Tuesday, December 3, 2024
HomeAppsடிக்டாக்கை வாங்கும் போட்டியில் மைக்ரோசாப்ட் உடன் இணைந்த வால்மார்ட்

டிக்டாக்கை வாங்கும் போட்டியில் மைக்ரோசாப்ட் உடன் இணைந்த வால்மார்ட்

Walmart join with Microsoft to participate in TikTok Auction


டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இதில் வால்மார்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் கைகோர்த்து போட்டியிடுகிறது. ஆரக்கிள் நிறுவனமும் இந்த போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது

டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால் டிக்டாக் அமெரிக்காவில் விரைவில் தடை செய்யப்படும் என நிர்வாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் நீதிமன்றம் செல்வோம் என அறிவித்து இருந்தாலும் கூட டிக்டாக் அமெரிக்க உரிமையை விற்பதற்கான பணிகளையும் தொடர்ந்து வந்தது. 

 

ஏற்கனவே டிக்டாக்கை வாங்குவதற்கான போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அதேபோல ஆரக்கிள் நிறுவனமும் டிக்டாக்கை விலைக்கு வாங்க போட்டிபோட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மிகப்பெரிய வணிக ஜாம்பவானான வால்மார்ட் டிக்டாக்கை வாங்குவதற்கான போட்டியில் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறது.

டிக்டாக் மக்களால் வரவேற்கப்படுகிற சமூக வலைதளமாக மாறி இருக்கிறது. இதனால் இதில் விளம்பரங்கள் செய்திட பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இந்த விளம்பரங்களின் மூலமாக மிகப்பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வந்தது டிக்டாக் நிறுவனம். தற்போது அமெரிக்க பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதனால் டிக்டாக்கை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. 

 

Read More

டிக்டாக்கை மிரட்டும் டிரம்ப் | என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

டிக்டாக் தடை நீக்கப்படுமா



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular