Friday, November 22, 2024
HomeTech ArticlesNanobots என்றால் என்ன? Nanobots பயன்பாடுகள் என்ன?

Nanobots என்றால் என்ன? Nanobots பயன்பாடுகள் என்ன?

நமது உடலில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள பாதிப்பை எந்தவித அறுவை சிகிச்சையும் செய்யாமல் நுண்ணிய ரோபாட்டுகளை அனுப்பி சரி செய்திட முடியும் என்றால் எவ்வளவு அருமையாக இருக்கும். இது கற்பனை அல்ல, வெகுவிரைவில் நடக்கப்போகும் அதிசயம். அவற்றை செய்துமுடிக்கப் போகும் ரோபோக்கள் தான் நானோபாட்ஸ் [Nanobots] என்று அழைக்கப்படுகின்றன. Nanobots என்றால் என்ன? Nanobots பயன்பாடுகள் என்ன? என்பதை விரிவாக இந்தப்பதிவில் பார்ப்போம்.

Nanobots என்றால் என்ன?

Nanobots என்பது நானோ மீட்டர் அளவிலான ரோபோக்கள். அவற்றுக்குள் குறிப்பிட்ட புரோகிராம்களை உட்செலுத்தி அவற்றை குறிப்பிட்ட வேலைகளை செய்திடுவதற்கு பயன்படுத்த முடியும். Nanobots என்பவை பேப்பரில் மட்டுமே இருக்கும் ஒரு விசயம் அல்ல. தற்போது, பலதரப்பட்ட Nanobots களை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Nanobots பயன்பாடுகள் என்ன?

Nanobots பல்வேறு துறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்யப்போகின்றன. அவற்றின் பயன்பாடுகள் பல்வேறு துறைகளில் இருந்தாலும் கூட இங்கே சில துறைகளில் அவற்றின் பயன்பாடுகளை பார்க்கலாம்.

மருத்துவத்துறையில் Nanobots

நீங்கள் கூகுளில் நானோபோட்டுகள் எப்படி மருத்துவத்துறையில் பயன்படுகிறது என்று தேடினால் பல ஆச்சர்யமான பதில்கள் உங்களுக்கு கிடைக்கலாம். நானோபோட்டுகளை உங்களது உடலில் செலுத்துவதன்  மூலமாக உங்களை கண்காணிக்கலாம், உங்கள் மூளைக்குள் அவற்றை உட்செலுத்துவதன் மூலமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக்கூட கண்காணிக்கலாம், உங்களையே கட்டுப்படுத்தலாம் என்பன போன்ற பல வியப்பான பதில்களை நீங்கள் காண முடியும். ஆனால், அவை அனைத்தும் இப்போதைக்கு சாத்தியமான விசயங்கள் இல்லை என்பதே உண்மை. ஆகவே, இப்போதைய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நானோபாட்டுக்கள் எப்படி மருத்துவத்துறையில் பயன்படுகின்றன என்பதை பார்ப்போம். 

தானியங்கி மற்றும் தானே கரைந்து போகுதல் திறனோடு உருவாக்கப்படும் சிறப்பு Nanobots மருந்துகளை குறிப்பிட்ட உடலில் குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு செல்ல உதவுகின்றன. ஆகவே, மற்ற உடல் பாகங்களை பாதிக்காமல் சரியான அளவில் சரியான மருந்தை சரியான இடத்திற்கு கொண்டு செல்வது சாத்தியமாகும். 

அதேபோல, விஞ்ஞானிகள் ரத்தத்ததை சுத்தப்படுத்த Nanobots உருவாக்கி வருகிறார்கள். இவை பாக்டீரியா மற்றும் நச்சுகளை அழிக்கும். 

கேன்சரை குணப்படுத்த உதவும் Nanobots

நல்ல செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேன்சர் செல்களை மட்டுமே அழிக்கவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட செல்களுக்கு மட்டும் மருந்துகளை கொண்டு சேர்க்கவும் Nanobots ஐ பயன்படுத்த முடியும்.

சுற்றுசூழலை தூய்மைப்படுத்த உதவும் Nanobots 

பூமியை சுத்தப்படுத்துவதில் Nanobots பெரிதளவில் உதவும் என நம்பப்படுகிறது. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் இப்போது Nanobots பயன்படுத்தப்படுகின்றன. நானோ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள paper towel அதன் எடைக்கு 20 மடங்கு அதிக எடை அளவிலான எண்ணையை உறிஞ்சும் திறன் வாய்ந்தவை. இவற்றைக்கொண்டு தண்ணீரில் கலந்துள்ள எண்ணெய்யை நீக்க முடியும்.

பாதுகாப்புத்துறையில் Nanobots

கண்களுக்கு புலப்படாத Nanobots களை எதிரி நாட்டின் ஆயுத குடோன்களில் ஏவி அவற்றை அழித்தொழிக்க முடியும். இதன் மூலமாக, எதிரி நாடுகளை பலமிக்க செய்திட முடியும். 

Nanobots தீமைகள் என்ன?

எந்தவொரு கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும். அப்படித்தான் Nanobots ம் கூட தீமைகளை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, Nanobots தொழில்நுட்பம் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கினால் அவர்களால் ஒரு நாட்டையே நிலைகுலைய செய்திட முடியும். பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அவர்களால் பாதிப்படைய செய்திட முடியும். அதேபோல, மனிதர்களின் மீதும் தாக்குதல் நடத்திட Nanobots ஐ பயன்படுத்த முடியும்.

நானோ டெக்னாலஜி என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular