிறுவனத்தின் சர்ச் என்ஜின்க்கு போட்டி ஏற்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாக கருத்தப்படும் Chat GPT யின் நான்காவது பதிப்பு Chat GPT 4 இப்போது வெளியகி இருக்கிறது. இது கூகுள் நிறுவனத்திற்கு மட்டும் போட்டியாக இருக்காமல் பலரது வேலைவாய்ப்பையும் பறிக்க இருக்கிறது.

OpenAI நிறுவனம்

OpenAI என்கிற நிறுவனம் எலன் மஸ்க், பில் கேட்ஸ் போன்ற பலரால் முதலீடு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் chat gpt என்கிற ஆட்டிபிசியல் புரோகிராம் ஐ உருவாக்கி வருகிறது. ஏற்கனவே Chat GPT 3 வெளியாகி இணையதளத்தில் பெரும் அளவில் பேசப்பட்டது. தற்போது Chat GPT 4 வெளியாகி இருக்கிறது. பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் Chat GPT 4 மீண்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ChatGPT என்றால் என்ன?

GPT என்பதற்கு Generative Pretrained Transformer என்பதே விளக்கம். GPT என்பது natural language processing AI model மற்றும் OpenAI நிறுவனம் தான் இந்த AI ஐ உருவாக்கி வருகிறது. இந்த AI ஆனது மனிதர்கள் போலவே எழுதும் திறன் பெற்றுள்ளது. கேட்கும் கேள்விகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பதில் சொல்லும் விதத்தில் இந்த chatbot உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண கேள்விகளுக்கு பதில்களை கேட்பது, ஒரு கட்டுரையை எழுத சொல்லுவது, பிழைகளை நீக்க சொல்லுவது, புரோகிராம் எழுத சொல்லுவது என பல வேலைகளை செய்திட இந்த ChatGPT ஐ பயன்படுத்தலாம்.

ChatGPT 4 ஐ பெறுவது எப்படி?

நீங்கள் இதற்கு முன்பு ChatGPT ஐ பயன்படுத்தவில்லை எனில் இந்த இணையத்திற்கு செல்லுங்கள் (chat.openai.com) பிறகு உங்களுக்கான இலவச கணக்கை திறந்து நீங்கள் chatGPT 3 ஐ இலவசமாக பயன்படுத்தலாம். நீங்கள் ChatGPT 4 ஐ பயன்படுத்த விரும்பினால் ChatGPT Plus ஐ subscribe செய்திட வேண்டும். இதற்காக நீங்கள் மாத கட்டணம் $20 செலுத்த வேண்டும்.

ChatGPT 4 இன் பயன்பாடுகள் என்ன?

ஏற்கனவே ChatGPT 3 ஐ பயன்படுத்திய அனுபவம் உங்களுக்கு இருந்தால் அதனை விடவும் கூடுதலான பயன்பாட்டை ChatGPT 4 மூலமாக பெற முடியும். அதீதமாக சிந்தித்து பதில் தருவது, சிக்கலான கேள்விக்கு பதில் தருவது, கிரியேட்டிவிட்டியுடன் பதில் தருவது என அசத்துகிறது ChatGPT 4.
ChatGPT 4 யின் செயல்பாட்டை ஆராய்ந்தவர்கள் டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்துள்ள தகவல்படி பின்வரும் பயன்பாடுகளை ChatGPT 4 கொண்டுள்ளது.

என்ன சமைக்கலாம்?

உதாரணத்திற்கு, நீங்கள் முட்டை, வெங்காயம் போன்ற உணவுப்பொருட்களின் புகைப்படங்களை அப்லோடு செய்தால் குறிப்பிட்ட பொருள்களை வைத்துக்கொண்டு என்னென்ன உணவுப்பொருட்களை தயார் செய்யலாம் என பரிந்துரை செய்திடும் அளவுக்கு திறன் கொண்டுள்ளது.

வீடியோ கேம்ஸ் Code எழுதும் திறன்

ஏற்கனவே ChatGPT 3 பல சிறிய அளவிலான புரோகிராம்களை எழுதும் திறன் கொண்டுள்ளது. ChatGPT 4 அதனைவிடவும் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, ஒரு முழு கேமிற்கான code அனைத்தையும் சிறப்பாக எழுதும் திறன் கொண்டுள்ளது ChatGPT 4.

