உலகின் முன்னனி Chat ஆப்பான WhatsApp புதிதாக Stickers அனுப்பிடும் வசதியினை கொண்டுவந்தது . இந்த தீபாவளிக்கு பலரும் Stickers ஐ நண்பர்களுக்கு பெரிய அளவில் பகிர்ந்துகொண்டதை பார்க்க முடிந்தது .
ஆனால் இன்னும் சிலரது WhatsApp ஆப்பில் Stickers ஆப்சன் வராமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர் . அது ஏன் எனவும் , உங்களது போட்டோக்களை கூட இனி Stickers ஆக எப்படி பயன்படுத்திடலாமே அது எப்படி எனவும் தான் பார்க்க இருக்கின்றோம் .
Why Stickers option not available in your What’sApp?
உங்களது WhatsApp இல் Stickers ஆப்சன் இருக்கிறதா என்பதனை கண்டறிய , Smiley பட்டனை அழுத்திடுங்கள் . பின்னர் கீழே முதலாவதாக ஸ்மைலி ஆப்சனும் , அடுத்ததாக GIF ஆப்சனும் மூன்றாவதாக Stickers ஆப்சனும் இருக்கும் . அப்படி Stickers ஆப்சன் இல்லையெனில் உங்களது WhatsApp version என்னவென்பதனை முதலில் பாருங்கள் .
உங்களது WhatsApp version 2.18.339 அல்லது அதற்கு அதிகமானதாக இருக்கிறதா என பாருங்கள் . உங்களது version பழையதாக இருந்தால் Stickers ஆப்சன் இருக்காது . உங்களது WhatsApp, playstore இல் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும் கவலை வேண்டாம் . WhatsApp இன் இணையதளத்திற்கு சென்று புதிய WhatsApp ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் .
Link : https://www.whatsapp.com/android/
[It’s an official site so you can proceed download, but keep in mind that don’t download app from any third party sites]
பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி ஸ்மைலி பட்டனை அழுத்தினால் உங்களால் stickers ஆப்சனை பார்க்கலாம் .
How to make your photos as What’sApp stickers?
எத்தனை நாட்கள் தான் அடுத்தவர்களின் முகபாவங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பிக்கொண்டு இருப்பது . நமது போட்டோக்களை ஸ்டிக்கர்களாக அனுப்பினால் எவ்வளவு அருமையாக இருக்கும் . இதனை செய்ய முடியுமா ? என கேட்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கான பதில் “முடியுமே” என்பதுதான் .
‘Sticker maker for WhatsApp‘ என்ற மொபைல் ஆப் உங்களது போட்டோக்களையே ஸ்டிக்கர்களாக பயன்படுத்திடக்கூடிய வாய்ப்பினை வழங்குகின்றது .
இந்த ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ளவும்
பின்னர் உங்களுடைய எந்த போட்டோ ஸ்மைலி ஆக வேண்டுமோ அந்த போட்டோவை select செய்துகொள்ளவும்
பின்னர் தேவையான அளவு செலக்ட் செய்து கொள்ளவும்
குறைந்தபட்சம் மூன்று போட்டோக்களை செலக்ட் செய்தவுடன் உங்களால் “Sticker Pack” ஐ உங்களால் டவுன்லோட் செய்திட முடியும் .
நீங்கள் “Publish” செய்தவுடன் உங்களது WhatsApp இல் Sticker Pack ஐ Add செய்ய வேண்டுமா என கேட்கும் . ஒப்புதல் கொடுத்தவுடன் உங்களது WhatsApp இல் உங்களது Stickers இணைக்கப்பட்டுவிடும் .
அதனை உங்களது நண்பர்களுக்கு அனுப்பிடவும் முடியும் .
சந்தோசமா ?
TECH TAMILAN
[…] வாட்ஸ் ஆப்பில் ஸ்டிக்கர்ஸ் ஆப்சனை பெ… […]
[…] சாட் ஆப்பாக இருக்கக்கூடிய WhatsApp, பழைய இயங்குதளங்களை கொண்டுள்ள […]