Sunday, November 10, 2024
HomeTech Articles23 வயதில் 88 லட்சம் சம்பாதித்த இந்திய ஹேக்கர் | சிவம் வசிஷ்ட் | Shivam...

23 வயதில் 88 லட்சம் சம்பாதித்த இந்திய ஹேக்கர் | சிவம் வசிஷ்ட் | Shivam Vashist

Indian Hacker Shivam Vasist

Ethical Hacking

இந்தியாவை சேர்ந்த சிவம் வசிஷ்ட் 2018 ஆம் ஆண்டில் மட்டும் எத்திகள்
ஹேக்கிங் மூலமாக 88 லட்சம் சம்பாதித்து உள்ளார். இந்திய அளவில் 2018 இல் எத்திகள்
ஹேக்கிங்கில் அதிகம் சம்பாதித்தவர் இவரே.


ஹேக்கிங் என்றாலே யாருடைய தகவலையோ திருடுவது என்று தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அது மட்டுமே ஹேக்கிங் அல்ல.  Ethical hacking என்ற ஒரு பாடப்பிரிவே தற்போது இருக்கிறது. இவர்களின் பணி என்னவென்றால் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கின்ற மென்பொருள்களில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதனை கண்டறிந்து கூறுவது தான். 

உதாரணத்திற்கு கூகுள் புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வெளியிடுகிறது என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது எனில் அதை கூகுள் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் என்னவாகும்? பயனாளர்கள் பயன்படுத்தும் போது அந்த பிரச்சனையை பயன்படுத்தி தவறான நபர்கள் தகவல்களை திருடிவிட முடியும் அல்லவா. இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய கம்பெனிகள் எத்திகள் ஹேக்கர்களை அழைத்து அவர்களிடம் குறைபாடுகள் இருக்கின்றனவா என சோதனை செய்யச்சொல்வார்கள். எத்திகள் ஹேக்கர்களும் தங்களால் இயன்ற அளவில் குறைபாடுகளை கண்டறிய முயலுவார்கள். அப்படி குறைபாடுகளை கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கு நிறுவனங்கள் பரிசுகளை [bug bounty] வழங்கும். 

இந்தியாவை சேந்த பல்வேறு இளைஞர்கள் எத்திகள் ஹேக்கிங் கில் ஆர்வம் உடையவர்களாக இருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது. வட இந்தியாவை சேர்ந்த சிவம் வசிஷ்ட் அவர்களும் அதில் ஒருவர் தான். இவர் சான்பிரான்சிஸ்க்கோவை மையமாக வைத்து செயல்படும் Hacker One என்ற தளத்தில் இயங்குகிறார். இதில் tarbucks, Instagram, Goldman Sachs, Twitter, Zomato, and OnePlus போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. 

Indian Hacker Shivam Vasist

Hacker One என்ற அமைப்பு வெளியிட்டுள்ள Hacker-Powered Security Report 2019 ரிப்போர்ட் படி  தவறுகளை கண்டறிந்து கூறியதற்காக 2018 இல் 16.62 கோடி இந்தியாவை சேர்ந்த ஹேக்கர் குரூப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுமைக்கும் 149.42 கோடி ரூபாயை ஹேக்கர்கள் சம்பளமாக பெற்றுள்ளனர். நாம் அன்றாடம் பயன்படுத்துகிற உணவு ஆர்டர் செய்கின்ற Zomato, இதுவரைக்கும் 70 லட்சம் ரூபாயை தவறுகளை கண்டறிந்து கூறியவர்களுக்கு கொடுத்து இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கூட தனியே bug bounty programme ஐ நடத்துகிறது. இதில் தவறுகளை கண்டறிந்து கூறுகிறவர்களுக்கு $100,000 முதல் $1 மில்லியன் வரை கொடுக்கிறது.

 

சிவம் வசிஷ்ட்டை பொறுத்தவரைக்கும் தன்னுடைய 19 ஆம் வயதில் தான் கணினி மற்றும் ஹேக்கிங் குறித்து மிக அதிகமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் மகன் இதுகுறித்து படிக்க துவங்கி இருப்பது கண்டு பெற்றோருக்கு அச்சம் ஏற்படவே செய்திருக்கிறது. பிறகு இந்த துறை குறித்த உண்மையை அறிந்துகொண்ட பின்னர் அவர்களும் சிவம் வசிஷ்ட் க்கு துணையாக இருந்துள்ளனர். தான் முதன் முறையாக 20 வயதில் தான் முதல் வருமானத்தை பெற்றதாகவும் அப்போது அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாகவும் இருந்தது என நினைவு கூறுகிறார் சிவம் வசிஷ்ட். 

சிவம் வசிஷ்ட் அவர்களின் பார்வைப்படி இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்து வருகிறது ஆனால் பாதுகாப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. இன்னமும் நமது தொழில்நுட்பங்களில் பல்வேறு தவறுகள் கண்டறியப்படாமலே இருக்கின்றன என்கிறார் சிவம் வசிஷ்ட். தற்போது பல்வேறு இந்திய நிறுவனங்களும் தவறுகளை கண்டறிந்து கூறும் bug bounty programme களை நடத்த துவங்கி இருப்பதாகவும் வரும்காலங்களில் எத்திகள் ஹேக்கிங்கை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பெருதும் ஏற்படும் என்பது சிவம் வசிஷ்ட் நம்பிக்கையோடு கூறுகிற வார்த்தைகள்.

 

Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular