கூகுள் தற்போது 22 ஆப்களை பாதுகாப்பற்றது என கூறி Playstore இல் இருந்து நீக்கியுள்ளது . பயனாளர்கள் தங்களது மொபைல்களில் இந்த ஆப்களை ஏற்கனவே டவுண்லோடு செய்து பயன்படுத்தினால் நீக்கிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஆன்டிவைரஸ் சேவையினை வழங்கிடும் நிறுவனமான Sophos , கூகுள் Playstore இல் இருக்கக்கூடிய 19 ஆப்கள் பாதுகாப்பற்றவை எனவும் , device draining backdoor மூலமாக ஹேக்கர்களின் சர்வரில் இருந்து கட்டளைகளை பெற்று அதற்கேற்றவாறு செயல்படும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது . அவை எதுவுமே பயனாளர்களுக்கு தெரியாது . மேலும் விளம்பரங்களை காண்பிப்பதிலும் இந்த ஆப்கள் போலித்தன்மையுடன் செயல்படுவதாக அறிவித்தது .
இதனை அடுத்து கூகுள் இதுபோன்று பாதுகாப்பற்றதாக இருக்கக்கூடிய ஆப்கள் அனைத்தும் நீக்கப்படும் என அறிவித்ததது . அதன்படி பின்வரும் 22 ஆப்களும் நீக்கப்பட்டுள்ளன . இந்த ஆப்களில் பல மில்லியண் கணக்கில் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளபடியால் பயனாளர்கள் உங்களது மொபைலில் இருந்தும் நீக்கிக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
Sparkle FlashLight
Snake Attack
Math Solver
ShapeSorter
Tak A Trip
Magnifeye
Join Up
Zombie Killer
Space Rocket
Neon Pong
Just Flashlight
Table Soccer
Cliff Diver
Box Stack
Jelly Slice
AK Blackjack
Color Tiles
Animal Match
Roulette Mania
HexaFall
HexaBlocks
PairZap
TECH TAMILAN