Thursday, November 21, 2024
HomeUncategorizedWhatsApp Update : இனி பல போன்களில் ஒரே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்

WhatsApp Update : இனி பல போன்களில் ஒரே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் 2.20.143 பீட்டா வெர்சன் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் மிக முக்கியமான சிறப்பம்சம் தயாராவதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய அப்டேட் (Multi Device Feature) வந்தபிறகு ஒரு மொபைல் போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தப்பட்டு வந்தால் அதே மொபைல் எண்ணை பயன்படுத்தி இன்னொரு மொபைல் போனில் அல்லது டேப்லெட் உள்ளிட்ட கருவிகளில் இருக்கும் வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் பயன்படுத்த முடியும்.


தற்போது அப்படி பயன்படுத்த முடியாது. புதிய மொபைல் போனில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் பழைய மொபைல் போனில் இருக்கும் வாட்ஸ்ஆப்பில் லோகெட் செய்திட விடும். புதிய அப்டேட்டில் அப்படி செய்யவேண்டியது இல்லை..


மேலும் ஒரு மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால் அனைத்து கருவிகளிலும் நோட்டிபிகேசன் வரும் . நீங்கள் எந்த மொபைலில் இருந்து வேண்டுமானாலும் மெசேஜ் , அழைப்புகளை மேற்கொள்ள முடியும். நீங்கள் இந்த சேவையை பயன்படுத்த அதிவேக இன்டர்நெட் கொண்டிருப்பது அவசியம். அப்போதுதான் ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு தகவல் பரிமாற்றம் வேகமாக நடக்கும்..

எத்தனை மொபைல்களில் பயன்படுத்தலாம் , எப்போது இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை


Tech Tamilan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular