Statue Of Unity
உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும் படேல் சிலையினை வடிவமைக்க ரூ 3050 கோடி செலவானது என கூறப்படுகிறது. 300 பொறியாளர்கள் உட்பட 3000 பேர் கடுமையாக உழைத்து மூன்றரை ஆண்டுகளில் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.
ஒற்றுமையின் சிலை [Statue of Unity] என அழைக்கப்படும் சர்தார் படேல் சிலை தான் தற்சமயம் உலகிலேயே உயரமான சிலை என்ற சாதனையை தாங்கி நிற்கிறது. பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இந்த சிலை பற்றிய இன்னும் பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. உலகிலேயே உயரமான சிலை : தற்சமயம் உலகில் இருக்கும் உயரமான சிலை ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படும் சர்தார் படேல் சிலை தான். இதன் உயரம் 182 மீட்டர்கள். அமெரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையைக்காட்டிலும் [Statue of Liberty] 89 மீட்டர் உயரமாகவும் சீனாவில் இருக்கும் புகழ் பெற்ற புத்தர் சிலையைக்காட்டிலும் [China’s Spring Temple Buddha statue] 29 மீட்டர் உயரமாகவும் இருக்கிறது படேல் சிலை.
2. ஒற்றுமைக்கான சிலை இருக்குமிடம் : இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது.
3. ஒற்றுமைக்கான சிலை வடிவமைப்பு : வடிவமைப்பு, கட்டுமானம், நிர்வகிப்பு என்ற நிலைகளில் குறைந்த அளவிலான ஒப்பந்தப்புள்ளி தந்ததன் அடிப்படையில் இந்த சிலையினை அமைப்பதற்கான திட்டம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் அக்டோபர் 2014இல் வழங்கப்பட்டது. 31 அக்டோபர் 2014இல் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டு அக்டோபர் 2018இல் இடையில் முடிவுற்றது. இந்தியச் சிற்பியான ராம். வி.சுடர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று திறக்கப்பட்டது
4. ஒற்றுமைக்கான சிலை செலவினம் : உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும் படேல் சிலையினை வடிவமைக்க ரூ 3050 கோடி செலவானது என கூறப்படுகிறது. 300 பொறியாளர்கள் உட்பட 3000 பேர் கடுமையாக உழைத்து மூன்றரை ஆண்டுகளில் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.
5. ஒற்றுமைக்கான சிலை நிறம் மாறும் : தற்சமயம் வெண்கல நிறத்தில் காட்சியளிக்கும் ஒற்றுமைக்கான படேல் சிலை அடுத்த 30 ஆண்டுகளில் துவங்கி 100 ஆண்டுகளுக்குள் பச்சை நிறத்திற்கு மாறும் என கூறப்படுகிறது. ஆக்ஜிஜனேற்றம் காரணாமாக இயற்கையிலேயே இப்படி நிறமாற்றம் நடைபெறும் சொல்லப்படுகிறது.
6. ஒற்றுமைக்கான சிலையின் வலிமை : தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட பாதிப்படையாமல் இருக்கும் விதத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு நொடிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கூட சிலை பாதிக்கப்படாது.
7. ஒற்றுமைக்கான சிலை சிறப்புக்கள் : சிலையில் கால்பகுதியில் இருக்கும் லிப்ட் அதிக வேகத்தில் இயங்கும்படி வைக்கப்பட்டுள்ளது. ஆமாம், 26 பேர் செல்லக்கூடிய இந்த லிப்ட் வெறும் 30 நொடிகளில் மேற்புறத்தை சென்றடையும்.
8. ஒற்றுமைக்கான சிலை எவ்வளவு பெரியது : நாம் புகைப்படங்களில் பார்க்கும் போது சாதாரண சிலை போன்று தான் படேல் சிலை காட்சி தரும். ஆனால் நிஜத்தில் பல்வேறு அடுக்குகளால் ஆனது இந்த சிலை. உதாரணத்திற்கு, சிலையின் காலுக்கு அடியில் நின்றால் கட்டைவிரல் கூட நமது உயரத்திற்கு அதிகமாக இருக்குமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
9. ஒற்றுமைக்கான சிலை பார்வை மாடம் : இந்த சிலைக்கு 153 மீட்டர் தொலைவில் ஒரு பார்வையாளர் மாடம் உள்ளது, அங்கு சுமார் 200 பேர் சர்தார் சரோவர் அணை மற்றும் சத்புரா மற்றும் விந்தியாச்சல் மலைத்தொடர்களின் பரந்த காட்சியைக் காணலாம்.
10. ஒற்றுமைக்கான சிலையில் இருக்கும் வசதி : ஒரு அருங்காட்சியகம், 3 நட்சத்திர தங்குமிடம், உணவு விடுதி , ஒரு நினைவுத் தோட்டம் மற்றும் ஒரு பெரிய அருங்காட்சியகம் ஆகியவை சிலைக்குள்ளேயே இருக்கின்றன.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.