Signal vs WhatsApp Comparison
WhatsApp தனது பிரைவசி பாலிசியை வெளியிட்ட பிறகு அதற்கு எதிரான கருத்துக்கள் பரவிவருகின்றன. குறிப்பாக WhatsApp ஐ நீக்கிவிட்டு Signal App ஐ இண்ஸ்டால் செய்திடுங்கள் என தற்போதைய உலகின் முதல் பணக்காரர் எலன் மஸ்க் பரிந்துரைக்கும் அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏன் இவ்வளவு பெரிய எதிர்ப்பு? Signal ஆப்பில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
இந்த உலகில் விலை மதிப்புமிக்கது எதுவென்று கேட்டால் ‘தங்கம்’ ‘வைரம்’ ‘பெட்ரோல்’ என ஒவ்வொன்றாக அடுக்குவோம். ஆனால் இந்த உலகில் மிகவும் விலை மதிப்புமிக்கது எதுவென்றால் ‘தகவல்’. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் நாம் அலட்சியமாக கருதக்கூடிய நம்முடைய தகவல்கள் தான் மிகவும் விலை உயர்ந்தவை. பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் அடிப்படை வருவாய் என்பது ‘விளம்பரங்கள்’ மூலமாகவே வருகிறது. சரியான நபர்களுக்கு விளம்பரங்களை காட்டுவதற்காக இந்த நிறுவனங்களுக்கு பயனாளர்கள் பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தகவல்களை பயன்படுத்தி விளம்பரங்களை காட்டுவது, இந்தத் தகவலை பிற நிறுவனங்களோடு பகிர்வது என்பதன் மூலமாக பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வருகின்றன இந்நிறுவனங்கள்.
வாட்ஸ்ஆப் என்பது தற்போது பேஸ்புக் என்ற நிறுவனத்தின் கீழாக இயங்குகிறது. ஆனால் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை உருவாக்கியது பேஸ்புக் அல்ல. அது ஜான் கௌம், பிரையன் ஆக்டன் என்ற இருவரால் துவங்கப்பட்டது. பின்னர் பேஸ்புக் நிறுவனம் இவர்களிடம் இருந்து வாட்ஸ்ஆப்பை விலைக்கு வாங்கியது. பிறகு தான் end-to-end encryption வசதியெல்லாம் வந்தது. அனுப்பப்படும் மெசேஜ் என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்படும் என்பதனால் யாருக்கு அந்த மெசேஜ் அனுப்பப்படுகிறதோ அவரால் மட்டுமே பார்க்க முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் கூட அந்த மெசேஜ்களை படிக்க முடியாது. இது பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுமைக்கும் பயனார்களை குவித்தது. ஆனால் வாட்ஸ்ஆப் மூலமாக கிடைக்கும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்தோடு தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என அறிவித்த பிறகு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது புதிய பிரைவசி அப்டேட் மூலமாக அதிகப்படியான தகவல்களை பகிர்ந்துகொள்ள இருப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் எதனை முதன்மையானதாக வைத்து உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை விசயமே தற்போது கேள்விக்குறியாக மாறியிருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆமாம், நாம் அனுப்பும் மெசேஜ்களை படிப்பது மட்டுமே ஆபத்து இல்லை. நம்முடைய பிற தகவல்களை திரட்டுவதும் அதனை பகிர்வதும் மிகவும் ஆபத்தானது. புதிய பிரைவசி பாலிசியை பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதிக்குள் நாம் ஒப்புக்கொள்ளாவிடில் நம்முடைய வாட்ஸ்ஆப் கணக்கு நீக்கப்பட்டுவிடும்.
வாட்ஸ்ஆப் புதிய பிரைவசி பாலிசியை அறிவித்த பிறகு கடும் எதிர்ப்புகள் உருவாகின. அதனோடு வாட்ஸ்ஆப் க்கு மாற்றாக சிக்னல் [Signal App] ஆப்பை பயன்படுத்துங்கள் என்றும் பலர் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக உலகின் தற்போதைய நம்பர் 1 பணக்காரரும் ட்விட்டரில் 41.6 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கும் எலன் மஸ்க் சிக்னல் [Signal App] ஆப்பை பயன்படுத்துங்கள் என்று சொன்ன பிறகு பலரும் சிக்னல் [Signal App] ஆப்பை இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்தார்கள். உண்மையாலுமே சிக்னல் [Signal App] ஆப் சிறப்பானதாக இருக்கிறதா என பார்ப்போம்.
சிக்னல் ஆப் [Signal App] உரிமையாளர்கள் யார்?
Signal Messenger LLC ஆப்பானது Signal Foundation என்ற லாப நோக்கமற்ற பவுண்டேசன் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப்பை உருவாக்கிய ஆக்டன் அங்கிருந்து வெளியேறிய போது இந்த பவுண்டேசனுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து துவங்கினார். இது ஒரு பவுண்டேசன் அமைப்பு கீழாக இயங்குவதனால் யாராலும் இந்த ஆப்பை விலை கொடுத்து வாங்க இயலாது.
சிக்னல் ஆப் [Signal App] சிறப்பம்சங்கள் என்ன?
வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப்போன்றே end-to-end encryption வசதி இதிலும் இருக்கிறது. நம்முடைய மொபைல் எண் மட்டும் தான் அவர்களால் சேமிக்கப்படுகிறது. அதேபோல சிக்னல் ஆப் [Signal App] பை உருவாக்கிய Source Code ஐ பொதுவெளியில் விட்டுருக்கிறார்கள். இதனால் உலகம் முழுமைக்கும் இருக்கின்ற தன்னார்வ அமைப்புகள், வல்லுநர்கள் இதில் இருக்கும் குறைகளை கண்டறிந்து சரி செய்வதற்கு உதவுவார்கள்.
என்கிரிப்ஷன் வசதி?
நாம் வாட்ஸ்ஆப்பில் GIF இமேஜ்களை தேடினால் நாம் தேடுவதற்கு பயன்படுத்திய சொல்லை GIPHY நிறுவனத்திற்கு அனுப்பும் வாட்ஸ்ஆப். GIPHY என்பது பேஸ்புக்கின் ஒரு நிறுவனம். சிக்னல் ஆப்பில் rofile photo, your voice and video calls, photos, attachments, stickers, and location pins என அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.
நீங்கள் சிக்னல் ஆப்பில் [Signal App] என்ன டைப் செய்கிறீர்கள் என்பதையோ அல்லது சிக்னல் ஆப்பின் திரையையோ வேறு எந்த ஆப்பினாலும் பார்க்க இயலாது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.