Friday, September 20, 2024
HomeUncategorizedரூ100 க்கு இனி 1GB மட்டுமே | ஏர்டெல் சேர்மன் சுனில் மிட்டல் தகவல்

ரூ100 க்கு இனி 1GB மட்டுமே | ஏர்டெல் சேர்மன் சுனில் மிட்டல் தகவல்

Soon 1 GB data may cost Rs 100 – Sunil Mittal Airtel Chairman


தற்போது வழங்கப்பட்டு வருவது போல ரூ160 க்கு 16 GB டேட்டா வழங்கினால் டெலிகாம் நிறுவனத்திற்கு கட்டுப்படியாகாது. விரைவில் ரூ100 க்கு இனி 1GB அளவில் மட்டுமே டேட்டா வழங்கப்படும். கூடுதலாக பணம் செலுத்திட ஏர்டெல் பயனாளர்கள் தயாராகிக்கொள்ள வேண்டும் என சுனில் மிட்டல் தெரிவித்து இருக்கிறார்.



ஏர்டெல் சேர்மன் சுனில் மிட்டல் அண்மையில் பேசும்போது அடுத்த 6 மாதங்களில் மொபைல் சேவைக்கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவித்து இருக்கிறார். தற்போது வழங்கப்பட்டு வருவது போல டேட்டா உள்ளிட்ட மொபைல் சேவையை தொடர்ந்தால் டெலிகாம் நிறுவனங்களின் நிலைத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும். தற்போது ஒரு இந்திய பயனாளர் ரூ 160 க்கு 16ஜிபி டேட்டாவை பெறுகிறார் என்றால் வரும்காலங்களில் ரூ160 க்கு 1.6ஜிபி மட்டுமே பெறுவார். அந்த அளவிற்கு சேவைக்கட்டணங்கள் உயர வாய்ப்பு இருக்கிறது. ஏன் சுனில் மிட்டல் இவ்வாறு தெரிவிக்கிறார்? ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துமா? பார்க்கலாம்.

ஏர்டெல் கட்டணத்தை உயர்த்துவது ஏன்?

இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டாவின் விலை என்பது மற்ற நாடுகளான அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விற்கப்படுவதை விடவும் பல மடங்கு விலை குறைவாக விற்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது இந்தியாவில் 1GB டேட்டாவின் விலை $0.09 [இந்திய மதிப்பில் ரூ 6.64] ஆனால் இதே 1 GB டேட்டாவின் விலை அமெரிக்காவில் $8 [இந்திய மதிப்பில் ரூ 590] சிங்கப்பூரில் $2.47 [இந்திய மதிப்பில் ரூ182.21]. சுனில் மிட்டல் குறிப்பிட்டது போல உலகிலேயே குறைவான விலைக்கு டேட்டா விற்கப்படுவது இந்தியாவில் தான். இதனால் இந்தியாவிலும் கட்டணம் உயர்த்தப்படலாம் என சுனில் மிட்டல் தெரிவித்து இருக்கிறார. 

 

அதேபோல ஏர்டெல் நிறுவனம் ஒரு பயனாளரிடம் இருந்து நிறுவனத்திற்கு கிடைக்கிற வருவாயை [ARPU – average revenue per user] உயர்த்த எண்ணியுள்ளது. ARPU என்பது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை பயனாளர்களின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் கிடைப்பது. ஒரு நல்ல டெலிகாம் நிறுவனத்தின் ARPU என்பது Rs. 300 ஆகவாவது குறைந்தபட்சம் இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களில் குறைந்தது Rs. 200 ஆக உயர்த்திட நடவெடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


ஜியோ என்ன செய்யப்போகிறது?

ஜியோ வருகைக்கு பிறகு நடந்த மாற்றங்கள்

மலிவு விலையில் டேட்டாவை இந்திய பயனாளர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து அதனால் பெரும் வரவேற்பை பெற்றது ஜியோ நிறுவனம். ஒருவேளை சுனில் மிட்டல் சொல்லுவது போல ஏர்டெல் கட்டணத்தை வெகுவாக உயர்த்தினால் ஜியோ நிறுவனத்திற்கு பயனாளர்கள் அதிகம் பேர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஏர்டெல் அவ்வளவு எளிதில் அதனை செய்யாது என்றே எதிர்பார்க்கலாம். ஒருவேளை டெலிகாம் நிறுவனங்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று அனைத்து நிறுவனங்களும் கணிசமான அளவில் டேட்டாவை உயர்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தற்போதைக்கு கட்டண உயர்வு பற்றி ஜியோ சார்பாக எந்தவித தகவலும் இல்லை. 

 

இந்தியர்கள் அதிகபடியாக டேட்டாவை பயன்படுத்த பழகிவிட்ட இந்த சூழ்நிலையில் சுனில் மிட்டல் அவர்களின் இந்த அதிரடி அறிவிப்பு ஏர்டெல் பயனாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular