பிரபஞ்சத்தின் உண்மையான வயது பற்றிய குழப்பங்கள் வானியற்பியல் வல்லுநர்களிடம் நிலவி வந்த சூழலில் பிரபஞ்சத்தின் துல்லியமான வயது 13.8 பில்லியன் வருடங்கள் என கண்டறிந்து இருக்கிறார்கள்.
Atacama Cosmology Telescope (ACT) மூலமாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஸ்டோனி ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [Stony Brook University] நீலிமா சேகல் உள்ளிட்ட வானியற்பியல் வல்லுநர்கள் குழு பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் வருடங்களாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்கள். இந்த தகவலானது ஏற்கனவே பழைமையான ஒளியை ஆராய்ந்த பிளாங்க் செயற்கைகோளின் தகவலோடு சரியாகிப்போகிறது.
இந்த ACT குழுவானது 7 நாடுகளை சேர்ந்த 41 கல்வி நிறுவனங்களை சேர்ந்த அறிவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதனை ஸ்டோனி ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த [Stony Brook University] நீலிமா சேகல் வழிநடத்தி செல்கிறார். இந்த அமைப்பானது பிக் பேங்கிலிருந்து ஒளிரும் ஒளியின் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னனியை ஆராய்வதில் முக்கிய பங்காற்றியது. இந்தக்குழுவானது பிரபஞ்சத்தின் ஆரம்ப கால புகைப்படத்தை [baby photo] அதன் உண்மையான நிலையில் நிலைக்கு மீட்டெடுக்க முயல்கிறோம். இதற்காக படத்தை சிதைத்த சில விசயங்களை நீக்குகிறோம். மிகவும் சரியான பிரபஞ்சத்தின் ஆரம்பகால புகைப்படத்தை உருவாக்குவதின் மூலமாக மட்டுமே நமது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என்கிறார் சேகல்.
துல்லியமான ஆரம்பகால புகைப்படத்தை உருவாக்கிவிட்டால் நமது பூமி உட்பட பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதையும் இந்த பிரபஞ்சம் எப்படி சென்று கொண்டு இருக்கிறது என்பதையும் இறுதியாக இந்த பிரபஞ்சம் எப்படி முடிவடையும் என்பதையும் அது எப்போது நடக்கும் என்பதையும் கணிக்க முடியும் என கூறுகிறா சேகல். மேலும் தற்போது கண்டறியப்பட்ட பிரபஞ்சத்தின் வயது அறிவியலாளர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் கூறுகிறார் சேகல்.
2019 ஆம் ஆண்டில், விண்மீன் திரள்களின் இயக்கங்களை அளவிடும் ஒரு ஆய்வுக் குழு, பிரபஞ்சம் பிளாங்க் குழு கணித்ததை விட நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் இளையது என்று கணக்கிட்டது. அந்த முரண்பாடு பிரபஞ்சத்திற்கு ஒரு புதிய மாதிரி தேவைப்படலாம் என்று பரிந்துரைத்தது மற்றும் அளவீடுகளின் தொகுப்பில் ஒன்று தவறாக இருக்கலாம் என்ற கவலையைத் தூண்டியது. பிரபஞ்சத்தின் வயதானது இந்த பேரண்டம் எவ்வளவு வேகமாக விரிவடைகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இது ஹப்பிள் மாறிலியால் அளவிடப்படுகிறது.
ACT அளவீடுகள் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67.6 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு ஹப்பிள் மாறிலியைக் குறிக்கின்றன. அதாவது பூமியிலிருந்து 1 மெகாபார்செக் [megaparsec] (சுமார் 3.26 மில்லியன் ஒளி ஆண்டுகள்) ஒரு பொருள் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் காரணமாக வினாடிக்கு 67.6 கிலோமீட்டர் வேகத்தில் நம்மிடமிருந்து நகர்கிறது. பிளாங்க் செயற்கைக்கோள் குழுவால் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67.4 கிலோமீட்டர் என்ற முந்தைய மதிப்பீட்டை இந்த முடிவு கிட்டத்தட்ட ஒப்புக்கொள்கிறது, ஆனால் இது விண்மீன் திரள்களின் அளவீடுகளிலிருந்து ஊகிக்கப்படும் ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 74 கிலோமீட்டரை விட மெதுவாக உள்ளது.
ACT தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால், வானியலாளர்கள் அண்ட நுண்ணலை பின்னணியைப் பற்றிய தெளிவான படத்தையும், எவ்வளவு காலத்திற்கு முன்பு அண்டம் தொடங்கியது என்பதற்கான துல்லியமான சிந்தனையையும் கொண்டுள்ளனர். நிலையான அண்டவியல் மாதிரிக்கு பொருந்தாத இயற்பியலின் அறிகுறிகளுக்காக ACT குழு ஆய்வுகளை மேற்கொள்ளும். இத்தகைய ஆய்வுகளின் மூலமாக விசித்திரமான இயற்பியல் CMB இன் அளவீடுகள் மற்றும் விண்மீன் திரள்களின் இயக்கங்களிலிருந்து எழும் பிரபஞ்சத்தின் வயது மற்றும் விரிவாக்க வீதத்தின் கணிப்புகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை தீர்க்க முடியும்.
ACT ஆராய்ச்சிக்கு தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) நிதியளிக்கிறது, மேலும் ஸ்டோனி புரூக்கில் பேராசிரியர் சேகல் மற்றும் சக ஊழியர்களின் பணிகளுக்கும் NSF நிதியளிக்கிறது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.