Sunday, November 24, 2024
HomeTech Articlesஜியோ வந்ததுக்கு அப்பறம் என்ன நடந்துருக்கு தெரியுமா? | After Jio came what happened

ஜியோ வந்ததுக்கு அப்பறம் என்ன நடந்துருக்கு தெரியுமா? | After Jio came what happened

ஜியோ வருகைக்கு பிறகு நடந்த மாற்றங்கள்

Jio Arrival

சராசரியாக ஒரு இந்தியர் 10 GB டேட்டாவினை ஒரு மாதத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.



Click Here! Get Updates On WhatsApp

திரு முகேஷ் அம்பானி அவர்களின் ஜியோ நிறுவனம் டெலிகாம் துறையில் நுழைந்த பிறகு மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா அடைந்து இருக்கிறது. போட்டியில் ஆரோக்கியமற்ற தன்மை என ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் குற்றசாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருந்தாலும் ஜியோ அதன் வேலையில் மும்முரமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜியோ பைபர் இன்டர்நெட் சேவையினை துவங்கி இருக்கிறது. செப்டம்பர் 5,2019 முதல் இந்தியாவின் முக்கிய 1600 நகரங்களில் இந்த சேவை முதல் கட்டமாக துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டணமாக ரூ 700 ம் அதிகபட்ச கட்டணமாக ரூ 10,000 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச லேண்ட் லைன், 100 mbps முதல் 1 gbps வேகம் , இலவச 4K LED TV என பல அம்சங்களுடன் காத்திருக்கிறது. 

ஜியோ வருகைக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு மிக அதிகமாகி இருக்கிறது. இதனைப்போன்று பல மாற்றங்கள் ஜியோ வருகைக்கு பிறகு [After jio came] நடந்திருக்கிறது. அவை என்னென்ன என்பதனைதான் சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.

டேட்டா விலை அதிரடி குறைப்பு

ஜியோ வருகைக்கு முன்பு 1 GB டேட்டா அதிகபட்சமாக 450 ரூபாய்க்கு கூட சில நெர்வோர்க்குகளால் விற்கப்பட்டன. அதேபோல அன்லிமிடெட் அழைப்பு அல்லது மெசேஜ் அனுப்புதல் என்பதும் இல்லை. ஆனால் ஜியோ அறிமுகமானபோது இலவசமாக டேட்டாவினை வாரி வழங்கியது, ஒரு நாளைக்கு 4 GB என்ற அளவிற்கும் அதற்க்கு பின்னர் 127kbps வேகத்திலும் வழங்கியது. இதுதவிர இலவச அழைப்புகள், இலவச மெசேஜ் என அதிரடி காட்டியது. இதற்கு பின்னர் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை பல மடங்கு குறைத்தன. அதுவரைக்கும் ஒரு மாதத்திற்கு 1 GB டேட்டா வழங்கிய நிறுவனங்கள் ஜியோ வருகைக்கு பிறகு அதே விலைக்கு ஒரு நாளைக்கு 1 GB டேட்டா, இலவச அழைப்புகள் வழங்கிட முன்வந்தன.

இணைய பயன்பாடு அதிகரிப்பு

ஜியோ வருகைக்குப் பிறகு இணைய கட்டணங்கள் குறைய ஆரம்பித்த பின்னர் மிகப்பெரிய அளவில் இணையப்பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது. ஆய்வுகளின்படி சராசரியாக ஒருவர் ஒரு மாதத்திற்கு 10 GB வரை டேட்டா பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஜியோ வந்த 6 மாதத்தில் 20 கோடி GB ஆக இருந்த இணைய பயன்பாடு பின்னர் 120 கோடி GB ஆக மாறியிருக்கிறது என ஜியோ தெரிவித்து இருந்தது. தற்போது இது மிகப்பெரிய அளவில் கூடியிருக்கும்.

வோடபோன் ஐடியா இணைவு

ஜியோ வருகையினால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுமே கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின. இதனால் பொருளாதார பிரச்சனையில் சிக்கித்தவித்தன. அதன் ஒரு பகுதியாக வோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில் ஜியோ

அண்மையில்  வெளியான தரவுகளின் அடிப்படையில் ஜியோ நிறுவனம் 30.6 கோடி பயனாளர்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முதலிடத்தில் வோடபோன் – ஐடியா நிறுவனம் 38.7 கோடி பயனாளர்களுடன் இருக்கிறது. மூன்றாவது இடத்திற்கு ஏர்டெல் தள்ளப்பட்டு இருக்கிறது (28.4 கோடி)

 

மத்திய அரசின் ஆதரவு பெற்று இருப்பதனால் முகேஷ் அம்பானி அவர்களின் ஜியோ நிறுவனம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோ வருகையினால் நாடு முழுமைக்கும் இணைய பயன்பாடு அதிகரித்திருக்கிறது மற்றும் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை கிடைத்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

 

[ஜியோ வை பற்றி பேசும் நேரத்தில் பொது நிறுவனமான BSNL குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை. மத்திய அரசாங்கம் BSNL நிறுவனத்தில் அக்கறை காட்டிட வேண்டும்.]

அசுர பயன்பாட்டில் சமூக வலைதளங்கள்

இந்தியாவில் சமூக வலைதளங்கள், facebook , twitter , youtube , instagram போன்றவவை மிக அதிக நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பதனால் தான்.

வளர்ச்சி அடைந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்

இணையதள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக பெரும்பாலானவர்கள் அறிந்திருக்காத டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. உதாரணத்திற்கு youtube பயன்பாட்டின் காரணமாக ஏராளமானவர்கள் இன்று youtube மூலமாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். இதேபோன்று பல்வேறு சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் அதிகமானவர்கள் சம்பாதிக்கிறார்கள். [youtube மூலமாக சம்பாதிப்பது எப்படி?]


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular