Friday, November 22, 2024
HomeTech Articlesவிண்வெளி ஆராச்சிகளை எளிதாக்கும் கியூப்சாட் | What is CubeSat? | Purpose

விண்வெளி ஆராச்சிகளை எளிதாக்கும் கியூப்சாட் | What is CubeSat? | Purpose

CubeSat - கியூப்சாட்

CubeSat

1 கிலோகிராம் முதல் 10 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைகோள்களை நேனோசாட்டிலைட்ஸ் [Nano Satellites] என சொல்லுவார்கள். அதற்குள் பல வகைகள் உண்டு, அதில் ஒன்று தான் கியூப்சாட் [CubeSat].

நிலத்தை ஆக்கிரமிப்பதில் தான் பல நாடுகளுக்கு போட்டியென்று நிறுத்திக்கொள்ள முடியாது. விண்வெளியை ஆக்கிரமிப்பதில் கூட அவர்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மிகப்பெரிய அளவில் போட்டி நிலவியது. ஆனால் நிலவிற்கு வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி தன்னை முன்னிலைபடுத்திக்கொண்டது அமெரிக்கா.அதன் பிறகான கால கட்டங்களில் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் மிகத்தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.

 

2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி சீனாவின் Chang’e 4 திட்டம் வெற்றி பெற்றது. நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக செயற்கைகோள் தரைஇறங்கியது. அதோடு Yutu 2 என்ற ரோவரும் சென்றது. இந்தியாவும் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. 

 

நிலவில் தங்களது ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிட வேண்டும் என்பதுதான் பல நாடுகளின் குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் அவ்வளவு எளிமையாக அதை செய்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. காரணம், நீர், எரிபொருள் போன்றவை அங்கே அமையவிருக்கும் நிலையத்திற்கு அவசியமானதாக இருக்கும். நிலவில் இருக்கக்கூடிய பொருல்களில் இருந்து இவற்றை உருவாக்கிட இயலும் என்றாலும் கூட அதற்க்கு முன்னதாக செய்யப்படவேண்டிய ஆய்வுகள் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

ஒவ்வொரு முறையும் நிலவிற்கு விண்கலனை அனுப்புவது என்பது மிகவும் சவாலான காரியம். அதேபோல அதிக செலவும் ஆகக்கூடிய விசயம். இப்படிப்பட்ட சூழலில் தான் கியூப்சாட் என்ற ஒரு கருத்துரு உருவானது. 1999 ஆம் ஆண்டு இரண்டு அமெரிக்க கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது தான் கியூப்சாட்.ஆரம்பகட்டத்தில் விண்வெளி நிலையம் மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்துகொள்வதற்கான ஒரு மாதிரியாகத்தான் கியூப்சாட் உருவானது. பிறகு இந்த தொழில்நுட்பம் பலரால் விருப்பப்பட்டு நிஜமாகவே விண்ணில் ஏவப்பட்டது.

தற்போது வரைக்கும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளால் 200 க்கும் மேற்பட்ட கியூப்சாட் செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கியூப்சாட் என்றால் என்ன?

CubeSat - கியூப்சாட்

1 கிலோகிராம் முதல் 10 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைகோள்களை நேனோசாட்டிலைட்ஸ் [Nano Satellites] என சொல்லுவார்கள். அதற்குள் CubeSats , PocketQubes, TubeSats , SunCubes, ThinSats போன்றவையும் அடங்கும்.

 

தற்போது எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி அடைந்திருப்பதனால் மிகவும் சிக்கலான அதே சமயம் குறிப்பிட்ட வேலையை செய்யக்கூடிய திறனுள்ள கியூப்சாட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி பின்வரும் பல்வேறு அளவுகளில் கியூப்சாட் வகைப்படுத்தப்படுகின்றன.

 

1U கியூப்சாட் >> 10cm x 10cm x 11.35cm

2U கியூப்சாட்  >> 10cm x 10cm x 22.7cm

6U கியூப்சாட் >> 20cm x 10cm x 34.05cm

12U கியூப்சாட் >> 20cm x 20cm x 34.05cm

 

மிகச்சிறிய கியூப்சாட் 0.25U மற்றும் மிகப்பெரிய கியூப்சாட் 27U. இதுவரைக்கும் மிகச்சிறியதில் 0.25U அளவிலான கியூப்சாட் அனுப்பப்பட்டுள்ளது மற்றும் மிகப்பெரியதில் 12U வரைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்கா 16U மற்றும் சீனா 20U கியூப்சாட்களை அனுப்ப இருக்கின்றன.

1960 களில் ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் ரேடியோ தொலைத்தொடர்புக்காக அனுப்பப்பட்டது. அது அளவில் மிகப்பெரியதும் கூட. இதே பணியை செய்துமுடிக்க கூடிய 1U கியூப்சாட் [10cm x 10cm x 11.35cm] தற்போது போதும் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைந்த செலவில் மிக அதிக அளவிலான கியூப்சாட்களை நம்மால் விண்வெளிக்க அனுப்ப இயலும். ஆகவே தான் விண்வெளி சோதனைகளில் பல சாதனைகளை மனிதன் எட்டுவதற்கு கியூப்சாட் மிகப்பெரிய அளவில் பயன்படப்போகிறது.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular