Wednesday, December 11, 2024
HomeBiographyவேர்ட்பிரஸ் நிறுவனரான மேட் முல்லன்வெக்கின் வெற்றிக்கதை | Success story of Matt Mullenweg |...

வேர்ட்பிரஸ் நிறுவனரான மேட் முல்லன்வெக்கின் வெற்றிக்கதை | Success story of Matt Mullenweg | WordPress Founder | Tamil

வேர்ட்பிரஸ் நிறுவனரான மேட் முல்லன்வெக்கின் வெற்றிக்கதை

Matt Mullenweg

31% சதவிகித இணையதளங்கள் பயன்படுத்துகிற வேர்ட்பிரஸ் நிறுவனர் – மேட் முல்லன்வெக்



Click Here! Get Updates On WhatsApp

உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பெயர்களை கூறுங்கள் என்றால் பில்கேட்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ்மார்க் ஜூக்கர்பெர்க் எலன் மஸ்க் என்ற பெயர்களை தான் பெரும்பாலானவர்கள் வரிசை படுத்துவார்கள். ஆனால் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போகும் மனிதரும் இவர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாத அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான் தான்.பெருவாரியாக இவரைப்பற்றி பேசாமல் இருப்பதனால் நமக்கு இவரைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்படி என்ன செய்துவிட்டார் என கேட்கிறீர்களா? கிட்டத்தட்ட 31% [தற்போது அதிகமாக இருக்கலாம்] இணையதளங்கள் செயல்படும் வேர்ட்பிரஸ் இன் நிறுவனரான மேட் முல்லன்வெக் (Matt Mullenweg) தான் அந்த சாதனையாளர். அவரைப்பற்றித்தான் இந்த கட்டுரையில் பல விசயங்களை பார்க்க இருக்கிறோம்.

இளம் வயதிலேயே கணினி ஆர்வம்

Computer Mouse explained in tamil

மேட் முல்லன்வெக்கின் தந்தை சுக் முல்லன்வெக் ஒரு கணினி பொறியாளர். ஆகையினால் மேட் முல்லன்வெக்க்கிற்கு கணினியின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருந்தது. சுக் முல்லன்வெக் தனது மகனை அவ்வப்போது தனது அலுவலகத்திற்கு அழைத்து செல்லுவது உண்டு. அங்கு சென்று இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவார். அங்கு தான் “Open-source” என்ற வார்த்தை தனக்கு அறிமுகமானதாக தெரிவிக்கிறார் மேட்.

 

டெக்சாஸ் மாகாணத்தில் ஹௌஸ்டன் எனும் இடத்தில 1984 ஆம் ஆண்டு பிறந்தார் மேட். பின்னர் ஹௌஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் [Political Science] பிரிவில் சேர்ந்தார். ஆனால் பாதியிலேயே படிப்பை விட்ட மேட் வேலைக்கு சேர திட்டமிட்டார். பின்னர் கூகுள், யாஹூ உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் வேலைக்கு முயன்று இறுதியாக CNET Networks இல் பணிக்கு சேர்ந்தார்.

வேர்டுபிரஸ் உருவான விதம்

It is very easy to design website using wordpress
மேட் இளம் வயதிலேயே கணினி ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய இளமை பருவத்தில் மிகக்குறைவான அளவிலேயே இணையதளங்கள் இருந்தன. அப்போது தனது பேராசிரியர்களின் blog ஐ படிக்கும் வழக்கம் கொண்டிருந்த மேட் தனக்கென ஒரு blog ஐ உருவாக்க எண்ணினார். அதனை b2/cafelog இல் உருவாக்கினார். அது ஒரு Open Source project. அங்கு தனக்கென blog ஐ உருவாக்குவதோடு நின்றுவிடாமல் Code இல் சில மாறுதல்களையும் செய்து அதனை கற்று தேறுகிறார். அப்போது தான் இங்கிலாந்து நாட்டில் இருக்கும் மைக் லிட்டில் [Mike Little] எனும் இளைஞரின் அறிமுகம் ஆன்லைனில் கிடைக்கிறது. இருவரும் இணைந்து b2 தளத்தை மெருகேற்றுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய தளத்தினை உருவாக்க வேண்டும் என விரும்பினார்கள். அப்போதிலிருந்து வேர்ட்பிரஸ் உருவாகத்துவங்கியது.

மேட் இன் புது ஒப்பந்தம்

வேர்ட்பிரஸ் நிறுவனரான மேட் முல்லன்வெக்கின் வெற்றிக்கதை

தற்போது “Automattic” நிறுவனத்தை நடத்திவரும் மேட் பின்வரும் விதிமுறையை தனது நிறுவனத்தில் சேரும் பணியாட்களிடம் பெறுகின்ற ஒப்பந்தத்தில் இணைத்திருக்கிறார். பெரும்பாலான நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தில் இதுபோன்று செய்யலாம்.

 

“I will never stop learning. I won’t just work on things that are assigned to me. I know there’s no such thing as a status quo. I will build our business sustainably through passionate and loyal customers. I will never pass up an opportunity to help out a colleague, and I’ll remember the days before I knew everything. I am more motivated by impact than money, and I know that Open Source is one of the most powerful ideas of our generation. I will communicate as much as possible because it’s the oxygen of a distributed company. I am in a marathon, not a sprint, and no matter how far away the goal is, the only way to get there is by putting one foot in front of another every day. Given time, there is no problem that’s insurmountable.”

 

அதாவது, நான் கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். எனக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையோடு நான் நின்றுகொள்ள மாட்டேன். நமது கம்பெனியை உயர்த்த பாடுபடுவேன். சக பணியாளர்களுக்கு உதவி செய்திட வாய்ப்பு கிடைத்தால் அதனை தவற விட மாட்டேன். நான் எல்லாவற்றையும் அறிந்துகொள்வதற்கு முன்பிருந்த நாட்களை மறக்க மாட்டேன். ஓபன் சோர்ஸ் இந்த தலைமுறையின் வீரியம் மிக்க தொழில்நுட்பம் என்பதனை உணர்வேன். நான் மாரத்தான் போட்டியில் இருப்பதை உணர்கிறேன், நான் வெற்றியை பெறுவதற்கு முதல் அடியை இன்றும் அடுத்தடுத்த நாட்களில் அடுத்த அடிகளையும் எடுத்து வைப்பேன்.

 

இதிலிருந்தே மேட் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் உணர முடியும்.

மிகப்பெரிய சாதனையாளர்

மேட் முல்லன்வெக் மிக இளம் வயதிலேயே சாதனை புத்தகத்தில் இடம் பெற துவங்கி விட்டார் என்றே கூற வேண்டம். 2007 ஆம் ஆண்டு PC World வெளியிட்ட 50 முக்கிய நபர்களின் பட்டியலில் 16 ஆவது இடத்தை பிடித்தார். 2011 இல் Business Insider வெளியிட்ட “தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்கள்” பட்டியலில் 10 இல் ஒருவராக வந்தார். Inc.com வெளியிட்ட 30 வயதிற்கு உட்பட்ட 30 சாதனையாளர்கள் பட்டியல், Business Week இன் இன்டர்நெட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய 25 பேர் பட்டியல் போன்றவற்றிலும் இடம் பிடித்தார். எத்தனை பெரிய சாதனை படைத்த பின்னரும் அடக்கமானவராக அறியப்படுகிறார் மேட்.

 

இன்றளவும் பிற நிறுவனங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் மேட் க்கு WordPress ஐ பயன்படுத்தாத இணையதளங்களையும் அதற்குள் விரைவில் கொண்டுவரவேண்டும் என்பது தானாம்.

 

எதுவுமே எளிமையாக இருக்க வேண்டும் என விரும்பும் மேட் தான் தூக்கத்தில் இருந்து விழித்த முதல் ஒரு மணி நேரத்திற்கு ஈமெயில், மொபைல் என தொழில்நுட்பம் பக்கமே போவதில்லை என பின்பற்றி வருகிறாராம்.

 

நீங்கள் பின்தொடர்வதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்டவர்  மேட் முல்லன்வெக்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular