Youtube Revenue
தமிழகத்தின் சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கின்ற ஆல்பபெட் நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டு மொத்த லாபம் $161 பில்லியன் அதில் கிட்டத்தட்ட 9% லாபத்தை யூடியூப் பெற்றுத்தந்துள்ளது.
மிகப்பெரிய வீடியோ பிளாட்பார்ம் ஆக இருக்கக்கூடிய யூடியூப் கூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது [subsidiary company]. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமே ஆல்பபெட் எனும் நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டின் நிகர லாபகணக்கு வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள தகவல்படி ஆல்பபெட் நிறுவனத்தின் நிகர லாபம் $161,857 மில்லியன் டாலர் , அதில் யூடியூப் மூலமாக கிடைத்த வருமானம் மட்டும் $15,149 மில்லியன் டாலர். ஒட்டுமொத்த ஆல்பபெட் நிறுவனத்தின் லாபத்தில் இது ஒன்பது சதவிகிதத்திற்கும் நெருக்கமான தொகை.
யூடியூப் தளத்தின் மூலமாக கூகுள் நிறுவனத்திற்கு கிடைக்கின்ற லாபம் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. 2017 இல் $8 பில்லியன் டாலர், 2018 இல் $11 பில்லியன் டாலர், 2019 இல் $15 பில்லியன் டாலர் என வளர்ச்சி அடைந்திருக்கிறது. கூகுள் நிறுவனம் தங்களுக்கு யூடியூப் இல் விளம்பரத்தின் மூலமாக கிடைக்கின்ற 45% வருவாயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை publishers மற்றும் வீடியோ வை பதிவேற்றுகிறவர்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறது. 2019Q4_alphabet_earnings_release.pdf
உங்களுக்கு தெரியுமா? யூடியூப் நிறுவனம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதல்ல.
யூடியூப் ஐ விலைக்கு வாங்கிய கூகுள்
https://youtu.be/3ZVUXvFNMpgஇன்று கூகுள் நிறுவனத்திற்கு கீழ் தான் யூடியூப் செயல்பட்டு வருகிறது. உண்மையில் கூகுள் நிறுவனம் யூடியூப் என்ற நிறுவனத்தை உருவாக்கவில்லை. யூடியூப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை PayPal நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான Chad Hurley, Steve Chen, and Jawed Karim என்ற மூவர் தான் பிப்ரவரி,2005 இல் உருவாக்கினார்கள். கூகுள் நிறுவனமும் கூட அப்படியொரு வீடியோ பிளாட்பார்ம் ஐ உருவாக்க நினைத்தது. ஆனால் யூடியூப் க்கு கிடைத்த வரவேற்பு அதற்கு கிடைக்கவில்லை. வியாபார உலகில் ஒரு மந்திரம் இருக்கிறதே “சிறப்பான ஒன்றை உருவாக்க வேண்டும் முடியவில்லையா அதை விலைக்கு வாங்கிவிட வேண்டும்”. அதைத்தான் கூகுள் நிறுவனம் அப்போது செய்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டில் $1.65 பில்லியன் க்கு யூடியூப் ஐ விலைக்கு வாங்கியது கூகுள். அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்பட்டது. பலர் கூகுள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து யூடியூப் ஐ விலைக்கு வாங்கியிருக்கிறது என குறை சொன்னார்கள். ஆனால் கூகுள் இன்று பெரும் லாபத்தை அதே யூடியூப் வாயிலாக பெற்றுவருகிறது.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.