Friday, November 22, 2024
HomeAppsஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

Shopper Malware

உலக அளவில் Shopper Malware ஆல் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம், உங்களுக்கு தெரியாமலே இன்ஸ்டால் ஆகும் இந்த மால்வேர் விளம்பரங்களை காட்டுவது, உங்களது பெயரால் ரிவியூ போடுவது போன்ற விசயங்களை செய்யும்.

முன்னனி ஆன்டிவைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கை [Kaspersky], ட்ரோஜன் வகை ஷாப்பர் மால்வேரால் [Shopper Malware] 14.23% க்கும் அதிகமான இந்தியர்களின் மொபைல் போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மொபைல் உரிமையாளரின் அனுமதி இன்றி அவருக்கு தெரியாமலே இன்ஸ்டால் ஆகிவிடும் இந்த மால்வேர், மொபைல் உரிமையாளரின் பெயரால் பல ஆப்களுக்கு review எழுதுவது , மொபைலை ஆன் செய்யும் போது விளம்பரங்களை காட்டுவது பிற ஆப்களை இன்ஸ்டால் செய்வது என பல்வேறு வேலைகளை செய்கிறது. 

ஷாப்பர் மால்வேர் எப்படி செயல்படுகிறது?

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

ரஷ்யாவில் அதிகப்படியான நபர்களின் ஸ்மார்ட் போன்களை தாக்கியுள்ள ‘Trojan-Dropper. AndroidOS.Shopper.a’ ஆனது பிற இணையதளங்களில் தோன்றும் விளம்பரங்களை கிளிக் செய்திடும் போதோ அல்லது பிற இணையதளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்திடும் போதோ உங்களது மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். இன்ஸ்டால் ஆனவுடன் உங்களது மொபைலின் முழு கட்டுப்பாட்டையும் ஹேக்கர்களுக்கு வழங்கும். உங்களது மொபைல் ஸ்கிரீன் ஐ ஆப் செய்துவிட்டு ஆன் செய்யும் போது விளம்பரங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல் உங்களது மொபைலில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதனையும் ஹேக்கர்களுக்கு தெரிவிக்கும். 

 

அதோடு நின்றால் பரவாயில்லை, உங்களது மொபைலில் இருக்கும் பேஸ்புக், கூகுள் அக்கவுண்ட் மூலமாக ஷாப்பிங் ஆப்களில் [like Jabong, MakeMyTrip, Dailyhunt, Hotstar, AliExpress, Lazada, Shein, Alibaba, Joom, Zalora] உங்களது பெயரில் கணக்குகளை ரிஜிஸ்டர் செய்யும். அதேபோல உங்களது பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் ரிவியூக்களை பதிவிடும். உங்களுக்கு இவை எதுவுமே தெரியாது. அதேபோல புதிய ஆப்களைக்கூட உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துவிடும். 

 

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் முதல் தடவை மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆகவே இதுபோன்ற பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். Data Security Council of India (DSCI) வெளியிட்டுள்ள தகவல் படி இந்தியர்கள் தான் இரண்டாவதாக அதிகம்  சைபர் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

 

உங்களது மொபைல் பாதிக்கப்பட்டிருக்கா? 

 

>> உங்களது மொபைல் ஸ்கீரினை ஆப் செய்து ஆன் செய்யும் போது விளம்பரம் தோன்றுகிறதா? 

 

>> Settings இல் ConfigAPKs என்ற பெயரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் ஆகி இருக்கிறதா? 

 

இல்லையென்றால் பாதிப்பில்லை. கூடுதலாக, Google Play Protect status ‘ON’ இல் இருக்கிறதா என பாருங்கள். 

 

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பதிவை அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular