Sunday, November 24, 2024
HomeTech Articlesஜிப் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்ய வரலாறு | Who Invented the Zipper?

ஜிப் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரஸ்ய வரலாறு | Who Invented the Zipper?

Zipper

ஜீன்ஸ் பேண்ட் துவங்கி பேக், சூட்கேஸ் என எதை வாங்கினாலும் நாம் முதலில் சோதித்து பார்ப்பது அதில் இருக்கும் ஜிப்பைத் தான். அதேபோல ஜிப் சரியாக வேலை செய்திடவில்லை எனில் ஒட்டுமொத்தமாகவே பயனற்றதாக போய்விடும். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்பை கண்டறிந்தது யார் என எப்போதேனும் யோசித்து இருக்கிறீர்களா?


ஆரம்ப காலகட்டங்களில் ஆடைகளை மூடுவதற்கு பட்டன்கள் தான் பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட நாம் சட்டைகளுக்கு அதே முறையைத்தான் பயன்படுத்துகிறோம். பேண்ட், பேக், சூட்கேஸ் என அனைத்திலும் இன்று பயன்படுத்தப்படும் ஜிப் ஆனது பலரது பங்களிப்பால் தான் இன்று நாம் பயன்படுத்தும் நவீன நிலையை அடைந்துள்ளது. தையல் இயந்திரத்தை உருவாக்கிய எலியாஸ் ஹோவ் [Elias Howe] என்பவர் தான் முதலில் ஜிப் போன்றதொரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் 1851 ஆம் ஆண்டு  “Automatic, Continuous Clothing Closure என்பதற்கான காப்புரிமையையும் வாங்கினார். ஆனால் அவர் தையல் இயந்திரத்தை விற்பனையாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபடியால் ஜிப்பை மார்க்கெட் செய்வதில் அக்கறை செலுத்திடவில்லை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, விட்காம்ப் ஜுட்சன் என்பவர் ஹோவின் யோசனையை மேம்படுத்தி  “Clasp Locker.” என்ற பெயரில் ஜிப்பை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தார். ஆரம்பத்தில் இவர் காலணிகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் தான் இதனை கண்டறிந்தார். பின்னர் இதனை உருவாக்கிட Universal Fastener என்ற நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பினை பெறவில்லை.

தற்போது பயன்படுத்தப்படும் மாடர்ன் ஜிப்பை கிதியோன் சண்ட்பேக் [Gideon Sundback] என்பவர் தான் 1913 இல் உருவாக்கினார். இவர் Universal Fastener நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இவர் 1917 ஆம் ஆண்டு “Separable Fastener” என்ற ஜிப்பிற்க்காக காப்புரிமை பெற்றார். ஒரு இஞ்ச் க்கு 10 என்ற விகிதத்தில் இந்த ஜிப் இணைப்பான்கள் இருக்கும் விதத்தில் உருவாக்கினார். அதேபோல இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள ஜிப் இணைப்பான்கள் ஒரு மேல் அடுக்கு டீத் மூலமாக இணைக்கவும் பிரிக்கவும் முடியும் என்ற விதத்தில் உருவாக்கப்பட்டது.

இன்று நாம் பயன்படுத்தும் “Zipper”  என்ற பெயரை B.F. Goodrich என்ற நிறுவனம் தான் பயன்படுத்தியது. ஆரம்பத்தில், புகையிலை வைத்திருந்த பூட்ஸ் மற்றும் பைகளில் zipper முக்கியமாக பயன்படுத்தப்பட்டன. அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜிப் என்பது ஆடைகளில் பயன்பாட்டுக்கு வந்தது. பேண்ட்களில் பட்டன் பயன்பாட்டுக்கு மாற்றாகத்தான் முதன் முதலில் ஜிப் பயன்படுத்தப்பட்டது.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular