Friday, September 20, 2024
HomeTech Articles5 easy methods to find hidden cameras? | Instructions in Tamil

5 easy methods to find hidden cameras? | Instructions in Tamil

 


 

தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக Spy அல்லது hidden கேமராக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது . இவை  புலனாய்வு துறைகளில் உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கு பெரிய அளவில் உதவிபுரிகின்றது. இதே வகையிலான கேமராக்களை பயன்படுத்தி விடுதி அறைகளிலோ , ஹோட்டல் அறைகளிலோ , உடை மாற்றும் அறைகளிலோ மறைத்துவைக்கப்பட்டு அந்தரங்க வீடியோக்களை வெளியிடவும் பயன்படுத்துகின்றனர் .

 

 

புதிய இடங்களில் தங்குவதற்கு முன்பாக சில சோதனைகளை செய்துகொள்வதன் மூலமாக இத்தகைய குற்றவாளிகளிடமிருந்து  நாம் தப்பித்துக்கொள்ளலாம் .

 




Method 1 : வெறும் கண்களால் சோதனை செய்தல்

 

கேமரா மறைத்துவைக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள்
கேமரா மறைத்துவைக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள்



Hidden Camera தற்போது பல வடிவங்களில் கிடைக்கின்றன . பூங்கொத்துகளில் வைப்பதற்கு ஏதுவாக பூக்களை போன்றோ அல்லது சுவர் கடிகாரத்துக்குள் வைப்பது போன்றோ எப்படியேனும் தயாரிக்கப்படலாம் .

முதலில் நீங்கள் தங்கப்போகிற அறையினை நோட்டமிடுங்கள்

கடிகாரம் , பூங்கொத்து , அலங்கார பொருள்கள் , தொலைகாட்சிப்பெட்டி போன்றவைகளை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள் .

 




Method 2 : இருட்டில் LED வெளிச்சத்தை தேடுதல்

 

பெரும்பாலான கேமெராக்களில் LED விளக்குகள் இருக்கும் . வெளிச்சம் குறைவான நேரங்களில் அதனை தெரிவிப்பதற்காக இந்த LED விளக்குகள் விட்டு விட்டு எரிய ஆரம்பிக்கும் .

 



ஆகவே நீங்கள் தங்கப்போகிற  அறையின் கதவுகளை மூடிவிட்டு அறையின் உள்பக்கத்தினை கவனியுங்கள் . எங்கிருந்தாவது ஒளி விட்டு விட்டு எரிகின்ற பட்சத்தில் அங்கே தேடி பார்க்கவும் .

 


 

Method 3 : மொபைல் போன் மூலமாக கண்டறிதல்

 

யாருக்கேனும் கால் செய்துவிட்டு அறையின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்துசெல்லுங்கள் . மறைத்து  வைக்கப்பட்டிருக்கும் Hidden Camera வில் இருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சின் காரணமாக நீங்கள் பேசும்போது இடையூறு ஏற்படும் . அந்த இடத்தில் சோதனையிட்டு கண்டறியலாம் .

 


 

Method 4 : Hidden Camera Detector App

 

மொபைலில் எனும் ஆப்பை இண்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் . பிறகு அதனை ஓபன் செய்து அறையின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லுங்கள்.  ரேடியோ கதிர்வீச்சினை கண்டறிந்தால் உங்களுக்கு ரெட் அலர்ட் காட்டும் . அந்த இடத்தில் சோதனையிட்டு மறைத்துவைக்கப்பட்டுள்ள கேமராவை கண்டறியலாம் .


Method 5 : Wireless RF Signal Detector 

 

 

அமேசான் போன்ற இணையதளங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளிலும் ரேடியோ அதிர்வலைகளை கண்டறியக்கூடிய கருவிகள் விற்பனைக்கு இருக்கின்றன . மிக குறைந்த விலைக்கே கிடைக்கின்ற இந்த கருவிகளை கொண்டு மிகச்சிறிய கேமராக்களை கூட கண்டறிந்துவிடலாம்.

 


 

கண்டறிந்தபின்பு என்ன செய்யவேண்டும் ?


கேமரா மறைத்துவைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தவுடன் ஆதாரத்திற்கு புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்துக்கொள்ளுங்கள் . பின்னர் நேரடியாக அருகில் இருக்கும் காவல்துறையினரிடம் சென்று உங்களது புகாரை அளித்திடுங்கள் .


TECH TAMILAN 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular