நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் புதிய படங்களை விதிகளை மீறி வெளியிடும் tamilrockers இணையதளத்தை முடக்க முடியவில்லை , அந்த tamilrockers இணையதளத்தை இயக்குபவர்கள் யார் என்றும் இதுவரை கண்டறிய முடியவில்லை . இது எப்படி சாத்தியம் ?
tamilrockers இணையதளத்தை முடக்க முடியாதா?
tamilrockers இணையதளத்தின் முதலாளிகளை கண்டறிய முடியாதா?
இந்தப்பதிவில் சில இணைய நுணுக்கங்களை அறிந்துகொள்ளலாம் .
இணையதளத்தின் அடிப்படை கட்டமைப்பு
ஒரு இணையதளத்தினை நீங்கள் பார்க்க பயன்படுத்திடும் URL டொமைன் என அழைக்கப்படும் .
இணையதளத்தில் நாம் பார்க்க அல்லது டவுன்லோடு செய்கின்ற பைல்கள் அனைத்தும் சர்வர் எனப்படும் கணிணியில் சேமிக்கப்பட்டு இருக்கும் . அது Host என அழைக்கப்படும் .
URL ஐ பிரவுசரில் பதிவிட்டு அழுத்தியவுடன் இணைத்தளத்தில் தகவல்கள் தோன்றிட வேண்டும் என்றால் இந்த URL எந்த Host க்கு போகவேண்டும் என்பதனை ஓரிடத்தில் ரிஜிஸ்டர் செய்யவேண்டும் . அது தான் DNS .
ஒரு இணையதளத்தின் சொந்தக்காரரை கண்டறிய வேண்டும் எனில் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன .
முதலாவது , டொமைன் பெயரை DNS இல் ரிஜிஸ்டர் செய்திடும்போது அங்கு முகவரி , மின்னஞ்சல் , மொபைல் எண் போன்றவற்றை கொடுக்கவேண்டி இருக்கும் .
tamilrockers உண்மையான முகவரியை கொடுத்துவிட்டா இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள் .
இரண்டாவது இணையதளத்தில் தோன்றிடும் விளம்பரங்கள் . விளம்பரத்தை பெற வேண்டும் எனில் Google Adsense போன்ற ஏதாவது ஒரு நிறுவனத்திடம் தொடர்பு வைத்திருக்க வேண்டும் . காட்டப்படும் விளம்பரங்களுக்கு ஏதாவது ஒரு வங்கிக்கணக்கில் தான் பணம் பரிமாற்றப்படும் . ஆகவே கண்டறிந்துவிடலாம் .
tamilrockers இணையதளத்தில் popup விளம்பரங்கள் தான் தோன்றுகின்றன . நாம் சொல்வதைப்போல உண்மையான வங்கி எண்ணை கொடுத்து பண பரிமாற்றம் நடந்தால் கண்டறிந்துவிடுவார்கள் என்பதை அறிந்து bitcoin போன்ற இணைய கரன்சிகளை ஏற்கின்ற விளம்பர நிறுவனங்களோடு தொடர்பு வைத்திருக்கலாம் என்றே தெரிகின்றது .
ஆக tamilrockers இணையதள முதலாளிகளை இணையதளத்தில் இடம்பெரும் தகவல்களை வைத்துக்கொண்டு கண்டறிவது இயலாத காரியம்.
tamilrockers முதலாளிகளை கண்டறியமுடியாவிட்டால் என்ன யாரும் பார்க்க முடியாதபடி செய்துவிடலாமே ? நீதிமன்ற உத்தரவு இருக்கின்றதே ?
கிட்டதட்ட 12000 க்கும் மேற்பட்ட இணையதள முகவரிகளை கொடுத்து ரஜினி நடித்த எந்திரன் 2.O திரைப்படத்தை வெளியிட தடைகேட்டு , தடையும் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம் . ஆனாலும் படம் வெளியான அன்றே tamilrockers இணையதளத்தில் படம் வெளியிடப்பட்டது .
ISP Filters
தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்கும்போது “இந்திய அரசின் DOT ஆணைப்படி இந்த இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது ” என்ற செய்தி வருவதை பார்த்திருப்போம் . நீதிமன்ற ஆணைப்படி அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டிருந்தால் அப்படித்தான் செய்தி வந்திருக்கும் .
ஒரு இணையதளம் இந்தியாவில் முடக்கப்படவேண்டும் எனில் அதனை செய்ய ISP ஆல் மட்டுமே முடியும் . ISP என்பது வேறு யாரோ அல்ல உங்களுக்கு இணையவசதியை வழங்கிடும் நிறுவனங்கள் தான் .
அரசாங்கம் ஒரு இணையதளத்தை முடக்க விரும்பினால் அந்த இணையதளத்தின் முகவரியை ISP யிடம் வழங்குவார்கள் . அவர்கள் blacklist இல் வைத்துவிட்டால் அந்த இணையதளத்தை உங்களால் பார்க்க முடியாது .
VPN பயன்படுத்தினால்?
VPN அல்லது IP address போன்றவற்றினை பயன்படுத்தினால் தடை செய்யப்பட்ட இணையதளத்தை பயன்படுத்திட முடியும் . எளிமையாக புரிந்துகொள்ள உங்களுக்கு ஓர் உதாரணம் ,
நீங்கள் ஓர் தீவில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . இணையதளங்கள் தான் நிலப்பகுதி என வைத்துக்கொள்வோம் . நெட்ஒர்க் வழங்கிடும் நிறுவனங்கள் தான் பாலம் என வைத்துக்கொள்வோம் . ஒரு இணையதளத்தை நீங்கள் பார்க்க வேண்டுமெனில் காரில் அந்த பாலத்தின் வழியாக செல்லவேண்டும் என வைத்துக்கொள்வோம் . ஓர் இணையதளம் முடக்கப்பட்டால் அந்த தீவில் இருந்து ஒரு கார் கடந்துவருவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பது பொருள் .
ஆனால் VPN அல்லது மாற்று IP address களை பயன்படுத்திடும்போது நீங்கள் அந்த தீவினை சேர்ந்தவர் என்றே அடையாளம் மறைக்கப்படும் . ஆகையால் இணையத்தளத்தினை உங்களால் பார்க்க முடியும் .
முடக்கவே முடியாதா?
ஒரு இணையதளத்தை வெறும் URL ஐ தடை செய்வதனால் மட்டுமே முடக்கிட முடியாது . காரணம் தடை செய்யப்படாத வேறொரு URL ஐ பயன்படுத்தினால் அதே தகவல்களை பார்க்க இயலும் . அதுதான் இணையதள விசயத்திலும் நடக்கிறது .
இதற்கு பெரிதாக வேறொன்றும் செய்யவேண்டியதில்லை . புதிய இணையதள முகவரியை ரிஜிஸ்டர் செய்து அதனோடு host ஐ இணைத்துவிட்டால் போதுமானது .
இப்படிப்பட்டவர்கள் உள்நாட்டிலோ அல்லது ஓரிடத்திலோ host சர்வரை பயன்படுத்துவதில்லை ஆகையினால் தான் அவ்வளவு எளிதாக கண்டறிந்து தடை செய்யமுடிவதில்லை .
நிரந்தரமாக தடை செய்யவே முடியாதா ?
முதலில் ஒன்றினை புரிந்துகொள்ள வேண்டும் , எவராலும் தடை செய்யப்பட முடியாத இணையதள வசதியென்பதில் நன்மையும் இருக்கின்றது தீமையும் இருக்கின்றது . அது பயன்படுத்துபவர்களின் தன்மையை பொறுத்தது .
அமெரிக்க அரசினை எதிர்த்து ஜூலியன் அஜாஞ்சே விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக ரகசிய தகவல்களை வெளியிட்டார் . அந்த இணையதளத்தை முடக்கிட அமெரிக்க அரசாங்கமே முயன்றது , பல வல்லுநர்களும் முயன்றார்கள் ஆனால் முடியவில்லை . காரணம் பல இடங்களில் தகவல்களின் பிரதி சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் .
மறுபக்கம் போன்றவர்கள் அடுத்தவர்களின் திரைப்படத்தை வெளியிட இதே யுக்தியை பயன்படுத்துகின்றனர்.
சீனா , சிரியா , வடகொரியாவில் தடை செய்கிறார்களே எப்படி ?
அந்த நாடுகளில் இணையதள முகவரியை முடக்குவதோடு மட்டுமல்லாமல் VPN போன்றவற்றினை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது .
அரசு தீவிரமாக செயல்பட்டால் தீர்வு கிடைக்கலாம்
ஒரு திரைபடத்தை திருட்டு விசிடியாக போடுவதற்கு ஏதாவது ஒரு திரையரங்கில் தான் எடுக்கவேண்டும் . முறையாக விசாரனை நடத்தினால் யார் அதனை செய்கிறார்கள் என்பதனை கண்டறிந்துவிடலாம் .
அதேபோல குறிபிட்ட இணையதள முகவரிகளை மட்டும் முடக்காமல் அதற்கடுத்து என்ன முகவரியை பயன்படுத்துவார்கள் என்பதனை கண்டறிந்து உடனுக்குடன் முடக்குகின்ற வேலையை செய்யவேண்டும் .
பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடலாம்.
TECH TAMILAN