Javascript போன்ற code களின் அனுபவம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட வெறும் 20 நிமிடத்தில் ஒரு முழு கேமையும் இதன்மூலமாக வடிவமைக்க முடியும்.

முழு இணையதளத்தை வடிவமைக்கலாம்

உங்களுக்கு இணையதளத்தை உருவாக்கும் முன் அனுபவம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட உங்களால் ChatGPT 4 ஐ பயன்படுத்தி முழு அளவிலான இணையதளத்தை உருவாக்க முடியும்.

விரிவான பதில்கள்

ஏற்கனவே ChatGPT 3 இல் விரிவான பதில்களை பெற முடியும். அதனைவிடவும் அதிகப்படியான விரிவான பதில்களை ChatGPT 4 ஐக் கொண்டு பெற முடியும். அதிகமான தகவல்களை புராசஸ் செய்து பதில்களை உருவாக்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதில்கள் விரிவாக இருக்கும்.

பிரச்சனைகளை சரி செய்திடும் திறன்

ஒரு புரோகிராமில் உள்ள பிரச்சனை அல்லது ஒரு சிக்கலான கேள்வி போன்றவற்றை சரி செய்திடும் திறன் ChatGPT 4 இல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக பல சிக்கலான பிரச்சனைகளை கூட சில நிமிடங்களில் கண்டறிந்து சரி செய்துவிட முடியும்.

யாருக்கெல்லாம் வேலை போக வாய்ப்பு உள்ளது?

AI புரோகிராம்களால் ஒருபோதும் மனிதர்களுக்கு ஈடாக முடியாது. மணிதர்போல புதுமையை அதனால் உருவாக்க இயலாது. ஆனால், மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை மிகவும் சுலபமாக இவற்றால் செய்திட முடியும். ஆகவே, ChatGPT போன்ற AI புரோகிராம்கள் வரும்போது அது பலரது வேலை வாய்ப்பையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

உதாரணத்திற்கு பின்வரும் வேலைவாய்ப்புகளை ChatGPT பாதிக்கலாம்.

Content Writing: இது பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. பல முன்னணி இணையதளங்கள், செய்தி நிறுவனங்கள் Content Writer களை வேலைக்கு வைத்துள்ளது. ஒரு கட்டுரை எழுத அவர்கள் குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்து கட்டுரைகளை எழுதுவார்கள். அதற்காக அவர்களுக்கு கணிசமான தொகை சம்பளமாக வழங்கப்படும். ஆனால், ChatGPT யில் மிகவும் சுலபமாக கட்டுரைகளை எழுத முடியும். சில நிமிடங்களில் சிறந்த கட்டுரைகள் பலவற்றை எழுத முடியும். ஆகவே, பலர் செய்யக்கூடிய வேலைக்கு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு chatgbt மூலமாக கட்டுரைகளை எழுதி தள்ளலாம்.

Testing: ஒரு புரோகிராம் எழுதி முடிக்கப்பட்டுவிட்டால் அதை சோதனை செய்வது அவசியம். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் டெஸ்டிங் அணியை வைத்திருக்கும். அவர்கள் குறிப்பிட்ட code ஐ சோதித்து குறைகள் இருந்தால் கண்டறிந்து சரி செய்வதற்காக அனுப்புவார்கள். ஆனால், chatgbt ஆனது சில நொடிகளில் என்ன பிரச்சனை என்பதை கண்டறியும், அதை சரி செய்தும் கொடுக்கும்.

Business Model : ஒவ்வொருவரும் பிசினஸ் மாடலை உருவாக்க பல நபர்களை வேலைக்கு வைத்து இருப்பார்கள். ஆனால், அந்த இடத்தை chatgbt விரைவில் பிடிக்கும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

இதுதவிர data entry துவங்கி, இணையதளம் உருவாக்குதல் பணி வரைக்கும் உள்ள பல நபர்களின் வேலை வாய்ப்புகளை chatgbt பறிக்க இருக்கிறது.

Tech Tamilan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular