Friday, November 22, 2024
HomeAppsஉங்களது facebook account disabled ஆகிவிட்டதா? என்ன செய்ய வேண்டும்?

உங்களது facebook account disabled ஆகிவிட்டதா? என்ன செய்ய வேண்டும்?

Facebook Account Disabled

Facebook உங்களது கணக்கை நீக்கிவிட்டால் அதனை திரும்பப்பெறுவது மிகவும் கடினமானது. ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவதே மிகவும் சரியானது. இருந்தாலும் தவறாக உங்களது கணக்கு முடக்கப்பட்டால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.



Click Here! Get Updates On WhatsApp

Important Form Links :

Form Link 1 : https://www.facebook.com/help/contact/260749603972907

Form Link 2 : https://www.facebook.com/help/contact/317389574998690

facebookநிறுவனம் தனது ஆப்பினை பயன்படுத்துகிறவர்கள் பின்பற்றிட வேண்டிய வழிமுறைகளை வகுத்திருக்கிறது. அதனை பின்பற்றாதபோது அந்த குறிப்பிட்ட நபருடைய கணக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படுகிறது. எந்த சூழல்களில் facebook கணக்கு முடக்கப்படும் அப்படி முடக்கப்பட்டால் நீங்கள் எப்படி மேல்முறையீடு செய்யலாம் என்பது குறித்துதான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

 பேஸ்புக் எதற்காக அக்கவுண்ட்டை நீக்குகிறது என தெரிந்துகொள்ள படியுங்கள்

ஏன் Facebook கணக்கு முடக்கப்படுகிறது?

facebook mark zukerberg

facebookபல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முடிந்த அளவிற்கேனும் உண்மையான நபர்கள் தான் facebook கணக்கை பயன்படுத்துகிறீர்களா என சோதனை செய்யும். அதில் முதல் படியாக Fake name இல் செயல்படும் கணக்குகள் தான் முதலில் முடக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் நீங்கள் தான் உண்மையான நபர் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து உங்களது கணக்கை மீட்கலாம். 

 

அடுத்தது நாம் இடும் பதிவுகள். அடுத்தவர்களை இழிவு படுத்தும் விதமாகவோ , வன்முறையை தூண்டும் விதமாகவோ, பாலியல் தொடர்பாகவோ பதிவுகளை இடும் போது தானாகவே facebook அதனை கட்டிபிடித்து நமது கணக்கை முடக்கலாம் அல்லது எவரேனும் நமது போஸ்ட் ஐ ரிப்போர்ட் செய்தாலும் கூட facebook அதனை ரிவியூ செய்து பிறகு நமது கணக்கை முடக்கலாம். 

 

தற்போது facebook இல் கணக்கினை உண்மையான பெயரைக்கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும். நமது விருப்பத்திற்கு “எனது இந்தியா” ” தமிழன்டா” என்பது போன்ற பொதுப்பெயர்களில் கணக்குகளை துவங்குவதை தடை செய்திருக்கிறது. மேலும் ஆள்மாறாட்டம் செய்வதும் குற்றம். அதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தாலும் உங்களது கணக்கு முடக்கப்படும். 

 

தற்போது “Content Rights” க்கு facebook அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி அடுத்தவர்களது வீடியோக்களை நாம் நமது கணக்கில் அப்லோட் செய்திடும் போது facebook அதுகுறித்து நமக்கு தெரியப்படுத்திவிட்டு அந்த வீடியோவை நீக்கிவிடுகிறது. நாம் மீண்டும் மீண்டும் இதே போன்று அடுத்தவர்களது வீடியோவை அப்லோட் செய்தால் நிரந்தரமாகவே நமது கணக்கு நீக்கப்படும்.

 

அதேபோல தவறான நோக்கத்திற்க்காகவோ அல்லது விளம்பரம் செய்திடும் நோக்கத்திற்க்காகவோ அல்லது வேறு நோக்கத்திற்க்காகவோ அடுத்தவர்களை தொடர்ச்சியாக அணுகிக்கொண்டே இருந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.

 

தொடர்ச்சியாக அதிகம்பேருக்கு Friend Request கொடுப்பதும் கூட ஒருவகையில் உங்களது கணக்கை முடக்குவதற்கு காரணமாக அமையலாம்.

எத்தனை நாட்கள் உங்களது கணக்கு முடக்கப்படும்?

இரண்டு விதமாக facebook கணக்கு முடக்கப்படும். ஒன்று நிரந்தமாக அல்லது தற்காலிகமாக. அது நீங்கள் செய்திடும் தவறைப்பொறுத்தது. 

 

தற்காலிக முடக்கம் – சில நிமிடங்கள், 24 மணி நேரம், 7 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள் , மாதம் அல்லது அதற்க்கு மேல். 

 

நிரந்தர முடக்கம் – நீங்கள் ஏற்கனவே ஒரு தவறுக்காக தற்காலிகமாக முடக்கப்பட்டு பிறகு மீண்டும் மீண்டும் அதே வேலையை செய்தால் ஒரு கட்டத்தில் உங்களது கணக்கு நிரந்தமாக முடக்கப்பட்டுவிடும்.

தற்காலிக முடக்கம் [TEMPORARY FACEBOOK DISABLE] அல்லது நிரந்தர முடக்கம் [PERMANENT FACEBOOK DISABLE]

தற்காலிக முடக்கம் [TEMPORARY FACEBOOK DISABLE]
நிரந்தர முடக்கம் [PERMANENT FACEBOOK DISABLE]

பேஸ்புக் உங்களது கணக்கை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கி இருக்கலாம். நீங்கள் அதனை தெரிந்துகொள்வது மிகவும் எளிது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுவிட்டால் உங்களால் என்ன செய்தாலும் அந்த கணக்கை மீட்கவே முடியாது. 

உங்கள் facebook account disabled ஆகிவிட்டால் என்ன செய்யவேண்டும்?

facebook going to share user data with government against hate speech

உங்களது facebook கணக்கு தவறாக முடக்கப்பட்டுவிட்டது என நீங்கள் நினைத்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். அதற்க்கு பின்வரும் form ஐ கிளிக் செய்து பின்வரும் தகவல்களை கொடுக்க வேண்டும். 

 

Form Link : https://www.facebook.com/help/contact/260749603972907

 

>> Login email address or mobile phone number கொடுக்க வேண்டும் 

 

>> Your full name [உங்களது பெயரை கொடுக்க வேண்டும்] 

 

>> அடுத்ததாக நீங்கள் தான் அந்த கணக்கிற்கு உரிமையாளர் என்பதை நிரூபிக்க அடையாள அட்டை ஒன்றில் உங்களது பெயர் மற்றும் புகைப்படம் போன்றவை தெளிவாக தெரியும்படி ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். 

 

நீங்கள் இதனை செய்தவுடன் உங்களது ஈமெயில் க்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். சிலமணி நேரத்திற்கு பிறகு உங்களது கணக்கினை ரிவியூ செய்து நீங்கள் மேல்முறையீடு செய்தது சரியென்றால் உங்களது கணக்கை திரும்ப கொடுப்பார்கள். இல்லையேல் விளக்கம் மட்டும் கொடுக்கப்படும். பெரும்பாலும் உங்களது கணக்கு முடக்கப்பட்டது திரும்பத்தரப்படமாட்டாது.ஆகவே நீங்கள் முன்னரே விதிமுறைகளை பின்பற்றி செயல்படுதலே நல்லது.

 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular