Friday, November 22, 2024
HomeTech Articlesஇந்தியர் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக், ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை

இந்தியர் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக், ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை

Electric Bike

அடுத்த சில ஆண்டுகளில் சாலைகள் எலெட்ரிக் வாகனங்களால் நிரம்பி வழிய காத்திருக்கும் சூழ்நிலையில் இந்திய இளைஞர் எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். ATUM 1.0 என்ற இந்த பைக்கை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை.

எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்திருக்கும் வம்சி [Vamsi] அமெரிக்காவில் இருக்கும் Purdue பல்கலைக்கழகத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தவர். 2011 இல் படிப்பை முடித்துவிட்ட 40 ஆண்டுகால தங்கள் குடும்ப நிறுவனத்தில் [Visaka Industries Ltd] வேலைக்கு சேர்ந்தார். கட்டுமானத்தை அடிப்படையாக கொண்ட அந்த நிறுவனத்தில் இவர் சேர்ந்த பிறகு காலத்திற்கு ஏற்றாற்போல சில மாறுதல்களை புகுத்தினார். உதாரணத்திற்கு, கட்டிடத்தின் கூரையில் சோலார் பேனல் இணைப்போடு கட்டிடத்தை கட்டுவது போன்று மாறுதல்களை ஏற்படுத்தினார். அடுத்ததாக, ஜவுளி உற்பத்தியாளர்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பெறப்படும் நூலை ஆடைகள் தயாரிப்புக்கு பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தினார்.

அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்த போது, வரும்காலத்தில் உலக நாடுகளை ஆக்கிரமிக்கப்போகும் எலெட்ரிக் பைக் உற்பத்தியில் இறங்கலாம் என முடிவு செய்தார். இதனை அடுத்து 10 பொறியாளர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த அழகிய எலெட்ரிக் பைக்கை வடிவமைத்து இருக்கிறார்கள். ATUM 1.0 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்  தயாரிப்பு.

தற்போது போட்டிகளில் பங்கேற்கும் ரேசர் பைக் வடிவத்தில் இந்திய சாலைகளுக்கு ஏற்ப இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லும் வம்சி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் பயணிக்க முடியுமாம். அதேசமயம் இந்த பைக்கில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல முடியும். பொதுவாகவே எலெட்ரிக் பைக்குகளை பொறுத்தவரைக்கும் வேகம் என்பது தான் பிரச்சனையாகவே இருக்கிறது. வேகம் இவ்வளவு குறைவாக இருப்பதனால் சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் (ஐசிஏடி) [International Centre for Automotive Technology (ICAT)] கொடுத்துள்ள சான்றிதழ் அடிப்படையில் இந்த பைக்கை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

இந்த பைக் உருவாக்குவதற்கான ஆலை தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ 50,000. இந்த பைக்கை வாங்க விரும்புவோர் ரூ 3000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

>> ஒருமுறை சார்ஜ் செய்திட ஆகும் நேரம் 3 முதல் 4 மணி நேரம்

>> ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் செல்லலாம்

>> அதிகபட்ச வேகம் 25 km/hour

>> வாரன்டி 2 வருடம்

மேலும் பல தகவல்களுக்கு https://atumobile.co/



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular