Thursday, November 21, 2024
HomeSuccess Storiesகேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர் | Success story of Cameron Johnson

கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர் | Success story of Cameron Johnson

நிராகரிப்பிற்கு பயப்படாதே; உனக்கு தேவையானதை கேட்பதற்கு பயப்படாதே, உலகிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்வது பண்பல்ல ; பகிர்ந்துகொள்வது தான் பண்பு இந்த இரண்டு ஆலோசனைகளும் 19 வயதிலேயே மில்லியன் டாலருக்கு சொந்தக்காரரான “கேமரான் ஜான்ஸன்” என்பவருடையது . பொதுவாக அனைவருமே பணக்காரர் ஆகவேண்டும் என்பதற்காகவே அன்றாடம் முயன்று வருகின்றோம் . அப்படி முயல்பவர்களுக்கு கேமரான் ஜான்ஸன் என்கிற இளம் பணக்காரரின் வாழ்க்கை அனுபவம் உந்து சக்தியாக இருக்குமென கருதியே இந்த பதிவினை இடுகின்றேன்.

தொடர்ச்சியாக பல தொழில்முனைவோர்கள் பற்றியும் தொழில்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறோம். தொடர்ந்து படியுங்கள், இளம் தொழில்முறைவோராக உருவாகிடுங்கள். Click Here

1994 , கேமரான் ஜான்சனுக்கு 9 வயது , தனது அப்பா , அம்மா சகோதரியுடன் விர்ஜினியாவில்  தங்கியிருக்கிறார் . அப்போது அம்மா அப்பாவின் விடுமுறை தின கொண்டாத்திற்காக தானே அழைப்பிதழ்களை தயாரிக்கிறார் ஜான்சன் . அவருடைய திறமை அக்கம்பக்கதில் இருப்பவர்களுக்கும் பரவுகின்றது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் அழைப்பிதழ்களை செய்யச்சொல்லி அணுகுகிறார்கள். தன்னுடைய 11 வது வயதில் greeting card விற்பனையின் மூலமாக சில ஆயிரம் டாலர்களை சேமிக்கிறார் . அந்த வயதில் அவருடைய நிறுவனத்திற்கு வைத்துக்கொண்ட பெயர் Cheers and Tears .

தன்னுடைய 12 ஆம் வயதில் தன்னுடைய சகோதரியிடம் இருக்கக்கூடிய 30 Ty Beanie Babies என அழைக்கப்படும் பொம்மைகளை 100 டாலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார் . அதனை எதற்கு சகோதரர் வாங்குகிறார் என்பது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாங்கிய வேகத்தில் அந்த பொம்மைகளை ebay இல் பத்து மடங்கு லாபத்திற்கு விற்கிறார் . அந்த பொம்மைகளுக்கு  மக்களிடம் காணப்பட்ட வரவேற்பை உணர்ந்த ஜான்ஸன் நேரடியாக பொம்மை நிறுவனத்திடம் இருந்து பொம்மைகளை வாங்கி ebay யிலும் தன்னுடைய Cheers and Tears இணையதளத்திலும் விற்க ஆரம்பித்தார்.

இந்த விற்பனை சூடுபிடிக்க ஓராண்டிற்கு உள்ளாகவே 50 ஆயிரம் டாலருக்கு சொந்தக்காரர் ஆகிறார்  ஜான்சன் . அதுவரை பொம்மைகளை விற்பனை செய்துவந்த ஜான்சனின் பார்வை இணையதளம் பக்கமாக சாய்ந்தது. ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை பணிக்கு அமர்த்தினார் , அவருக்கு சம்பளம் கொடுத்து My EZ Mail என்கிற ப்ரோக்ராமை  உருவாக்கினார் . இதன் மூலமாக அனுப்புபவர் பெறுபவர் இவர்களின் தகவல்களை கண்காணிக்காமல் தகவல்களை சேமிக்காமல் மெயில் அனுப்பிட முடியும் . இதுவும் வரவேற்ப்பினை பெற மாதந்தோரும் 3000 டாலர் வருமானம் கிடைத்தது . இந்த வருமானம் விளம்பரங்களின் மூலமாக கிடைத்தது .

செய்தவை அனைத்திலும் வெற்றி கண்டு லாபம் கிடைத்தாலும் கேமரான் ஜான்சன் தன்னுடைய முயற்சியை , புதிய விசயங்களில் முதலீடு செய்வதை நிறுத்தவேயில்லை .

கேமரான் ஜான்ஸன்

1997 ஆம் ஆண்டு தன்னைப்போன்ற இரண்டு நண்பர்களுடன் இணைந்து Surfingprizes.com என்ற ஆன்லைன் விளம்பர கம்பெனியை ஆரம்பித்தார்கள் . அந்த நிறுவனத்தின் software ஐ டவுன்லோடு செய்தால் மணிக்கு உங்களுக்கு 20 cents அளிக்கப்படும் என அறிவித்தார்கள் . அவர்களினுடைய software ஐ டவுன்லோடு செய்தால் நமது கணிணி திரையில் விளம்பரங்கள் காட்டப்படும் . அந்த இடையூருக்காக தான் 20 cents. மேலும் இந்த software ஐ refer செய்பவர்களுக்கு டவுன்லோடு செய்பவரின் வருமானத்தில் 10 சதவிகிதம் கொடுக்கப்படும் .

மறுபக்கம் இவர்கள் Double click , L90 , advertising.com போன்றவற்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் .இடைப்பட்ட நபராக விளம்பரங்களின் மூலமாக 30 சதவிகித தொகையினை இவர்கள் பெற்றனர் .

19 ஆம் வயதில் சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர்

கேமரான் ஜான்சன் தன்னுடைய 19 ஆம் வயதில் தன்னுடைய கம்பெனி மற்றும் software ஐ விற்பனை செய்தார் . அப்போது அவருடைய சொத்து மதிப்பு 1 மில்லியன் டாலர் . 24 வயதில், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் அதற்கான வகுப்புகளை நடத்துவதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார் [https://www.cameronjohnson.com/].

அவருடைய ஆலோசனை இதுதான் ,

நிராகரிப்பிற்கு பயப்படாதே

கேட்பதற்கு பயப்படாதே

என்னுடைய பார்வையில் கேமரான் ஜான்சன் அவர்களினுடைய வெற்றிக்கு காரணம் , எதிலும் திருப்தி அடைந்துவிடாமல் சொகுசாக நினைத்து அதையே செய்துகொண்டு இருந்துவிடாமல் புதிய புதிய உக்திகளை கையாண்டதே. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக உயர்ந்த பலரும் தங்களது இளம் வயதிலேயே ஏதோ ஒரு விதத்தில் பிசினஸ் செய்யத்துவங்கிவிட்டனர். அவர்கள் இளம் வயதிலேயே பணத்தை கையாள கற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்கும் வித்தையை கண்டுகொண்டுவிட்டார்கள்.

இன்னும் பல கட்டுரைகள் இங்கே இருக்கின்றன கிளிக் செய்து படியுங்கள்

TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular