Sunday, October 6, 2024
HomeTech Articlesஉலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்

உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்

யார் இந்த எலன் மஸ்க்

Elon Musk

உலகின் முதல் பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது டெஸ்லா நிறுவனத்தின் சந்தை உயர்வு காரணமாக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் எலான் மஸ்க்

ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் பிறந்த எலன் மஸ்க் தற்போது உலகின் இரண்டாவது பணக்காரர் ஆகியிருக்கிறார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு $127.9 பில்லியன். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களின் தற்போதைய சொத்து மதிப்பு $127.7 பில்லியன். இதன் காரணமாக, சில மணி நேரங்கள் எலன் மஸ்க் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். தற்போது இருவரும் $128 பில்லியன் அமெரிக்க டாலருடன் சம நிலையில் இருப்பதாக Bloomberg Billionaires தரவு சொல்கிறது. 

கடந்த ஆண்டு $7.2 பில்லியன் சொத்து மதிப்பை மட்டுமே பெற்றிருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மிக அதிகமாக உயர்ந்ததற்கு காரணம் அவர் உருவாக்கிய டெஸ்லா எனும் கார் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக உயர்ந்தது தான். அதன் பங்குகள் 524% உயர்ந்துள்ளது. அந்த பங்குகளின் மூலமாகத்தான் சுமார் $100 பில்லியன் அளவுக்கு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. தற்சமயம் டெஸ்லாவின் ஒரு பங்கு மதிப்பு $521.9

Elon-Musk-Tesla Roadster

பில்கேட்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு இன்னமும் கூட அதிகமாக இருந்திருக்கும். ஆனால் அவரும் அவரது மனைவியும் அவர்களது சொத்துக்களில் ஒரு பகுதியை தொடர்ச்சியாக அவர்களது பெயரில் செயல்படும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள். 2006 முதல் கிட்டத்தட்ட $27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நண்கொடையாக வழங்கியுள்ளனர். 

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். ஏற்கனவே அவரது ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாக நாசாவுடன் இணைந்து மனிதர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதுதவிரவும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும் இவர் முதலீடு செய்திருக்கிறார். 

எலான் மஸ்க் பற்றி விரிவாக இங்கே கிளிக் செய்து படியுங்கள்



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular