Sunday, November 24, 2024
HomeApps'Idiot' என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? சுந்தர் பிச்சையின் விளக்கம் 

‘Idiot’ என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? சுந்தர் பிச்சையின் விளக்கம் 

[easy-notify id=297]


உலகின் முன்னனி சர்ச் என்ஜின்களில் ஒன்றாக கருதப்படுகின்ற Google நிறுவனம், அரசியல் சார்போடு தேடல் விவரங்களை கொடுப்பது (politically biased results) , பயனாளர்களின் முக்கியமான தகவலை திரட்டுவது (data collection), சீனாவுடனான புதிய ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான கேள்விகள் தொடர்பான விவாதங்கள் அமெரிக்க காங்கிரஸ் இல் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இணையத்தில் ‘Idiot’ என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன் எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன
மிக முக்கியமான பல கேள்விகளுக்கு கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை அவர்கள் பதிலளித்தார்.

Why Google Search result shows trump photo for ‘Idiot’ keyword?

 

காங்கிரஸ் உறுப்பினர் :  கூகுளில் இடியட் (Idiot) என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? இதற்கான காரணம் என்ன?
சுந்தர் பிச்சை : முதலில் ஒன்றினை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் எவரும் சர்ச் ரிசல்ட் இல் மாற்றம் செய்திட முடியாது. நீங்கள் இப்போது ஒரு விவரத்தை தேடுகிறீர்கள் என வைத்துக்கொண்டால், கூகுள் தன்னிடம் இருக்கின்ற “crawled and stored copies of billions of their pages in our index” இல் இருந்து தகவலை காட்டும். மேலும் எந்த ரிசல்ட் ஐ முதலில் காட்டவேண்டும் என்பதற்கு 200 க்கும் மேற்பட்ட காரணிகளின் மூலமாக Page Rank செய்யப்பட்டுகிறத” என தெரிவித்தார்.

Does android mobiles sending geo information by 2 to 3 minutes interval?

காங்கிரஸ் உறுப்பினர் : சில நிமிடங்களுக்கு ஒருமுறை கூகுள் ஆன்ட்ராய்டு போன்களில் இருந்து, பயன்படுகின்ற நபர் எங்கு இருக்கிறார்? எந்த திசையில் செல்கிறார்? என்பது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகிறதே. உண்மையா இல்லையா?
சுந்தர் பிச்சை : கூகுள் அனைவரது தகவலையும் சேகரிப்பது கிடையாது. எவரேனும் Fitness Apps போன்றவற்றை பயன்படுத்தினால் நடப்பது போன்ற தகவல்கள் அனுப்பப்படும். அதுவும் பயனாளர்களின் அனுமதியோடு தான் அனுப்பப்படும்.
காங்கிரஸ் உறுப்பினர் : புரிகிறது அந்த ஆப்கள் செயல்பட தகவல்கள் அவசியம். ஆனால் Terms and conditions ஐ ஏற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்களால் எந்தெந்த தகவல்களை கூகுள் கலெக்ட் செய்கிறது என்பதை தெரிந்துகொண்டு இருக்கிறார்களா?
சுந்தர் பிச்சை : Terms and conditions மட்டுமல்ல. அதனை தாண்டி Privacy Checkup ஆப்சன் இருக்கிறது. அதில் என்ன மாதிரியான தகவல்கள் கூகுலிடம் இருக்கிறது, அதில் எதனை கூகுள் பயன்படுத்தக்கூடாது என பயனாளர்கள் விரும்பினாலோ அல்லது அந்த தகவலை பெற விரும்பினாலோ அதனை செய்வதற்கான ஆப்சனையும் கூகுள் வழங்குகிறது.
இதுபோன்ற பல கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை அவர்கள் பதிலளித்துள்ளார். அந்த பதில்கள் கூகுள் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை அறிந்துகொள்ள உதவும்.


TECH TAMILAN

RELATED ARTICLES

2 COMMENTS

  1. First off I want to say terrific blog! I had a quick question in which I’d like to ask if you don’t mind.

    I was interested to know how you center yourself and clear your head before writing.
    I have had difficulty clearing my thoughts in getting my ideas out.
    I truly do enjoy writing however it just seems
    like the first 10 to 15 minutes are wasted just trying to figure out
    how to begin. Any recommendations or hints? Thanks! https://918.network/casino-games/78-live22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular