Friday, September 20, 2024
HomeTech Articlesபெங்களூர் பள்ளியில் பாடம் நடத்தி அசத்தும் ரோபோ | Eagle 2.0 robo teach lessions...

பெங்களூர் பள்ளியில் பாடம் நடத்தி அசத்தும் ரோபோ | Eagle 2.0 robo teach lessions in bengaluru shoolh

Robo Teacher

பெங்களூரு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்துகிறது ஈகிள் ஹியூமனாய்ட் ரோபோ



Click Here! Get Updates On WhatsApp

எந்திரன் திரைப்படத்தில் ஹியூமனாய்ட் ரோபோ ஒன்று ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். வெளிநாடுகளில் இருக்கும் சில பள்ளிகளில் கூட இப்படிப்பட்ட ரோபோக்கள் பாடம் நடத்த பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பெங்களூரு இந்துஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 7 – 9 வரையிலான மாணவர்களுக்கு விலங்கியல், வேதியியல் மற்றும் புவியியல் பாடங்களையும் மாணவர்கள் பாடங்களில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. என்னதான் இருந்தாலும் மனித ஆசிரியர்களுக்கு ஈடாக ரோபோவால் செயல்பட முடியாது என்பது தான் எதார்த்தம்.

வீட்டில் உருவான ரோபோ

ராவ் தலைமையிலான 17 பேர் கொண்ட குழுவில் ஆசிரியர்கள், கிராபிக் டிசைனர்கள், விஞ்ஞானிகள் என குழுவாக இணைந்து தான் இந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார்கள். சீனாவில் ரோபோ தயாரிப்பு குறித்த 2 மாத பயிற்சிக்கு பிறகு வீட்டிலேயே ஹியூமனாய்ட் ரோபோ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது இந்தக்குழு. கிட்டத்தட்ட 8 லட்சம் செலவில் மூன்று ரோபோக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக இந்த குழு தெரிவித்து இருக்கிறது. ஈகிள் 2.0 என பெயர்கொண்ட தற்போது பெண் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோ விரைவில் மற்ற பள்ளிகளுக்கும் வரலாம்.

ஆசிரியர் – ரோபோ – பயிற்றுவித்தல்

இந்த ரோபோக்கள் முழுமையாக ஆசிரியர்களுக்கு பதிலாக அல்லாமல் ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் நோக்கத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள். மிக முக்கியமான பாடங்களை எடுப்பது, மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்ற வேலைகளை ரோபோ செய்யும். 

 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் ரோபோக்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பயன்படுத்துவது ஆர்வத்தையும் ரோபோ ஆராய்ச்சியில் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular