Sunday, November 24, 2024
HomeTech Articlesகூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை? என்ன நடக்கிறது?

கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை? என்ன நடக்கிறது?

Antitrust Suit

தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூகுள் நிறுவனத்தின் மீது புகார் எழுந்திருக்கிறது. இதனை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது.


அமெரிக்காவில் இருக்கும் Justice Department அதிகாரிகளால் கூகுள் நிறுவனத்தின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. கூகுள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது கூகுள் தேடுபொறி  ‘Google Search’. கூகுளை தவிர்த்து பல்வேறு தேடுபொறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனாலும் அதிகப்படியான நபர்களால் பயன்படுத்தப்படுவது ‘Google Search’ தான். அமெரிக்காவில் மட்டும் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 80% தேடல்கள் ‘Google Search’ மூலமாகத்தான் செய்யப்படுகிறது.

இப்போது குற்றசாட்டு என்னவெனில், இப்படி சர்ச் என்ஜின் போட்டியில் முன்னனியில் இருப்பதற்காக தவறான நடவெடிக்கைகளில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பதுதான் தற்போதைய குற்றசாட்டு. Justice Department ஆல் பின்வரும் குற்றசாட்டுகள் கூகுள் நிறுவனத்தின் மீது சுமத்தப்படுகிறது.

>> ஆப்பிள் மொபைல் போன்கள் விற்பனைக்கு வெளிவரும் போதே அதில் கூகுள் சர்ச் [Google Search] ஆப்பினை இன்ஸ்டால் செய்வதற்காக ஒப்பந்தம் ஒன்றினை கூகுள் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனம் செய்துகொண்டுள்ளன. கூகுள் ஆப் ஆப்பிள் மொபைல் போன்களில் இடம்பெறுவதற்க்காக பல மில்லியன் டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொடுக்கிறது கூகுள்.

>> கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு தான் ஆண்ட்ராய்டு இயங்குதளம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் இலவசம் என்பதனால் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன. அப்படி ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை பயன்படுத்தும்போது கூகுள் ஆப்களை இன்ஸ்டால் செய்திட கூகுள் நிறுவனம் வலியுறுத்துவதாக குற்றசாட்டு சுமத்தப்படுகிறது.

>> டிஜிட்டல் அட்வெர்டைஸிங் உலகில் முன்னனியில் இருப்பதற்கு கூகுள் நிறுவனம் எடுத்துவரக்கூடிய நடவெடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கும் கூகுள் நிறுவனம், நாங்கள் மற்ற இணைய உலகில் மற்றவர்களை அழுத்திடவில்லை மாறாக அவர்களைவிட ஒருபடி முன்னே செல்கிறோம் என தெரிவித்து உள்ளது. ஆனால் தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்தாக இருப்பது என்னவெனில், ஒரு தொழில்நுட்பத்தில் ஆரோக்கியமான போட்டி இல்லாமல் ஒரு நிறுவனம் மட்டும் ஆதிக்கம் செலுத்துக்கொண்டே வருவது அந்த குறிப்பிட்ட துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை தடை செய்யும் என கூறுகிறார்கள். அதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம் என கூறுகிறார்கள்.

இவ்விசாரணை முடிவில் அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். இல்லையேல் இருவரும் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். நீண்ட நாள்கள் வழக்கு நடைபெறும்.





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular