Friday, November 22, 2024
HomeAppsWhat happen to your GOOGLE DATA after you dead?

What happen to your GOOGLE DATA after you dead?


இணையம் பயன்படுத்துகின்ற அனைவரும் கூகுளின் Gmail , Drive போன்ற பல ஆப்களை பயன்படுத்திடுவோம் . அதில் பல முக்கியமான தகவல்களையும் சேமித்து வைத்திருப்போம் .

 

 

திடீரென நாம் இறந்துபோனால் நாம் சேமித்து வைத்த தகவல்கள் என்னாகும் ? இந்த கேள்வி நம் ஒவ்வொருவருக்குமே கண்டிப்பாக எழும் .

 

    • அந்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களால் பெற முடியுமா ?

 

    • Google நமது தகவல்களை இறப்பிற்கு பிறகு அழித்துவிடுகிறதா ?

 

 

 இதுபோன்ற கேள்விகளுக்கு தான் பதில்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .

 


திடீரென மறைந்துபோகும் நபரின் கூகுள் அக்கவுண்டில் (Google Account) நீங்கள் பின்வருவனவற்றை உங்களால் செய்திட முடியும்.

 

    • இறந்தவரின் அக்கவுண்ட் தகவல்களை முழுவதுமாக நீக்க சொல்லலாம் .இறந்தவரின் adsense , wallet களில் இருக்கும் பணத்தினை பெற விண்ணப்பிக்க முடியும் .

 

    • இறந்தவரின் அக்கவுண்டில் இருந்து ஏதேனும் தகவல்களை டவுன்லோடு செய்யவும் விண்ணப்பிக்கலாம் .

 

Here is the form to request regarding a deceased user’s account

 

 

 


நாம் உயிருடன் இருக்கும்போதே யாருக்கு தகவல்கள் கொடுக்கப்படவேண்டும் என்பதனை தீர்மானிக்க முடியுமா ?

 

நீங்கள் எதிர்பாராதவிதமாக இறந்துபோனால் குறிபிட்ட தகவல்கள் யாருக்கேனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என விரும்பினாலோ அல்லது தன்னுடய தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என விரும்பினாலும் அதனை உயிரோடு இருக்கும்போதே செய்ய முடியும் .

 

What happen to your Google data after your death
What happen to your Google data after your death

 

கூகுள் இதற்காகவே Inactive Account Manager என்னும் டூலினை பயன்படுத்துகிறது .

 


About Inactive Account Manager

 

 

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நமது ஜிமெயில் (Gmail) இல் எந்தவொரு செயல்பாடும் இல்லையெனில்  பிறருக்கு தகவல்களை தெரிவிக்க ,குறிப்பிட்ட தகவல்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள அனைத்து ஆப்சன்களையும் வழங்குகின்றது Inactive Account Manager.

 

 


How Google detect activity?

 

ஒரு அக்கவுண்ட் (Google Account) செயல்படாமல் இருக்கிறதா என்பதனை கூகுள் கண்டறிவதற்கு உங்களது அக்கவுண்ட் கடைசியாக எப்போது login செய்யப்பட்டது , gmail பயன்பாடு , ஆண்ட்ராய்டு மொபைலில் ஜிமெயில் ஆப் உள்ளிட்ட அனைத்துமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் .

யாரால் தகவல்களை பெற முடியும்?

 

கூகுள் வேறு ஒருவருடைய password உள்ளிட்டவற்றை எவருடன் பகிர்ந்துகொள்வதில்லை

உங்களுக்கு பிறகு யார் உங்களது தகவல்களை பார்க்கலாம் என விரும்புகிறீர்களோ அவர்களின் தகவல்களை அளித்திடுங்கள் .

 

கூகுள் சரியான நபரை கண்டறிவதற்கு மொபைல் எண்ணை பயன்படுத்துகின்றது . இதன் மூலமாக தவறான நபர் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்வது தடுக்கப்படுகிறது .

 

உங்களது அக்கவுண்ட் குறிப்பிட்ட கால இடைவெளிவரை பயன்படுத்தப்படாமல் இருந்தால் கூகுள் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு notification அனுப்பும் . அந்த notification இல் யாருடைய அக்கவுண்ட் செயல்படாமல் போனதால் notification வருகின்றது போன்ற தகவல்கள் இருக்கும் .

 

உதாரணமாக வருகின்ற ஈமெயில் இப்படிதான் இருக்கும்

 

 

உங்களுடைய அக்கவுண்ட் deactivate ஆன பிறகு எந்ததெந்த தகவல்களை அடுத்தநபர் தெரிந்துகொள்ளலாம் அல்லது டவுன்லோடு செய்யலாம் என விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திட முடியும்

 

குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தகவல்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம் .

 


How to setup Inactive Account Manager ?

 

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

 

கிளிக் Start Button

 

 

Select Awaiting Period 3,6,12,18 Months
Add your phone number
 Enter Contact Email and Recovery Email
கிளிக் NEXT

 

 

ADD PERSON – யாருக்கு அலர்ட் செல்ல வேண்டுமோ , யாருடன் தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்களோ அவர்களின் மின்னஞ்சலை குறிப்பிடுங்கள்
AUTO REPLY – குறுந்தகவலை நீங்களே தயார் செய்து கொள்ளலாம் . உங்களுடைய அக்கவுண்ட் Inactive ஆகும்போது இந்த குறுந்தகவல் அனுப்பப்படும்.
கிளிக் NEXT

 

 

 

உங்களுடைய தகவல்கள் கூகுலிலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்றால் இந்த ஆப்சனை ஆன் செய்திடுங்கள்
 Yes, delete my inactive Google Account
கிளிக் Review Plan
கிளிக் Confirm Plan

 

 தகவல் இன்று அத்தியாவசியமாகிவிட்டது , பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு . இன்றே உங்களது gmail inactive account manager ஐ பயன்படுத்திடுங்கள் .

 


Pamaran Karuthu
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular